TET - ஆசிரியர்கள் பணி நீக்க வழக்கு: விசாரணைக்கு ஐகோர்ட் அனுமதி! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, May 10, 2019

TET - ஆசிரியர்கள் பணி நீக்க வழக்கு: விசாரணைக்கு ஐகோர்ட் அனுமதி!

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Facebook🌍Page👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here WhatsApp Groupல் உடனுக்குடன் செய்திகளை பெற Add 9123576459
ஆசிரியர் தகுதி தேர்வு முடிக்காதவர்கள் பணியில் நீடிக்கக் கூடாது என்ற உத்தரவுக்கு எதிராக, தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை சென்னை உயர்நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றது.
சென்னை உயர் நீதிமன்ற தனி நீதிபதி கடந்த வாரம் பிறப்பித்த உத்தரவை ராஜ்குமார் உள்ளிட்ட ஆசிரியர்கள் மேல்முறையீடு செய்துள்ளனர். தகுதி தேர்வு அறிமுகப்படுத்திய ஒன்பது ஆண்டுகளில், இதுவரை மொத்தம் மூன்று முறை தான் தகுதி தேர்வு நடத்தப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் மட்டும் தான் ஆசிரியர் தகுதி தேர்வு தொடர்பாக தெளிவான அரசாணை பிறப்பிக்கப்படவில்லை என மனுதாரர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். தேசிய தகுதி தேர்வை அடிப்படையாக கொண்டு தனி நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளதாகவும், தமிழக ஆசிரியர்கள், தேசிய தகுதி தேர்வை எழுத முடியாது எனவும் மனுவில் சுட்டிக்காட்டியுள்ளனர். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் வைத்தியநாதன், சுப்ரமணியம் பிரசாத் அமர்வு, ஆசிரியர்களின் மேல்முறையீட்டு மனுவை ஏற்றுக் கொண்டு, விசாரணையை அடுத்த வாரத்துக்கு தள்ளிவைத்தனர்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews