TNPSC: குரூப் 2 தேர்வில் பெரியாரின் சாதியை குறிப்பிட்ட கேள்விக்கு டிஎன்பிஎஸ்சி வருத்தம் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, November 12, 2018

TNPSC: குரூப் 2 தேர்வில் பெரியாரின் சாதியை குறிப்பிட்ட கேள்விக்கு டிஎன்பிஎஸ்சி வருத்தம்

குரூப் 2 தேர்வில் பெரியாரின் சாதியை குறிப்பிட்டு கேள்வி கேட்கப்பட்ட விவகாரத்தில் நடந்தது தவறு தான், இதுபோன்ற தவறுகள் இனி நடக்காது என டிஎன்பிஎஸ்சி வருத்தம் தெரிவித்துள்ளது தமிழகம் முழுவதும் குரூப்- 2 முதல்நிலைத் தேர்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது
தேர்வு வினாத்தாளில், திருச்செங்கோடு ஆசிரமத்தை நிறுவியவர் யார் என்ற கேள்விக்கு இ.வெ.ராமசாமி நாயக்கர், காந்திஜி, ராஜாஜி, சி.என். அண்ணாதுரை என்பதில் தந்தை பெரியாரின் பெயர் தவறாகவும், நாயக்கர் என சாதி பெயரையும் சேர்த்து அச்சிடப்பட்டுள்ளது.
இதன்மூலம் தந்தை பெரியார் அவமதிக்கப்பட்டு உள்ளதாக சர்ச்சை எழுந்துள்ளது. தமிழக அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், குரூப் 2 தேர்வில் பெரியாரின் சாதி பெயரை குறிப்பிட்டு கேள்வி கேட்கப்பட்ட விவகாரத்தில் நடந்தது தவறு தான், இதுபோன்ற தவறுகள் இனி நடக்காது என டிஎன்பிஎஸ்சி வருத்தம் தெரிவித்துள்ளது
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 8807414648 இந்த எண்ணை இணைக்கவும்

Total Pageviews