👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here கணினிக்கல்வி செய்திகளை உங்கள் மற்ற WhatsApp Groupல் Share செய்யுங்கள். உங்கள் Groupல் செய்திகளை விரைவில் பெற Adminகள் 8807414648 இந்த எண்ணை இணைக்கவும் - நன்றி
சனவரி 19 (January 19) கிரிகோரியன் ஆண்டின் 19 ஆம் நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 346 (நெட்டாண்டுகளில் 347) நாட்கள் உள்ளன.
நிகழ்வுகள் தொகு
1419 – நூறாண்டுப் போர்: நார்மாண்டியை கைப்பற்றிய இங்கிலாந்தின் ஐந்தாம் என்றியிடம் பிரான்சின் ரொவென் நகரம் சரணடைந்தது.
1661 – பிரித்தானியக் காப்பாளர் ஆலிவர் கிராம்வெல்லைக் கொலை செய்யத் திட்டம் தீட்டிய தாமசு வென்னர் என்பவர் இலண்டனில் தூக்கிலிடப்பட்டார்.
1764 – உலகின் முதலாவது அஞ்சல் குண்டுவெடிப்பு டென்மார்க் இராணுவத் தலைவர் போல்சனைப் படுகாயப்படுத்தியது.
1788 – இங்கிலாந்தில் இருந்து கைதிகளை ஏற்றி வந்த இரண்டாவது தொகுதி கப்பல்கள் நியூ சவுத் வேல்சின் பொட்டனி விரிகுடாவை வந்தடைந்தது.
1795 – நெதர்லாந்தில் பத்தாவியக் குடியரசு அறிவிக்கப்பட்டதை அடுத்து இடச்சுக் குடியரசு முடிவுக்கு வந்தது
1817 – சிலி மற்றும் பெருவை விடுதலை செய்ய ஜோஸ் டெ சான் மார்ட்டின் தலைமையில் 5,423 போர் வீரர்கள் கொண்ட படை, அர்கெந்தீனாவிலிருந்து ஆன்டெசைக் கடந்தது.
1818 – பிரெஞ்சு இயற்பியலாளர் அகஸ்டின் பிரெனெல் முனைவுற்ற ஒளியைப் பற்றிய விளக்கத்தை அறிவித்தார்.
1839 – பிரித்தானிய கிழக்கிந்தியக் கம்பனி யேமனின் ஏடன் நகரைக் கைப்பற்றியது.
1861 – அமெரிக்க உள்நாட்டுப் போர்: அமெரிக்காவிலிருந்து பிரிந்த ஜோர்ஜியா தென் கரொலைனா, புளோரிடா, மிசிசிப்பி, மற்றும் அலபாமா ஆகிய மாநிலங்களுடன் சேர்ந்தது.
1862 – அமெரிக்க உள்நாட்டுப் போர்: மில் ஸ்பிரிங்ஸ் சண்டையில் அமெரிக்க மாநிலங்களின் கூட்டமைப்பு தனது முதல் பெரிய தோல்வியை சந்தித்தது.
1871 – பாரிசு முற்றுகையின் போது, புருசியா புனித குவென்டின் சமரை வென்றது.
1883 – முதலாவது மேலே செல்லும் கம்பி வலையமைப்புபைக் கொண்ட மின்னொளி அமைப்பு எடிசனால் நியூ செர்சியில் அமைக்கப்பட்டது.
1903 – ஐக்கிய அமெரிக்காவுக்கும் இங்கிலாந்துக்கும் இடையே முதலாவது வானொலி ஒலிபரப்பு ஆரம்பமாயிற்று.
1917 – லண்டனில் ஆயுதக் களஞ்சியம் ஒன்றில் இடம்பெற்ற வெடிவிபத்தில் 73 பேர் கொல்லப்பட்டும் 400 பேர் காயமும் அடைந்தனர்.
1920 – அமெரிக்க மேலவை உலக நாடுகள் சங்கத்தில் சேருவதற்கு எதிராகத் தீர்மானம் நிறைவேற்றியது.
1927 – பிரித்தானியா சீனாவுக்கு படைகளை அனுப்பியது.
1937 – அவார்டு இயூசு லாஸ் ஏஞ்சலஸ் இலிருந்து நியூ யார்க் நகரத்திற்கு 7 மணிநேரம், 28 நிமிடங்கள், 25 நொடிகளில் பறந்து சாதனைப் புரிந்தார்.
1941 – இரண்டாம் உலகப் போர்: பிரித்தானியப் படைகள் இத்தாலி வசமிருந்த எரித்திரியாவைத் தாக்கின.
1942 – இரண்டாம் உலகப் போர்: சப்பானியப் படைகள் பர்மாவை முற்றுகையிட்டன.
1945 – இரண்டாம் உலகப் போர்: சோவியத் படைகள் போலந்துல் நாட்சிகளின் லோட்சு வதைமுகாமில் இருந்து யூதக் கைதிகளை விடுவித்தன.
1966 – இந்திரா காந்தி இந்தியா வின் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்
1983 – ஆப்பிள் நிறுவனத்தின் வரைகலை பயனர் இடைமுகம் மற்றும் சுட்டியுடனான முதலாவது வணிக-முறை தனி மேசைக் கணினி ஆப்பிள் லீசா" வெளியிடப்பட்டது.
