👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here கணினிக்கல்வி செய்திகளை உங்கள் மற்ற WhatsApp Groupல் Share செய்யுங்கள். உங்கள் Groupல் செய்திகளை விரைவில் பெற Adminகள் 8807414648 இந்த எண்ணை இணைக்கவும் - நன்றி
நிகழ்வுகள்
814 – முதலாம் புனித உரோமைப் பேரரசர் சார்லமேன் நுரையீரல் உறையழற்சி நோயால் இறந்தார்.
1547 – எட்டாம் என்றியின் இறப்பை அடுத்து, அவனது 9 வயது மகன் ஆறாம் எட்வர்டு இங்கிலாந்தின் மன்னனாக முடிசூடினான்.
1573 – போலந்தில் சமயச் சுதந்திரம் வழங்கப்பட்டது.
1624 – கரிபியனில் முதலாவது பிரித்தானியக் குடியேற்ற நாடான செயிண்ட் கிட்சு சர் தொமஸ் வார்னர் என்பவரால் அமைக்கப்பட்டது.
1724 – உருசிய அறிவியல் கழகம் சென் பீட்டர்ஸ்பேர்க் நகரில் முதலாம் பேதுரு மன்னரால் ஆரம்பிக்கப்பட்டது.
1846 – அலிவால் என்ற இடத்தில் சீக்கியர்களுடன் இடம்பெற்ற போரில் சர் ஹரி ஸ்மித் தலைமையிலான பிரித்தானியப் படைகள் வெற்றி பெற்றனர்.
1882 – சென்னையில் முதன்முதலாக தொலைபேசி அறிமுகப்படுத்தப்பட்டது.
1909 – எசுப்பானிய அமெரிக்கப் போர்: ஐக்கிய அமெரிக்கப் படைகள் குவாண்டானமோ விரிகுடாவைத் தவிர்த்து கியூபாவின் மற்றைய பகுதிகளில் இருந்து விலகினர்.
1918 – பின்லாந்தின் தலைநகர் ஹெல்சிங்கியை புரட்சியாளர்கள் கைப்பற்றினர்.
1933 – பாக்கித்தான் என்ற பெயரை சௌதுரி ரகுமாத் அலி கான் பரிந்துரைத்தார். இந்திய முசுலிம்கள் இதனை ஏற்றுக் கொண்டு பாக்கித்தான் இயக்கத்தை ஆரம்பித்து விடுதலைக்கான கோரிக்கையை முன்னெடுத்தனர்.
1935 – ஐசுலாந்து கருக்கலைப்பைச் சட்டபூர்வமாக்கிய முதல் மேற்கத்திய நாடானது.
1945 – இரண்டாம் உலகப் போர்: புதிதாக நிர்மாணிக்கப்பட்ட பர்மா வீதி ஊடாக சீனக் குடியரசுக்கு பொருட்கள் செல்ல ஆரம்பித்தன.
1958 – லெகோ நிறுவனம் தமது லெகோ கட்டைகளுக்கு காப்புரிமை பெற்றது.
1964 – பயிற்சியில் ஈடுபட்டிருந்த ஆளில்லா அமெரிக்க வான்படையின் டி-39 சாப்ரெலைனர் சோவியத் மிக்-19 போர் விமானத்தினால் சுட்டு வீழ்த்தப்பட்டது.
1986 – சாலஞ்சர் மீள்விண்கலம் புறப்பட்ட 73ஆவது வினாடியில் வானில் வெடித்துச் சிதறியதில் ஏழு விண்வெளிவீரர்கள் கொல்லப்பட்டனர்.
1987 – கொக்கட்டிச்சோலைப் படுகொலைகள், 1987: மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை கிராமத்தில் இலங்கை இராணுவத்தினரால் 86 தமிழ் இளைஞர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.
2002 – கொலம்பியாவில் போயிங் விமானம் ஒன்று அந்தீசு மலையில் மோதியதில் 92 பேர் கொல்லப்பட்டனர்.
2016 – ஜிகா வைரசு பரவியுள்ளதாக உலக சுகாதார அமைப்பு அறிவித்தது.
1600 – ஒன்பதாம் கிளமெண்ட் (திருத்தந்தை) (இ. 1669)
1611 – யோகான்னசு எவெலியசு, போலந்து வானியலாளர், அரசியல்வாதி (இ. 1687)
1786 – நத்தானியேல் வாலிக், தென்மார்க்கு மருத்துவர், தாவரவியலாளர் (இ. 1854)
1853 – ஒசே மார்த்தி, கியூபா ஊடகவியலாளர், கவிஞர் (இ. 1895)
1865 – லாலா லஜபதி ராய், இந்திய எழுத்தாளர், அரசியல்வாதி (இ. 1928)
1899 – கரியப்பா, இந்தியத் தரைப்படையின் படைத்தலைவர் (இ. 1993)
1912 – ஜாக்சன் பாலக், அமெரிக்க ஓவியர் (இ. 1956)
1925 – இராஜா இராமண்ணா, இந்திய இயற்பியலாளர், அரசியல்வாதி (இ. 2004)
1938 – தோமசு லின்டால், நோபல் பரிசு பெற்ற சுவீடன்-ஆங்கிலேய உயிரியலாளர்
1940 – கார்லொசு சிலிம், மெக்சிக்கோ தொழிலதிபர்
1945 – ஜான் பெர்க்கின்ஸ், அமெரிக்க எழுத்தாளர்
1955 – நிக்கொலா சார்கோசி, பிரான்சின் 23வது அரசுத்தலைவர்
1976 – மாளவிகா அவினாஷ், தென்னிந்திய நடிகை
1981 – எலியா வுட், அமெரிக்க நடிகர், தயாரிப்பாளர்
1986 – சுருதி ஹாசன், தென்னிந்திய நடிகை, பாடகி
1992 – மியா, தென்னிந்தியத் திரைப்பட நடிகை
இறப்புகள்
1547 – இங்கிலாந்தின் எட்டாம் ஹென்றி (பி. 1491)
1687 – யோகான்னசு எவெலியசு, போலந்து வானியலாளர், அரசியல்வாதி (பி. 1611)
1851 – இரண்டாம் பாஜி ராவ், மராத்தியப் பேரரசர் (பி. 1775)
1939 – டபிள்யூ. பி. யீட்சு, நோபல் பரிசு பெற்ற ஐரிய எழுத்தாளர் (பி. 1865)
1996 – தேவ காந்த பருவா, இந்திய அரசியல்வாதி (பி. 1914)
2002 – ஆஸ்ட்ரிட் லிண்ட்கிரென், சுவீடன் எழுத்தாளர் (பி. 1907)
2008 – செ. யோகநாதன், ஈழத்து எழுத்தாளர் (பி. 1941)
2018 – தர்மசேன பத்திராஜா, இலங்கை சிங்களத் திரைப்பட இயக்குனர், கல்வியாளர் (பி. 1943)
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 8807414648 இந்த எண்ணை இணைக்கவும்