👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் மற்ற WhatsApp Groupல் Share செய்யுங்கள். உங்கள் Groupல் செய்திகளை விரைவில் பெற Adminகள் 8807414648 இந்த எண்ணை இணைக்கவும் - நன்றி
ஒருங்கிணைந்த பள்ளிகல்வி மூலம் பள்ளி,ஒன்றியம்,மாவட்ட அளவில் பள்ளி மாணவ,மாணவியர்களுக்கான பெண் கல்வியின் முக்கியத்துவம், இலவச கட்டாயக்கல்வி உரிமைச் சட்டம் மற்றும் சுத்தம் சுகாதாரம் குறித்த பேச்சு ,கட்டுரை மற்றும் ஓவியப் போட்டிகள்...புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் இரா.வனஜா தகவல்....
புதுக்கோட்டை,ஜன.4:
பெண் கல்வியின் முக்கியத்துவம், இலவச கட்டாயக்கல்வி உரிமைச் சட்டம் ,மற்றும் சுத்தம் சுகாதாரம் குறித்து பள்ளி,ஒன்றியம்,மாவட்ட அளவில் நடைபெறும் பேச்சு,கட்டுரை மற்றும் ஓவியப் போட்டிகளில் மாணவர்கள் பங்கு பெற்று தங்களது திறமைகளை வெளிப்படுத்துமாறு புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் இரா.வனஜா கேட்டுக் கொண்டுள்ளார்..
இது குறித்து அவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:
தமிழகம் முழுவதும் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியின் மூலம் 2018-2019 ஆண்டிற்கான சமூக பங்கேற்பு நிகழ்ச்சிகள் வரையறுக்கப்பட்டு ஒவ்வொன்றாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.அதன் முதல் நிகழ்ச்சியாக பெண் கல்வியின் முக்கியத்துவம் ,இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் 2009 மற்றும் சுத்தம் சுகாதாரம் குறித்த விழிப்புணர்வை பள்ளி மாணவர்களிடத்தில் ஏற்படுத்தும் நோக்கத்தில் அனைத்து அரசு தொடக்க,நடுநிலை,உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் உண்டு உறைவிடப் பள்ளியில் 1 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ,மாணவியர்களிடையே பேச்சுப் போட்டி,கட்டுரைப் போட்டி மற்றும் ஓவியப் போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது..
எனவே அனைத்து பள்ளிகளிலும் உள்ள மாணவர்கள் இந்த போட்டிகளில் பங்கு பெற்று சமுதாயத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்..அனைத்து பள்ளித் தலைமையாசிரியர்கள் மூலமாக மாணவர்கள் போட்டிகளில் பங்குபெற பதிவு செய்ய வேண்டும்.மேலும் பெண்கல்வியின் முக்கியத்துவம்,இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் 2009 மற்றும் சுத்தம் சுகாதாரம் குறித்த விழிப்புணர்வு சார்ந்த தங்களது திறமைகளை மாணவர்கள் வெளிப்படுத்த வேண்டும்.புதுக்கோட்டை மாவட்டத்தில் பள்ளி அளவில் வரும் 7 ஆம் தேதி அன்றும்,பள்ளி அளவில் வெற்றி பெறும் மாணவர்கள் வட்டார அளவில் 11 ஆம் தேதி அன்றும் ,வட்டார அளவில் வெற்றி பெறும் மாணவர்கள் மாவட்ட அளவில் நடைபெறும் போட்டியிலும் பங்கு பெற வேண்டும்.
வட்டார அளவில் நடைபெறும் மாணவர்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழும்,மாவட்ட அளவில் வெற்றி பெறும் முதல் மூன்று இடம் பிடிக்கும் மாணவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் மூலம் பரிசுகள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பட இருக்கிறது.எனவே புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள அரசு,தொடக்க நடுநிலை,உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் ,உண்டு உறைவிடப் பள்ளிகளில் 1 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ,மாணவிகள் இப்போட்டிகளில் பங்குபெற்று தங்களது திறமைகளை வெளிப்படுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 8807414648 இந்த எண்ணை இணைக்கவும்