முதுநிலை மருத்துவ படிப்புக்கான கலந்தாய்வு தேதி மாற்றம் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, April 19, 2019

முதுநிலை மருத்துவ படிப்புக்கான கலந்தாய்வு தேதி மாற்றம்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Facebook🌍Page👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here WhatsApp Groupல் உடனுக்குடன் செய்திகளை பெற Add 9123576459
வங்கிகளுக்புகு தொடர் விடுமுறை காரணமாக, 2ம் கட்ட முதுநிலை மருத்துவ படிப்புக்கான கலந்தாய்வு தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து சென்டாக் கன்வீனர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: வங்கிகளுக்கு தொடர் விடுமுறை காரணமாக, முதுநிலை மருத்துவ படிப்புக்கு, வரும் 22ம் தேதி நடக்க இருந்த அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கான நேரடி கலந்தாய்வு 24ம் தேதி காலை 10:00 மணிக்கும், 22ம் தேதி சிறுபான்மையினர் பிரிவு இடங்களுக்கான நேரடி கலந்தாய்வு, 24ம் தேதி மதியம் 2:00 மணிக்கும் மாற்றப்பட்டுள்ளது.
நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கான ஆன்லைன் கலந்தாய்வு, 26ம் தேதி மாலை 5:00 மணிக்கு நடக்கிறது. முதுநிலை மருத்துவ படிப்பில் உள்ள இடங்கள் குறித்த விவரங்களை www.centacpuducherry.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். சென்டாக் இணையத்தளத்தில் ஏற்கனவே பதிவு செய்த மாணவர்கள் மட்டும் 2ம் கட்ட கலந்தாய்வில் பங்கேற்க முடியும்.
சுகாதாரத்துறை உத்தரவுப்படி, நிர்வாக ஒதுக்கீட்டில் நிரம்பாத சிறுபான்மையினர் பிரிவினருக்கான இடங்கள் 2ம் கட்ட கலந்தாய்வுக்கு பிறகு நிர்வாக ஒதுக்கீட்டின் கீழ் மாற்றப்பட்டு கலந்தாய்வு மூலம் நிரப்பப்படும்.இவ்வாறு நிர்வாக ஒதுக்கீட்டின் கீழ் மாற்றப்பட்ட இடங்கள் குறித்த விவரம் 24ம் தேதி மாலை 4:00 மணிக்கு சென்டாக் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும். நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களை தேர்வு செய்யும் மாணவர்கள் பதிவு கட்டணமாக 2 லட்சம் ரூபாயை, 25ம் தேதிக்குள் செலுத்த வேண்டும். அதேபோல் தங்களது விருப்பத்தையும் 25ம் தேதிக்குள் பதிவு செய்யலாம்.இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews