புத்தக பைகளுக்கு எடை நிர்ணயம் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, February 14, 2019

புத்தக பைகளுக்கு எடை நிர்ணயம்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Share This News To Ur Groups& Add 9123576459
மேகாலயா மாநிலத்தில், பள்ளி மாணவர்களின் புத்தகப் பையின் எடை, எவ்வளவு இருக்க வேண்டும் என, மாநில அரசு வரைமுறை நிர்ணயத்து உள்ளது. வட கிழக்கு மாநிலமான, மேகாலயாவில், முதல்வர், கான்ராட் சங்மா தலைமையில், தேசிய மக்கள் கட்சி, ஆட்சி நடக்கிறது. மத்திய மனிதவள மேம்பாட்டு துறையின் அறிவுறுத்தலின்படி, மாநில கல்வி துறை, சமீபத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
பள்ளி மாணவர்கள் எடுத்துச் செல்லும் புத்தகப் பை, அதிக எடையுடன் இருப்பதாக, புகார்கள் வருகின்றன; இது, மாணவர்களின் உடல்நலத்தை பாதிக்கிறது.இதை கருத்தில் வைத்து, புத்தகப் பையின் எடையை குறைக்கவும், அதிகபட்ச எடையை நிர்ணயம் செய்யவும் அரசு முடிவு செய்துள்ளது. இதன்படி, முதல் மற்றும் இரண்டாம் வகுப்பு மாணவர்களின் புத்தக பை, 1.5 கிலோவுக்கு மேல் இருக்க கூடாது.மூன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை, 3 கிலோவும், ஆறு மற்றும் ஏழாம் வகுப்புகளுக்கு, 4 கிலோவும், 10ம் வகுப்புக்கு, 5 கிலோவுக்கு மிகாமலும் இருக்க வேண்டும். இதற்கு தகுந்தபடி மாணவர்களுக்கு, பாட அட்டவணை வழங்கப்பட வேண்டும். அட்டவணையில் இருக்கும் பாடங்களை தவிர, கூடுதல் புத்தகங்களை எடுத்து வர சொல்லக் கூடாது. மேலும், முதல் மற்றும் இரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு, வீட்டு பாடத்தில் இருந்து, விலக்கு அளிக்க வேண்டும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
மேலே நீங்கள் படித்த செய்திக்கு உங்களின் Reactionஐ கீழே Click செய்தபின் WhatsAppல் Share செய்யவும் - நன்றி.
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 9123576459 இந்த எண்ணை இணைக்கவும்

Total Pageviews