கல்வியாளர்கள், ஆசிரியர்கள்கிட்ட பேசாமல் எடுத்த முடிவு இது’’ - 5-ம் வகுப்பு பொதுத்தேர்வு பற்றி ஆசிரியர்கள்! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, February 22, 2019

கல்வியாளர்கள், ஆசிரியர்கள்கிட்ட பேசாமல் எடுத்த முடிவு இது’’ - 5-ம் வகுப்பு பொதுத்தேர்வு பற்றி ஆசிரியர்கள்!

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Share This News To Ur Groups& Add 9123576459
ஐந்தாம் வகுப்பு மற்றும் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு, பொதுத்தேர்வு நடத்த வேண்டும் என்கிற விதிமுறையை மத்திய அரசு கொண்டுவந்துள்ளது. இந்தத் திட்டத்துக்குத் தற்போது தமிழக அரசு அனுமதி அளித்து அதற்கான பணியை செயல்படுத்தத் தொடங்கியுள்ளது. இந்த ஆண்டே இத்திட்டம் அமலுக்கு வருகிறது என்கிற பேரதிர்ச்சியைப் பெற்றோர்கள் மத்தியில் இறக்கியிருக்கிறது அரசாங்கம்.
5 மற்றும் 8-ம் வகுப்பில் பொதுத்தேர்வு நடத்தப்பட்டு, தேர்ச்சி பெறுகிறவர்கள் அடுத்த வகுப்புக்குச் செல்வார்கள். தேர்ச்சி பெறாதவர்களுக்கு மறுபடியும் இரண்டே மாதத்தில் மீண்டும் தேர்வு எழுத வாய்ப்பு வழங்கப்படும். அந்தத் தேர்விலும் தேர்ச்சி பெறாதவர்கள் தொடர்ந்து அதே வகுப்பில் படிக்க வேண்டியிருக்கும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு வெளியானதிலிருந்து ஆசிரியர்களும் பெற்றோர்களும் கடும் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர். இதில் உள்ள சிக்கல்கள் என்ன என்பதைத் தெரிந்து கொள்வதற்காக ஆசிரியர்களிடம் பேசினோம்.
திருவாரூர், மேலராதா நல்லூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியின் ஆசிரியர் மணிமாறன் பேசியபோது, ``முதலில் ஐந்தாம் வகுப்பு படிக்கிற பையனுக்கு தேர்வுனாலே என்னன்னே தெரியாது. முதல்ல அவனுக்குப் பரீட்சையை பேனாவில் எழுதணுமா, பென்சிலில் எழுதணுமாங்குற தெளிவே இருக்காது. விளையாட்டு மனநிலையில்தான் இருப்பான். அவனுடைய தனித்திறன் அடிப்படையில் மதிப்பெண்கள் வழங்குறோம். பத்தாம் வகுப்பு படிக்கிற பையனுடைய மனநிலை ரொம்ப இறுக்கமா இருக்கும். ஆசிரியர்கள் தொடர்ந்து தேர்வு வைப்பாங்க... பெற்றோர்கள் நல்ல மார்க் எடுக்கச் சொல்லி அதை நோக்கி ஓடச் சொல்லுவாங்க... அந்த மனநிலையை ஐந்தாம் வகுப்பு மாணவனுக்குக் கொடுக்கிறது எவ்வளவு தவறான விஷயம். ஆடிப்பாடிட்டு இருக்கிற பசங்ககிட்ட நீ ஃபெயில்... அடுத்த வருஷமும் இதே கிளாஸ்தான் படிக்கணும்னு சொல்றது குரூரம். எல்லா நாடுகளும் தேர்வு வேண்டாம்னு சொல்லிட்டு இருக்கும்போது நம்மளுடைய நாட்டில் சின்ன வயசிலேயே பொதுத்தேர்வு நடத்துறதுங்குறது சரியான வளர்ச்சி இல்லை. புதிய கல்விக் கொள்கையில் இந்த விஷயங்கள் தெளிவா சொல்லியிருக்காங்க. அந்தப் புதிய கல்விக் கொள்கையை இவங்க நடைமுறைப்படுத்துறாங்க. ஒரு பையன் படிக்க ஆரம்பிக்கிறதே எட்டாம் வகுப்புக்கு மேல்தான். அதுக்கு முன்னாடி எக்ஸாம் என்பது குழந்தைங்கள் மீது நடக்கிற வன்முறை. குழந்தைகளைத் தொடர்ச்சியாகப் பள்ளிக்கு வரவழைப்பதில் சிக்கல் நிலவும் சூழலில், ஐந்தாம் வகுப்புக்கு பொதுத்தேர்வு வைச்சா படிக்க வர்றதுக்கே பசங்க யோசிப்பாங்க. இதனால கல்வி விகிதம் நிச்சயமா குறைய அதிகமா வாய்ப்பிருக்கு
ஏற்கெனவே நடைமுறையில் இருக்கிற மதிப்பீட்டு உத்திகளைத் தரப்படுத்திட வேண்டும். களிமண் உருவங்கள், பாடல்கள், கதைகள், விளையாட்டு, சிறு நாடகம் என்பனவற்றை ஐந்தாம் வகுப்பு வகையிலும், கதைகள், கட்டுரைகள், ஓவியங்கள், புத்தக விமர்சனம், குழு விவாதம், அறிவியல் ஆய்வுகள், தொல்பொருள் ஆய்வு, சுற்றுச்சூழல் செயல்பாடுகள் இவற்றை எட்டாம் வகுப்பிலும் மதிப்பிடலாம். சமூகத்துடன் ஒன்றி வாழும் பாங்கினை சிறு வயதிலேயே தடை செய்வது என்பது எங்களைப் போன்ற ஆசிரியர்களுக்கு ரொம்பவே பேரதிர்ச்சியை ஏற்படுத்துகிறது’’ என்றார்.
அரசுப் பள்ளி ஆசிரியரும் கல்வியாளர் சங்கமத்தின் மாநில ஒருங்கிணைப்பாளருமான சி.சதீஷ்குமார் பேசியபோது, ``பதினான்கு வயது வரை இலவச கல்வி உரிமைச் சட்டம் வலியுறுத்துவதே குறைஞ்சது பசங்க எட்டாம் வகுப்பு வரைக்குமாவது படிச்சிருக்கணும். எட்டாம் வகுப்பு வரைக்கும் அவனுக்குக் கல்விமுறை பற்றிய பயம் இருக்கக் கூடாதுங்குறதுனாலதான். பன்னிரண்டாம் வகுப்புல 1176 மார்க் வாங்கின அனிதாவால நீட் தேர்வில் பாஸாக முடியாத விரக்தியில் தற்கொலை செஞ்சு இறந்துட்டா. நல்லா படிச்சு பன்னிரண்டாம் வகுப்புல நல்ல மார்க் வாங்கின அந்தப் பொண்ணாலேயே தோல்வி மனப்பான்மையை ஏத்துக்க முடியலை. 9 வயசுல இருக்கிற பையன்கிட்ட ஐந்தாம் வகுப்பை நீ பொதுத்தேர்வா எழுதணும்... இந்தத் தேர்வுல பாஸானதான் ஆறாம் வகுப்பு போக முடியும்னு சொல்றப்போ, அவனுடைய மனநிலை எப்படியிருக்கும்னு யோசிச்சு பாருங்க. பாடப்புத்தகத்திலேயே சுமை இருக்கக் கூடாதுன்னுதான் முப்பெரு கல்வி முறையைக் கொண்டு வந்தாங்க. இப்போ தேர்வுங்குற அழுத்தத்தைக் கொடுக்கும்போது அவனால எப்படி அந்த அழுத்தத்தைத் தாங்கிக்க முடியும். 14 வயசுக்குள்ளே இரண்டு தேர்வை அவன் எழுதணும்னு சொல்றது எந்த வகையில் நியாயம்? இப்போ பொதுத்தேர்வு வைக்க வேண்டிய அவசியம் என்ன. ஆசிரியர்களுடைய கல்வி முறையைச் சோதிக்கிறதா இருந்தா ஆசிரியர்களுடைய கற்பித்தல் முறையைத்தான் சோதிக்கணும். அதை விட்டுட்டு மாணவர்களைச் சோதிச்சா அவனுடைய பாரம்தான் அதிகரிக்கும்
மேலே நீங்கள் படித்த செய்திக்கு உங்களின் Reactionஐ கீழே Click செய்தபின் WhatsAppல் Share செய்யவும் - நன்றி.
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 9123576459 இந்த எண்ணை இணைக்கவும்

Total Pageviews