திருமணம் முடிந்த அடுத்த நிமிடமே..ஜனநாயக கடமையை ஆற்றிய தம்பதி - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, April 18, 2019

திருமணம் முடிந்த அடுத்த நிமிடமே..ஜனநாயக கடமையை ஆற்றிய தம்பதி

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Facebook🌍Page👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here WhatsApp Groupல் உடனுக்குடன் செய்திகளை பெற Add 9123576459
கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோயிலில் மணக்கோலத்தில் வந்த தம்பதிகள். தங்களது ஜனநாயக கடமையை ஆற்றினர். வீராணநல்லூர் கிராமத்தைச் சேர்ந்த மஞ்சு, விக்னேஸ்வரனுக்கு திருமணம் நடைபெற்றது. திருமணம் முடிந்த அடுத்த நிமிடமே மணமக்கள் இருவரும் தங்களது ஜனநாயக கடமையை ஆற்றுவதற்காக வாக்குச்சாவடிக்கு வந்து வாக்களித்தனர்.
வளைகாப்பு முடிந்த கையோடு வாக்களித்த கர்ப்பிணி கர்நாடகாவில் பெண் ஒருவர் வளைகாப்பு முடிந்த கையோடு, வாக்களிக்க வந்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகாவின், மங்களூரு பகுதியைச் சேர்ந்தவர், காவ்யா. நிறைமாத கர்ப்பிணியான காவ்யாவிற்கு இன்று வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிலையில் தனது ஜனநாயக கடமையை நிறைவேற்ற எண்ணிய காவ்யா, கை நிறைய வளையல்கள், பட்டு சேலை என வளைகாப்பு முடிந்த கையோடு வாக்கு செலுத்த வந்துள்ளார். அவரை கண்டு, சக வாக்காளர்கள் நெகிழ்ச்சி அடைந்தனர். மணக்கோலத்தில் வந்து வாக்களித்த மணமகன் நெல்லை மாவட்டம் வள்ளியூரில் இன்று திருமணம் செய்து கொண்ட மணமகன் முத்துராம், மணக்கோலத்தில் தனது வாக்கை செலுத்தினார். நெல்லை மாவட்டம் வள்ளியூரில் இன்று திருமணம் செய்து கொண்ட மணமகன் முத்துராம், மணக்கோலத்தில் தனது வாக்கை செலுத்தினார். வள்ளியூரை சேர்ந்த முத்துராமிற்கும், களக்காட்டை சேர்ந்த சுப்பு லட்சுமிக்கும் வள்ளியூரில் இன்று திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்காக பெண்ணை அழைத்து வரும்போதே மணமகள் சுப்புலட்சுமி தனது வாக்கை களக்காட்டில் உள்ள வாக்குசாவடியில் பதிவு செய்து விட்டு வந்துள்ளார். மணமகன் முத்துராம் வள்ளியூர் முருகன் கோயிலில் திருமணத்தை முடித்துவிட்டு, மணக்கோலத்தில் மணமகளுடன் வள்ளியூர் இரட்சன்ய சேனை பள்ளியில் உள்ள வாக்குசாவடியில் வரிசையில் நின்று வாக்களித்தார்
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews