👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் மற்ற WhatsApp Groupல் Share செய்யுங்கள். உங்கள் Groupல் செய்திகளை விரைவில் பெற Adminகள் 8807414648 இந்த எண்ணை இணைக்கவும் - நன்றி
கொல்கத்தாவில் நடைபெற்ற உலகக்கோப்பை கராத்தே போட்டியில் சேலம் மாணவ மாணவிகள் பங்கேற்று 22 தங்கம், 11 வெள்ளி, 5 வெண்கலம் என 38 பதக்கங்களை வென்றனர். பதக்கங்களை குவித்து சேலம் திரும்பிய மாணவ, மாணவியருக்கு ரயில் நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
கடந்த டிசம்பர் மாதம் 29 மற்றும் 30ம் தேதிகளில் மேற்கு வங்காளம் மாநிலம் கொல்கத்தாவில் நடைபெற்ற உலக கோப்பை கராத்தே போட்டியில் இந்தியா, இந்தோனேசியா, சவுத் ஆப்பிரிக்கா, மலேசியா, வடகொரியா, ஜெர்மனி உள்ளிட்ட பல்வேறு நாடுகளிலிருந்து சுமார் 1200 பேர் பங்கேற்றனர்.
எடை அடிப்படையில் கட்டாக், உள்ளிட்ட பல்வேறு பிரிவின் கீழ் நடத்தப்பட்ட இந்த உலக கோப்பை கராத்தே போட்டியில் தமிழகம் சார்பாக சேலம் தாரமங்கலம் மற்றும் வாழப்பாடி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த கராத்தே மாஸ்டர்கள் தலைமையில் 28 பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவிகள் கலந்து கொண்டு பல்வேறு பிரிவுகளில் 22 தங்கம், 11 வெள்ளி மற்றும் 5 வெண்கலத்தை வென்றுள்ளனர்.
இன்று சேலம் திரும்பிய மாணவ மாணவிகளுக்கு சேலம் ஜங்ஷன் ரயில் நிலையத்தில் பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். பதக்கம் வென்ற மாணவர்களுக்கு இனிப்புகள் வழங்கியும், மாலை அணிவித்தும் பாராட்டுக்களைத் தெரிவித்தனர்
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 8807414648 இந்த எண்ணை இணைக்கவும்