பல லட்சம் மதிப்புள்ள புத்தகங்கள்; கணவர் மறைவால் காரல் மார்க்ஸ் படிப்பகத்துக்கு இலவசமாகத் தந்த அவரது மனைவி - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, May 07, 2019

பல லட்சம் மதிப்புள்ள புத்தகங்கள்; கணவர் மறைவால் காரல் மார்க்ஸ் படிப்பகத்துக்கு இலவசமாகத் தந்த அவரது மனைவி

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Facebook🌍Page👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here WhatsApp Groupல் உடனுக்குடன் செய்திகளை பெற Add 9123576459
பல லட்சம் மதிப்புள்ள கணவரின் புத்தகங்களை அவரது மறைவால் காரல் மார்க்ஸ் படிப்பகத்துக்கு இலவசமாக அவரது மனைவி தந்துள்ளார். புதுச்சேரி பாக்கமுடையான்பட்டில் காரல் மார்க்ஸ் படிப்பகம் கடந்த 36 ஆண்டு காலமாக உள்ளது. இந்தப் படிப்பகத்தில் உள்ள நூல்களை மாணவர்களும், பொதுமக்களும் படித்துப் பயன்பெற்று வந்துள்ளார்கள்.
இந்த நிலையில் படிப்பகம் பழுதடைந்து புத்தகங்கள் வாசிக்க முடியாத நிலை ஏற்பட்டது. இதனைப் புதுப்பித்து கடந்த 12.05.2017 அன்று முதல் காரல் மார்க்ஸ் படிப்பகம் மீண்டும் செயல்பட்டு வருகிறது. இருந்த போதும் நூலகத்தில் புத்தகங்கள் குறைந்த அளவே இருந்து வந்தன. இந்நிலையில் மார்க்ஸின் 201-வது பிறந்தநாள் விழா பாக்கமுடையான்பட்டு கார்ல் மார்க்ஸ் படிப்பகத்தில் நடைபெற்றது. படத்திற்கு மாலை அணிவித்து வீர வணக்கம் செலுத்தப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு ஏஐடியுசி மாநில பொதுச்செயலாளர் சேது செல்வம் தலைமை வகித்தார். ஏஐடியுசி மாநிலத் துணைத் தலைவர் முருகன் முன்னிலை வகித்தார். இந்நிகழ்வில் சுங்க இலாகாவில் உயர் அதிகாரியான ஷீலா தனது மறைந்த கணவர் எழுத்தாளர் ராஜசேகர் எழுதிய, வாசித்த பல லட்சம் மதிப்புள்ள புத்தகங்களை காரல் மார்க்ஸ் படிப்பகத்துக்கு இலவசமாக வழங்கினார்.
இதுதொடர்பாக சேது செல்வம் கூறுகையில், "எழுத்தாளர் ராஜசேகர், தமிழக அரசு கூட்டுறவுத்துறையில் இணைப் பதிவாளராகப் பணியாற்றினார். இலக்கிய ஆர்வமுள்ள இவர் 20 நூல்கள் வரை எழுதியுள்ளார். அத்துடன் தேர்ந்த வாசகர். பல அரிய நூல்களை சேகரித்து வைத்துள்ளார். சில மாதங்கள் முன்பு சாலை விபத்தில் மறைந்தார். அவரது மறைவுக்குப் பிறகு பல லட்சம் மதிப்புள்ள புத்தகங்களை வாடகைக்கு வீடு எடுத்து வைத்துப் பாதுகாத்து வந்தார் அவரது மனைவி ஷீலா. தற்போது அந்த நூல்களை நூலகத்துக்கு இலவசமாகத் தந்துள்ளார்" என்று குறிப்பிட்டார். இந்நிகழ்வில் ஷீலா பேசுகையில், "சரியான இடத்தில் புத்தகங்களை ஒப்படைத்த மன திருப்தி அடைந்துள்ளேன். என் கணவரின் ஆன்மா மகிழம்" என்று நெகிழ்வுடன் குறிப்பிட்டார்
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews