தேனி இணையதள ஆசிரியருக்கு பொள்ளாச்சி விவகாரத்தில் தொடர்பா?! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, March 29, 2019

தேனி இணையதள ஆசிரியருக்கு பொள்ளாச்சி விவகாரத்தில் தொடர்பா?!

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Share This News To Ur Groups& Add 9123576459
பொள்ளாச்சி விவகாரம் குறித்து கோவை சி.பி.சி.ஐ.டி., போலீசார் தேனியை சேர்ந்த இணையதள செய்தி ஆசிரியரிடம், இரண்டரை மணி நேரம் விசாரணை நடத்தி, அவருடன் தொடர்பில் உள்ள கட்சி பிரமுகர்களின் விபரங்களையும் சேகரித்துள்ளனர்.நேற்று முன்தினம் இணையத்தில், பொள்ளாச்சி கும்பலால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட ஒரு சிறுமி உயிரிழந்ததாகவும், சிறுமியின் சடலம், திருநாவுக்கரசின் பண்ணை வீட்டில் புதைக்கப்பட்டிருப்பதாக பெண் ஒருவர் பேசும் வீடியோ வைரலாக பரவி தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.தேனி பாரஸ்ட் ரோட்டை சேர்ந்த, ஒரு இணையத்தள இதழின் செய்தி ஆசிரியராகவும், ஆட்டோ டிரைவராகவும் இருக்கும் கண்ணன் என்பவருக்கு கோவை சி.பி.சி.ஐ.டி., போலீசார் விசாரணைக்கு வரும்படி கடந்த வாரத்தில் வீட்டிற்கே சென்று சம்மன் அளித்தனர். சி.பி.சி.ஐ.டி., சம்மனில், மார்ச் 27 ல் கோவை அலுவலகத்தில் ஆஜராகும்படி உத்தரவிடப்பட்டு இருந்தது'.
இதனால் கண்ணன் நேற்று கோவை சி.பி.சி.ஐ.டி., போலீசார் அலுவலகத்தில் ஆஜராகிவிட்டு, தேனி திரும்பியுள்ளார்.இணையத்தளத்தில் பொள்ளாச்சி சம்பவம் குறித்த வீடியோக்களை கண்ணன் ஒளிபரப்பு செய்ததை, சைபர் கிரைம் போலீசார் இணைய ஐ.பி., எண் மூலம் கண்டறிந்தனர். இந்த விபரங்கள் சி.பி.சி.ஐ.டி., போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது.சி.பி.சி.ஐ.டி., போலீசார் கூறுகையில், தேனி கண்ணன் நடத்தும் வெப் நியூஸ் இணையத்திற்கு பண உதவி செய்துவரும் அரசியல் பிரமுகர்கள், தொழில் அதிபர்கள் குறித்து விபரங்கள் பெற்றுள்ளோம். மேல் விசாரணை முடிந்த பிறகு ஆவணங்களின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும். அவருக்கும் குற்றச்சம்பவத்திற்கும் தொடர்பு இல்லை என்றால் நடவடிக்கை இருக்காது'', என்றனர்.
Use Only Chrome Browser To Read The News& Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank u
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 9123576459 இந்த எண்ணை இணைக்கவும்

Total Pageviews