யுபிஎஸ்சி சிவில் சர்வீஸ் தேர்வு 2019 : 896 காலிப்பணியிடங்கள்!! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, February 20, 2019

யுபிஎஸ்சி சிவில் சர்வீஸ் தேர்வு 2019 : 896 காலிப்பணியிடங்கள்!!

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Share This News To Ur Groups& Add 9123576459
2019 ஆம் ஆண்டிற்கான சிவில் சர்வீஸ் தேர்வு குறித்து யுபிஎஸ்சி இன்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது. யுபிஎஸ்சி சிவில் சர்வீஸ் பிரிவில் மொத்தம் 896 காலிப்பணியிடங்கள் இருப்பதாகவும் அதில் 39 காலிப்பணியிடங்கள் உடல் நலிவுற்றோருக்காக ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிப்பவர் கண்டிப்பாக 21 வயது நிரம்பியவராகவும் 32 வயதிற்குள்ளாகவும் இருக்க வேண்டும். அதாவது விண்ணப்பிப்பவர் 1987 ஆகஸ்ட் 2 ஆம் தேதிக்கு முன்னதாகவும் 1998 ஆகஸ்ட் 1 ஆம் தேதிக்கு பிறகும் பிறந்திருக்கக் கூடாது. இதற்கான கல்வி தகுதி அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக் கழகம் அல்லது கல்வி நிறுவனத்தில் பட்டப் படிப்பு முடித்திருக்க வேண்டும். இந்தத் தேர்வுக்கு upsconline.nic.in. என்ற இணையதள முகவரியில் சென்று விண்ணப்பிக்கலாம். மேலும் தகவல்களுக்கு யுபிஎஸ்சி அலுவலகத்தில் 'கேட் சி'யில் உதவி கவுண்டர் உள்ளது எனவும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை தேர்வு குறித்த சந்தேகங்களையும் தகவல்களையும் கேட்டுப் பெறலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உதவி தொலைபேசி எண்கள்: 011-23385271/011-23381125/011-23098543. இந்தத் தேர்வுக்கு பிப்ரவரி 19 முதல் மார்ச் 18 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுபிரிவு மற்றும் ஒபிசிக்கு விண்ணப்ப கட்டணம் ரூ.200 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பட்டியல் இனத்தவர் மற்றும் பெண்கள் மற்றும் உடல் நலிவுற்றோருக்கு கட்டணம் கிடையாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. யுபிஎஸ்சி வேலைக்கான தேர்வுமுறை மூன்று நிலைகளில் உள்ளன. அதாவது முதல் நிலை தேர்வு, பிரதான தேர்வு, நேர்காணல் என மூன்று நிலைகளில் தேர்வு செய்யப்படுவார்கள். முதல்நிலை தேர்வு 2019 ஜூன் 2 ஆம் தேதி நடைபெறும்.
200 மதிப்பெண்களுக்கு அப்ஜெக்டிவ் முறையில் வினாத்தாள் இருக்கும். இதையடுத்து பிரதான தேர்வு செப்டம்பர் 20 ஆம் தேதி நடைபெறும். 5 நாட்களுக்கு நடைபெறும் இந்தத் தேர்வு 1750 மதிப்பெண்களுக்கு விளக்கமாக எழுதும்(discreptive) முறையில் வினாத்தாள் இருக்கும். 275 மதிப்பெண்களுக்கு நேர்காணல் இருக்கும். ஐ.எஃப்.எஸ்-க்கான தேர்வு 2019 டிசம்பர் 1 ஆம் தேதி நடைபெறும். இதில் ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎஃப்.எஸ், ஐ.ஆர்.எஸ் உள்ளிட்ட பல பணிகள் இதில் உள்ளன.
மேலே நீங்கள் படித்த செய்திக்கு உங்களின் Reactionஐ கீழே Click செய்தபின் WhatsAppல் Share செய்யவும் - நன்றி.
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 9123576459 இந்த எண்ணை இணைக்கவும்

Total Pageviews