முன்னாள் இந்திய குடியரசு தலைவர் அப்துல் கலாம் அவர்களின் நினைவாக அறிவியலில் பிஎச்.டி., படிக்க விரும்பும் இந்திய மாணவர்களுக்காக அமெரிக்க பல்கலை வழங்கும் உதவித்தொகை திட்டம் இது.
பிரசிடென்ட் அப்துல் கலாம் போஸ்ட் கிராட்ஜூவேட் பெலோஷிப்
அமெரிக்காவில் உள்ள ‘யுனிவர்சிட்டி ஆப் சவுத் புளோரிடா’ (யு.சி.எப்.,), அப்துல் கலாமின் நினைவாக இந்தியாவில் அறிவியலில் உயர்நிலை ஆராய்ச்சி படிப்பை பயில விரும்பும் மாணவர்களை ஊக்குவிக்கும் முயற்சியாக உதவித்தொகையுடன் கூடிய இலவச பட்டப்படிப்பை வழங்கி வருகிறது. இந்திய மாணவர்களுக்காக பிரத்யேகமாக வழங்கப்படும் உதவித்தொகை திட்டம் இது என்பதும் குறிப்பிடத்தக்கது.
பிரிவுகள்:
அப்ளைட் ஆந்த்ரபாலஜி
அப்ளைட் பிசிக்ஸ்
பிஸ்னஸ் பிஎச்.டி., புரோகிராம்ஸ்
செல் பயாலஜி, மைக்ரோபயாலஜி அண்ட் மாலிக்குளார் பயாலஜி
கெமிஸ்ட்ரி
கம்பியூட்டர் சயின்ஸ் அண்ட் இன்ஜினியரிங்
இன்ஜினியரிங்
கிரிமினாலஜி
இண்டக்ரேடிவ் பயாலஜி
மரைன் பயாலஜி
சைக்காலஜி
தகுதிகள்:
இந்திய கல்வி நிறுவனத்தில் முதுநிலை பட்டப்படிப்பை முடித்தவராக இருக்க வேண்டும். யு.சி.எப்., கல்வி நிறுவனத்தில் உயர்நிலை பட்டப்படிப்பிற்கு விண்ணப்பித்திருக்க வேண்டியதும் அவசியம்.
உதவித்தொகைகள்:
4 வருடக் கல்வி கட்டணத்தில் இருந்து முழு விலக்கு அளிக்கப்படும். மாணவர்களுக்குக் கல்விக்கான உதவித்தொகையாக 22,000 அமெரிக்க டாலர்கள் மூன்று தவணைகளாக வழங்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை:
பல்கலைக்கழகத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் இருந்து இதற்கான விண்ணப்பத்தை மாணவர்கள் பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும். பின்னர் பூர்த்தி செய்த விண்ணப்பத்தை ஸ்கான் செய்து ‘பி.டி.எப்’ ஆவணமாக கொடுக்கப்பட்டுள்ள பல்கலைக்கழக மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
விபரங்களுக்கு:
www.usf.edu
மேலே நீங்கள் படித்த செய்திக்கு உங்களின் Reactionஐ கீழே Click செய்தபின் WhatsAppல் Share செய்யவும் - நன்றி.
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 9123576459 இந்த எண்ணை இணைக்கவும்