👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் மற்ற WhatsApp Groupல் Share செய்யுங்கள். உங்கள் Groupல் செய்திகளை விரைவில் பெற Adminகள் 8807414648 இந்த எண்ணை இணைக்கவும் - நன்றி
திருவள்ளூரில் முதற்கட்டமாக 27 பள்ளிகளில், கல்வித்துறை
உதவியுடன்நேற்று மாணவர் காவல் படை துவக்கப்பட்டது. இதனால், சமூகத்தில் நடக்கும் பல சீர்கேடுகள் களையப்பட வாய்ப்பு அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.திருவள்ளூர் மாவட்ட பள்ளிகளில், செடிகளை பாதுகாப்பதற்கு பசுமை படை, சுகாதாரம் மேம்பாட்டிற்கு நாட்டு நலப்பணி திட்டம், மருத்துவம் தொடர்பாக ‘’ஜூனியர் ரெட் கிராஸ்’’’’,அறநெறி தொடர்பான விழிப்புணர்விற்கு பாரத சாரண சாரணியர் இயக்கம் போன்ற அமைப்புகள் உள்ளன.
இந்நிலையில், சட்டம் - ஒழுங்கு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கு, கல்வித்துறையுடன் சேர்ந்து மாவட்டம் முழுவதும், 132 பள்ளிகளில், மாணவர் காவல் படை துவக்கப்பட உள்ளது. நேற்று திருவள்ளூரில் 27 பள்ளிகளில் மாணவர் காவல் படை துவக்கப்பட்டது. விழாவிற்கு கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் தலைமை வகித்தார். ஏடிஎஸ்பி சிலம்பரசன், டிஎஸ்பிக்கள் கங்காதரன், சர்தார், மாவட்ட கல்வி அலுவலர் குமாரசாமி முன்னிலை வகித்தனர்.
இதில், மாவட்ட எஸ்.பி., பொன்னி கலந்துகொண்டு பேசுகையில், ‘’எட்டு மற்றும் ஒன்பதாம் வகுப்பு மாணவ, மாணவியரை ஒரு வகுப்புக்கு தலா 22 மாணவர்கள் வீதம், 44 பேர் தேர்வு செய்யப்பட்டு, சாலை பாதுகாப்பு, சட்டம் - ஒழுங்கு தொடர்பான விழிப்புணர்வு உள்ளிட்ட 15 தலைப்புகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட உள்ளது. இவர்களுக்கு, வாரத்திற்கு ஒரு நாள் சிறப்பு வகுப்பு மூலம், காவல், தீயணைப்பு, மருத்துவம் உள்ளிட்ட பல துறை அதிகாரிகள், சிறப்பு வகுப்பில் பங்கேற்று விழிப்புணர்வு பயிற்சி அளிக்க உள்ளனர். இதற்கான ஏற்பாடுகளை கல்வித்துறை மேற்கொள்ள உள்ளது’’’’ என்றார். இதில், இன்ஸ்பெக்டர்கள் வெங்கடேசன், தமிழ்வாணன், ரஜினிகாந்த், முருகன், முரளிதரன், தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் வேணுகோபால் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
விழிப்புணர்வு பயிற்சிகள்
மாணவர் காவல் படையில் உள்ள மாணவர்களுக்கு குற்றம் தடுப்பு சார்ந்த நற்பண்புகள், சாலை பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு, வரதட்சணை, பாலியல் துன்புறுத்தல், ஜாதி வன்கொடுமை உள்ளிட்ட சமுதாயத்திற்கு எதிரான தீய பழக்கங்களை களைதல், நல்ல தொடுதல், தீய தொடுதல் என குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு, நல் ஒழுக்கத்துடன் நற்போதனை, சகிப்பு தன்மை வளர்த்துக் கொள்ளுதல் மற்றும் பிறரிடம் நடந்துக் கொள்ளும் முறை குறித்த விழிப்புணர்வு, மனம் மற்றும் உணர்வுகளை கட்டுப்படுத்தும் முறைகள், பெரியவர்களை மதித்தல் போன்ற பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளன.
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 8807414648 இந்த எண்ணை இணைக்கவும்