👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
WhatsApp Groupல் உடனுக்குடன் செய்திகளை பெற Add 9123576459
முதல்வர் வாங்கிய வாழைப்பழத்துக்குப் பணம் கொடுத்தார் ஆகவே விதிமீறல் இல்லை என தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் சத்யபிரதா சாஹு கூறுகையில், ''வாக்குச்சாவடிக்கு எந்திரங்கள் தமிழகம் முழுவதும் உள்ள 67,000 வாக்குச்சாவடிகளுக்கு இன்று மாலைக்குள் அனுப்பப்படும். அவ்வாறு அனுப்பப்படும் வாக்குப்பதிவு எந்திரங்களைக் கொண்டுசெல்லும் வாகனங்களில் ஜிபிஎஸ் கருவி பொருத்தப்பட்டுள்ளதால் அது எங்கு போகிறது என்பதை நாங்கள் கண்காணிப்போம்.
நாளை பதற்றமான 8,200 வாக்குச்சாவடிகளில் அங்கு பலத்த பாதுகாப்பு அளிக்கப்படும். அங்கு மத்திய துணை ராணுவப்படை, மைக்ரோ அப்சர்வர் கண்காணிப்பு உள்ளிட்டவை அமல்படுத்தப்படும்'' என்றார்.
தொடர்ந்து செய்தியாளர்களின் கேள்விகளுக்கு சத்யபிரதா சாஹு பதில் அளித்தார்.
தேர்தல் விதிமீறல் பிரச்சினை வந்தால் என்ன நடவடிக்கை?
எந்தப் பிரச்சினை என்றாலும் 1950 என்ற எண்ணுக்கு புகார் அளிக்கலாம். புகார்களைப் பெற 24 மணி நேரம் இயங்கும் எண் அது. அதில் அளிக்கும் புகார்கள் ரெக்கார்டு ஆகும். உடனடியாக அதன்மீது நடவடிக்கை எடுப்பார்கள்.
இதுதவிர சிஆர்பிஎப் 160 கம்பெனி வந்துள்ளது. ஒரு லட்சம் போலீஸார் மற்றும், ஓய்வுபெற்ற ராணுவத்தினர், போலீஸார், என் எஸ் எஸ் ஆர்வலர்கள் உதவிக்கு உள்ளனர். வாக்குச்சாவடி அதிகாரிகள் 30 ஆயிரம்பேர் பணியில் இருப்பார்கள்.
காலை ஆறு மணிக்கு மாதிரி வாக்குப் பதிவு அரசியல் கட்சிகளின் ஏஜெண்டுகள் முன்னிலையில் நடக்கும். அதில் எந்திரங்கள் சரியாக இயங்குகிறதா? என்பதை சரிபார்த்த பின் 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கும். மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும்.
ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கு ஒருமுறை வாக்குப்பதிவு, சட்டம் ஒழுங்கு குறித்த அறிக்கை பெற்று டெல்லி ஆணையத்துக்கும் அனுப்பப்படும்.
தேர்தல் ஆணையம் பாரபட்சமாக செயல்படுவதாக புகார் வருகிறதே?
நாங்கள் இதுவரை 4,400 புகார்கள் பெற்று வழக்குப்பதிவு செய்துள்ளோம். சிறிய புகாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
யார் மீது எவ்வளவு எப்.ஐ.ஆர் என்று கூறியுள்ளோம். வேலூர் போன்ற முக்கியமான பிரச்சினைகளில் வருமான வரித்துறை அறிக்கை, செலவீனப் பார்வையாளர்கள், தேர்தல் பார்வையாளர்கள் ரிப்போர்ட் அடிப்படையில்தான் நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
சபேசன், பிஎஸ்.கன்ஸ்ட்ரக்ஷன் மீது ரெய்டு நடத்தி எடுக்கப்பட்ட கோடிக்கணக்கான பணம் குறித்த நடவடிக்கை என்ன?
அதற்கான அறிக்கை வந்துள்ளது. நடவடிக்கை எடுக்கப்படும்.
144 அமல்படுத்த என்ன வழிமுறை உள்ளது?
பாதுகாப்பு குறித்த தகவல்களைப் பெற்று எங்கெங்கு தேவைப்படுமோ அங்கு அமல்படுத்தப்படும்.
ஆண்டிப்பட்டியில் பணம் கைப்பற்றப்பட்டது என்ன நடவடிக்கை?
