UPSC சிவில் சர்வீஸ் தேர்வு: மார்ச் 18 கடைசி நாள்: முதல்கட்ட தேர்வு ஜூன் 2ம் தேதி!! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, February 25, 2019

UPSC சிவில் சர்வீஸ் தேர்வு: மார்ச் 18 கடைசி நாள்: முதல்கட்ட தேர்வு ஜூன் 2ம் தேதி!!

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Share This News To Ur Groups& Add 9123576459
896 காலியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்படுகின்றனர் சிவில் சர்வீஸ் தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க மார்ச் 18 கடைசி நாள்: முதல்கட்ட தேர்வு ஜூன் 2ம் தேதி நடைபெறும் சிவில் சர்வீஸ் தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க மார்ச் 18ம் தேதி கடைசி நாள் ஆகும். முதல்நிலை தேர்வு ஜூன் மாதம் 2ம் தேதி நடைபெறும். ஐஎப்எஸ், ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட 24 விதமான பணிகளுக்கான சிவில் சர்வீஸ் தேர்வுக்கான முதல்நிலை தேர்வு ஜூன் மாதம் 2ம் தேதி நடைபெற உள்ளது. மொத்தம் 896 காலியிடங்கள் தற்போது உள்ளன. இதற்கு விண்ணப்பிக்க வரும் மார்ச் மாதம் 18ம் தேதி கடைசி நாள் ஆகும். தமிழகத்தில் சென்னை, மதுரை, கோவை, திருச்சி, வேலூர் மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட இடங்களில் முதல்நிலை தேர்வுக்கு தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
மெயின் தேர்வுக்கு சென்னையில் மட்டுமே மையம் உண்டு. கல்வி தகுதி பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். குறைந்தபட்ச மதிப்பெண் நிர்ணயம் செய்யப்படவில்லை. மெயின் தேர்வுக்கு விண்ணப்பிக்கும்போது தகுதி தேர்வு வெற்றிபெற்ற விபரம் வழங்கும் வகையில் உள்ள கடைசி ஆண்டு பட்டப்படிப்பு தேர்வர்களும் விண்ணப்பிக்கலாம். மருத்துவ பட்டம் பெற்றவர்கள் பயிற்சி காலம் முழுவதையும் முடித்த சான்று நேர்முக தேர்வு நேரத்தில் சமர்ப்பிக்க வேண்டும். தொழில்நுட்ப பட்டப்படிப்புக்கு இணையான பட்டம் பெற்றவர்களும் தேர்வு எழுதலாம்.
வயது வரம்பு ஆகஸ்ட் 1ம் தேதி 21 - 32க்குள் இருக்க வேண்டும். சிவில் சர்வீஸ் தேர்வுகள் மூன்று பிரிவுகளாக நடத்தப்படுகிறது. பிரிலிமினரி எனப்படும் முதல்கட்ட தேர்வு, மெயின் தேர்வு, நேர்முக தேர்வு ஆகும். முதல்கட்ட தேர்வில் சிறப்பான தேர்ச்சி பெற்றால் மெயின் தேர்வில் வாய்ப்பு வழங்கப்படும். அதே வேளையில் முதல்கட்ட தேர்வுக்கான மதிப்பெண் இறுதி தரவரிசைக்கு சேர்க்கப்படாது. மெயின் தேர்வு மற்றும் நேர்முக தேர்வு அடங்கிய மதிப்பெண் மட்டும் தர வரிசைக்கு சேர்க்கப்படும். முதல்கட்ட தேர்வில் இரண்டு மணி நேரம் கால அளவு கொண்ட இரண்டு தாள்கள் எழுத வேண்டும். அப்ஜெக்டிவ் முறையில் கேள்விகள் இடம்பெறும். ஒவ்வொரு தாளுக்கும் 200 மதிப்பெண்கள் உண்டு. தவறுக்கு மதிப்பெண் குறைக்கப்படும்.
முதல்தாள் மதிப்பெண்ணை கணக்கிட்டு மெயின் தேர்வுக்கு தேர்வர்கள் தரவரிசைக்கு தேர்வு செய்யப்படுவர். இதில் உள்ள இரண்டாம் தாள் தகுதியை தேர்வு செய்வது ஆகும். இதில் 33 சதவீதம் மதிப்பெண் பெற்றாலும் போதுமானது. எழுத்து தேர்வில் 250 வீதம் ஏழு தாள்களுக்கு சேர்த்து 1750 மதிப்பெண் மற்றும் நேர்முக தேர்வுக்கு 275 மதிப்பெண் என்று மொத்தம் 2025 மதிப்பெண்களில் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் தரவரிசை இடம்பெறும். முதல்கட்ட தேர்வில் இருந்து காலியிடங்களின் 12 அல்லது 13 மடங்கு பேர் மெயின் தேர்வுக்கு அழைக்கப்படுவர்.
மேலும் விபரங்களை https://upsc.gov.in, என்ற இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம். விண்ணப்பிக்க https://upsconline.nic.in இந்த இணையதளத்தை பயன்படுத்த வேண்டும்.
மேலே நீங்கள் படித்த செய்திக்கு உங்களின் Reactionஐ கீழே Click செய்தபின் WhatsAppல் Share செய்யவும் - நன்றி.
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 9123576459 இந்த எண்ணை இணைக்கவும்

Total Pageviews