டெல்லி தேசிய சட்டப் பல்கலையில் மாணவர் சேர்க்கை - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, February 19, 2019

டெல்லி தேசிய சட்டப் பல்கலையில் மாணவர் சேர்க்கை

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Share This News To Ur Groups& Add 9123576459
டெல்லியில் உள்ள தேசிய சட்டப் பல்கலைக்கழகம், மாணவர் சேர்க்கைக்காக AILET (All India Law Entrance Test) என்ற நுழைவுத் தேர்வை நடத்துகிறது. அத்தேர்வுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் பல்கலைக்கழகத்தில் B.A., LL.B (honors) என்ற 5 ஆண்டு சட்டப்படிப்பு வழங்கப்படுகிறது. அது தவிர, அங்கு LL.M என்ற 1 வருட முதுகலைப் படிப்பும், Ph.D படிப்பும் வழங்கப்படுகிறது. இப்பட்டப்படிப்புகளில் சேர்வதற்கான கல்வித்தகுதி விண்ணப்பிக்கும் முறை, நுழைவுத்தேர்வு பற்றிய விவரங்களை இனி பார்ப்போம்… B.A.L.L.B (Hons) சேர கல்வித்தகுதி இந்த 5 ஆண்டு படிப்பிற்கு விண்ணப்பிக்க, பன்னிரண்டாம் வகுப்பில் ஏதேனும் ஒரு பாடப்பிரிவை எடுத்து குறைந்தது 50 விழுக்காடு மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். எதிர்வரும் ஆண்டு தேர்வு எழுதவிருப்போரும் இதற்கு விண்ணப்பிக்கலாம். இந்தப் படிப்பிற்கு மொத்தம் 80 இடங்கள் உண்டு. இதில் 70 இடங்கள் நுழைவுத்தேர்வு வழியாக நிரப்பப்படும்.
10 இடங்களில், 5 இடங்கள் நேரடியாக அயல்நாட்டினருக்கும், 5 இடங்கள் ஓவர்சீஸ் இந்தியர்களுக்காக நேரடியாகத் தரப்படும். அயல்நாடு மாணவர்கள் தகுதித் தேர்வில் குறைந்தது 65 விழுக்காடு பெற்றிருக்க வேண்டும். இந்த இடங்களில் 15 விழுக்காடு ஆதிதிராவிடர்களுக்கும், 7.5 விழுக்காடு பழங்குடியினர்களுக்கும், 5 விழுக்காடு மாற்றுத்திறனாளிகளுக்கும் தரப்படும். L.L.M சேர கல்வித்தகுதி இந்த ஒரு ஆண்டு படிப்பிற்கு விண்ணப்பிக்க, L.L.B அல்லது இதற்கு சமமான சட்டப்படிப்பில் பொதுப் பிரிவினர் குறைந்தது 55 விழுக்காடும், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் 50 விழுக்காடும் மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். இப்படிப்பிற்கு மொத்தம் 80 இடங்கள் உண்டு. இதில் 70 இடங்கள் அகில இந்திய நுழைவுத்தேர்வின் வழியே நிரப்பப்படும். 10 இடங்களில், 5 இடங்கள் அயல்நாட்டவர்களுக்கும், 5 இடங்கள் ஓவர்சீஸ் இந்தியர்களுக்கும் நேரடியாக தரப்படும்.
Ph.D சேர கல்வித்தகுதி இப்படிப்பிற்கு ஏறத்தாழ 8 இடங்கள் உண்டு. இதற்கு விண்ணப்பிக்க L.L.M. பட்டப்படிப்பினை பொதுப்பிரிவினர் குறைந்தது 55 விழுக்காட்டுடனும், ஆதிதிராவிடர், பழங்குடியினர், மாற்றுத்திறனாளிகள் 50 விழுக்காட்டுடனும் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். நுழைவுத்தேர்வு இப்படிப்புகளுக்கான நுழைவுத்தேர்வுகள் பெங்களூரு, போபால், சண்டிகார், சென்னை, கொச்சின், கட்டாக், டெல்லி, காந்திநகர், கௌஹாத்தி, ஹைதராபாத், ஜெய்ப்பூர், ஜம்மு, ஜோத்பூர், கொல்கத்தா, லக்னோ, மும்பை, நாக்பூர், பாட்னா, ரெய்ப்பூர், வாரணாசி ஆகிய இடங்களில் 5.5.2019 (ஞாயிறு) அன்று பிற்பகல் 3 முதல் 4.30 வரை நடைபெறும்.இதில் ஆங்கிலம், பொது அறிவு, லீகல் ஆப்டிடியூட், ரீசனிங் அடிப்படைக் கணிதம் என்ற பாடங்களில் வினாக்கள் கேட்கப்படும். கணிதத்தில் 10 வினாக்களுக்கும், மற்ற பிரிவுகளில் தலா 35 வினாக்களுக்கும் கேட்கப்படும். ஆங்கிலத்தில் ரீடிங் காம்ப்ரிஹென்சன், இலக்கணம், சொல்திறன், வெர்பல் எபிலிட்டி என்ற உட்பிரிவுகளில் வினாக்கள் இருக்கும். கணிதத்தில் எண்கள், விழுக்காடு, லாபம் & நஷ்டம், அளவியல், வணிகக் கணிதம், நவீனக் கணிதம் டேட்டா இண்டர்பிரட்டேஷன், அரித்மேட்டிக் ஆகியவை இருக்கும். பொது அறிவுப் பிரிவில், அரசியல், புவியியல், அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், பொது அறிவியல், நூல்கள், நூல் ஆசிரியர்கள், தொழிற்சாலைகள், விவசாயம் ஆகிய பாடப்பிரிவுகளில் வினாக்கள் இடம்பெறும்.
லாஜிக்கல் ரீசனிங் பிரிவில் ஸ்டேட்மென்ட்ஸ்/அஸம்ஷன்ஸ், ஆர்குமென்ட்லி, அசர்ஷன், ரீசனிங், நம்பர் டெண்ட், சோடிங், டீசோடிங், ரேங்க் ஆகியவை இடம்பெறும். லீகல் ஆப்டிடியூட் பிரிவில் இந்திய அரசியல் அமைப்பு, இண்டியன் கான்ட்ராக்ட் ஆக்ட், லா ஆஃப் டார்ட்ஸ், லீகல் மேக்சிமஸ் ஆகியவை இருக்கும். இப்படிப்புகளில் சேரத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் www.nludelhi.ac.in என்ற இணையம் வழியாக விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பக் கட்டணம் பொதுப் பிரிவினர் ரூ.3050, மாற்றுத்திறனாளிகள், ஆதிராவிடர், பழங்குடியினர் ரூ.1050 செலுத்த வேண்டும். வறுமைக்கோட்டிற்கு கீழேயுள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களுக்குக் கட்டணம் இல்லை. ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 8.4.2019. மேலும் முழுமையான விவரங்களை அறிய www.nludelhi.ac.in என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.
மேலே நீங்கள் படித்த செய்திக்கு உங்களின் Reactionஐ கீழே Click செய்தபின் WhatsAppல் Share செய்யவும் - நன்றி.
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 9123576459 இந்த எண்ணை இணைக்கவும்

Total Pageviews