9-ம் வகுப்பு புத்தகத்திலிருந்து நீக்கப்பட்ட சாதிய கொடுமைகளுக்கு எதிரான போராட்ட வரலாறு! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, March 20, 2019

9-ம் வகுப்பு புத்தகத்திலிருந்து நீக்கப்பட்ட சாதிய கொடுமைகளுக்கு எதிரான போராட்ட வரலாறு!

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Share This News To Ur Groups& Add 9123576459
மாணவர்களின் கல்விச் சுமையை குறைப்பதாகக் கூறி சுதந்திரப் போராட்ட தலைவர்களின் வரலாறு உள்பட சர்ச்சைக்குரிய சில விஷயங்களை பாடத்திட்டத்தில் இருந்து அண்மைக் காலமாக என்சிஇஆர்டி நீக்கி வருகிறது. மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் முன்னெடுத்துள்ள பாடத்திட்டங்களை மறுசீரமைப்பு திட்டத்தின் கீழ், 9-ம் வகுப்பு மாணவர்களுக்கு வழங்கப்பட்ட வரலாறு பாடப்புத்தகத்தில் இடம்பெற்றுள்ள ஆடைக் காரணமாக நடத்தப்பட்ட சாதியக் குற்றங்கள் குறித்த பாடப் பகுதிகளையும் சேர்த்து 3 பாடப் பகுதிகளை நீக்கியுள்ளனர்.
முலைக்கு வரி விதித்ததால், தனது மார்பகங்களை அறுத்து இதோ வரி எடுத்துக்கொள்ளுங்கள் என முலை வரிக்கு எதிராக தோள் சீலைப் போராட்டம் துவங்க காரணமாக இருந்த திருவிதாங்கூரைச் சேர்ந்த நாங்கிலியின் கதை உட்பட நாடார்கள் நடத்திய ஆடை புரட்சிகள் கொண்ட வரலாறும் சேர்த்து நீக்கப்பட்டுள்ளன. கிரிக்கெட் வரலாறு, விவசாயிகள் குறித்த பாடப் பிரிவுகளுடன் சேர்த்து இந்த ஆடைக்காக நடத்தப்பட்ட சாதிய போராட்டங்கள் குறித்த பாடப் பிரிவும் நீக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், இந்த மூன்று பகுதிகள் நீக்கப்பட்டது தொடர்பாக விளக்கமளித்துள்ள என்சிஇஆர்டி, சுமார் ஒரு லட்சம் பெற்றோர்கள் மற்றும் மாணவர்களிடம் இருந்து பெறப்பட்ட கருத்தின் அடிப்படையிலேயே இந்தப் பாடத்திட்டங்களை நீக்கியுள்ளதாக கூறியுள்ளது.
மேலே நீங்கள் படித்த செய்திக்கு உங்களின் Reactionஐ கீழே Click செய்தபின் WhatsAppல் Share செய்யவும் - நன்றி.
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 9123576459 இந்த எண்ணை இணைக்கவும்

Total Pageviews