1983 – நாட்சி போர்க் குற்றவாளி கிளவுஸ் பார்பி பொலிவியாவில் கைது செய்யப்பட்டான்.
1986 – முதற் கணினி நச்சுநிரலான பிரெயின் பரவத் தொடங்கியது.
1991 – வளைகுடாப் போர்: ஈராக்கு இரண்டாவது ஸ்கட் ஏவுகணையை இசுரேல் மீது ஏவியது. 15 பேர் காயமடைந்தனர்.
1993 – செக் குடியரசு, சிலோவாக்கியா ஆகிய நாடுகள் ஐக்கிய நாடுகள் அவையில் இணைந்தன.
1993 – வேதி ஆயுத உடன்படிக்கை கையொப்பமிடப்பட்டது.
1997 – 30 ஆண்டுகளுக்குப் பின்னர் யாசர் அரபாத் எபிரோன் திரும்பினார்.
2006 – சிலவாக்கியாவின் விமானப்படை விமானம் அங்கேரியில் வீழ்ந்து நொருங்கியது.
2006 – புளூட்டோவுக்கான முதலாவது நியூ ஹரைசன்ஸ் என்ற விண்ணுளவியை நாசா விண்ணுக்கு ஏவியது.
2007 – இலங்கையின் கிழக்கே மட்டக்களப்பு மாவட்டத்தில் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த வாகரையைத் தாம் கைப்பற்றிவிட்டதாக இலங்கை இராணுவம் அறிவித்தது.
பிறப்புகள் தொகு
1736 – ஜேம்ஸ் வாட், இசுக்கொட்டிய-ஆங்கிலேய வேதியியலாளர், பொறியியலாளர் (இ. 1819)
1798 – ஆகஸ்ட் கோம்ட், பிரான்சிய மெய்யியாலாளர். சமூகவியலாளர் (இ. 1859)
1807 – ராபர்ட் ஈ. லீ, அமெரிக்கப் பொறியியலாளர் (இ. 1870)
1809 – எட்கர் ஆலன் போ, அமெரிக்க எழுத்தாளர், கவிஞர், திறனாய்வாளர் (இ. 1849)
1839 – பால் செசான், பிரான்சிய ஓவியர் (இ. 1906)
1851 – யாகோபசு காப்தேயன், இடச்சு வானியலாளர் (இ. 1922)
1855 – ஜி. சுப்பிரமணிய ஐயர், தமிழக இதழியலாளர் (இ. 1916)
1931 – யசூசி அகாசி, சப்பானிய மூத்த தூதர், ஐநா நிருவாகி
1933 – சீர்காழி எஸ். கோவிந்தராஜன், கருநாடக, திரையிசைப் பாடகர் (இ. 1988)
1935 – சௌமித்திர சாட்டர்ஜி, இந்திய வங்காள நடிகர்
1937 – அ. முத்துலிங்கம், இலங்கை-கனடிய தமிழ் எழுத்தாளர்
1946 – யூலியன் பார்னசு, ஆங்கிலேய எழுத்தாளர்
1986 – ரீமா கல்லிங்கல், தென்னிந்தியத் திரைப்பட நடிகை
1992 – லோகன் லெர்மன், அமெரிக்க நடிகர்
இறப்புகள் தொகு
1597 – மகாராணா பிரதாப், இந்திய மன்னர் (பி. 1540)
1873 – மீட் ஐயர், தமிழ்நாட்டில் மதப்பரப்புரை செய்த ஆங்கிலேய போதகர் (பி. 1792)
1888 – சி. தியாகராச செட்டியார், தமிழறிஞர் (பி. 1826)
1941 – நேசம் சரவணமுத்து, இலங்கை அரசாங்க சபைக்குத் தெரிவு செய்யப்பட்ட முதலாவது தமிழ்ப் பெண் (பி. 1897)
1967 – மைசூர் டி. சௌடையா, இந்தியக் கருநாடக வயலின் கலைஞர் (பி. 1895)
1990 – ஓஷோ, இந்திய மதகுரு, மெய்யியலாளர் (பி. 1931)
1991 – பால் வெயிஸ், செருமனிய-பிரித்தானிய கணித, கோட்பாட்டு இயற்பியலாளர் (பி. 1911)
2000 – எடி இலமார், ஆத்திரிய-அமெரிக்க நடிகை, பாடகி, கணிதவியலாளர் (பி. 1913)
2008 – பிரான்செஸ் லிவைன், அமெரிக்க ஊடகவியலாளர் (பி. 1921)
2011 – தாமரைக்கண்ணன், தமிழக எழுத்தாளர், கல்வெட்டு ஆராய்ச்சியாளர், நூல் மதிப்புரையாளர் (பி. 1934)
2014 – எஸ். ஜெ. தம்பையா, இலங்கை-அமெரிக்க மானிடவியலாளர், கல்வியாளர் (பி. 1929)
2015 – ரஜினி கோத்தாரி, இந்திய அரசியல் அறிஞர் (பி. 1928)
2016 – எம். கே. ஏ. டி. எஸ். குணவர்தனா, இலங்கை அரசியல்வாதி (பி. 1947)
சிறப்பு நாள் தொகு
இயேசுவின் திருமுழுக்கு (மாக்கடோனியக் குடியரசு)
கொக்பொரோக் நாள் (திரிபுரா, இந்தியா)
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 8807414648 இந்த எண்ணை இணைக்கவும்