வருமான வரித்துறையினர் ரெய்டு நடத்தி பணம் கைப்பற்றியுள்ளனர். முதல் அறிக்கை அனுப்பியுள்ளனர். அடுத்து வரும் அறிக்கையைப் பொறுத்து நடவடிக்கை எடுக்கப்படும்.
ஆண்டிப்பட்டியில் துப்பாக்கிச்சூடு நடத்த உத்தரவிட்டது யார்?
அது சாதாரணமாக வெட்டவெளி நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. துப்பாக்கிச் சூடு குறித்து காவல்துறையில் என்ன நடைமுறை உள்ளதோ அதன்படி எடுத்திருப்பார்கள். மாவட்ட எஸ்.பி.யும் அங்கு இருந்தார்.
திருவல்லிக்கேணியில் அனிதா டவர் என்கிற கட்டிடத்தில் அதிமுகவினர் பணம் கொடுப்பதாக திமுகவினர் புகார் அளித்தும் போன் எடுக்கவில்லை, தொடர்ந்து போன் செய்தபோது போனை ஸ்விட்ச் ஆஃப் செய்துவிட்டார்கள்?
நீங்கள் சொன்ன தகவலை வைத்து நான் என்னவென்று விசாரிக்கிறேன். இதற்கு முன் வந்தபுகார்களில் நடவடிக்கை எடுத்துள்ளேன். அதேபோன்று இதுவும் இருக்கும்.
ஆண்டிப்பட்டியில் அந்தக் கட்டிடம் அதிமுக நபருக்கு சொந்தமானது. தங்க தமிழ்ச் செல்வன் என்று நீங்கள் சொல்கிறீர்களே?
நான் மாவட்ட ஆட்சியர் அறிக்கைக்காக காத்திருக்கிறேன். வருமான வரித்துறை அறிக்கைக்காகவும் காத்திருக்கிறேன். எந்த தனிநபர் குறித்த புகாருக்கும் நடவடிக்கை எடுக்கப்படும்.
கனிமொழி வீட்டில் சோதனைக்காக வருமான வரித்துறை சென்று ஒன்றையும் கைப்பற்றவில்லை, ஒரு நபர் சொன்னார் என்பதற்காக ரெய்டு சரியா? மறுபுறம் ஆளுங்கட்சியினர் இடங்களில் நடப்பதில்லையே?
தேர்தல் ஆணையம் முறையாகச் செயல்படுகிறது. நடுநிலையோடு செயல்படுகிறோம். சமீபத்தில்கூட எம்.எல்.ஏ ஹாஸ்டலில் சோதனை நடத்தினோம்.
வேலூரில் அடுத்தகட்டத் தேர்தல் இந்த தேர்தல் நடைமுறைக்குள் நடக்க வாய்ப்புள்ளதா?
அதை நான் சொல்ல முடியாது. நேற்றுதான் ரத்து செய்து அறிவித்துள்ளார்கள். தேர்தல் ஆணையம்தான் முடிவு செய்யும்.
முதல்வர் பணம் கொடுத்த விவகாரத்தில் என்ன நடவடிக்கை எடுத்துள்ளீர்கள்?
அதுகுறித்து சேலம் மாவட்ட தேர்தல் அதிகாரி அறிக்கை கொடுத்துள்ளார். முதல்வர் வாங்கிய வாழைப்பழத்துக்குப் பணம் கொடுத்துள்ளார் ஆகவே அதில் தவறு இல்லை என்று தெரிவித்துள்ளார்.
முதல்வர் வாங்கிய பொருளுக்கு எவ்வளவு பணம் கொடுத்துள்ளார்?
அதுபற்றிய தகவல் இல்லை.
இந்தத் தேர்தலில் வாக்காளர்களுக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?
இளம் வாக்காளர்கள் முதல்முறை வாக்களிக்கும் வாக்காளர்கள் 12 லட்சத்துக்கு மேல் உள்ளனர். இது இதுவரை இல்லாத ஒன்று. அதேபோன்று மாற்றுத்திறனாளிகள் 4 லட்சம் பேர் வாக்களிக்க உள்ளனர். அனைவரும் வாக்களிக்க வேண்டும். வெயில் சிரமம் இருந்தாலும் வாக்களிக்க வேண்டும்.
தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ள 12 ஆவணங்களை வைத்து வாக்களிக்கலாம். ஆகவே வாக்களிக்க வேண்டும் என்பதே கோரிக்கை.
இவ்வாறு சத்யபிரதா சாஹு தெரிவித்தார்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U