'அறிவியல் அறிவோம்' கனவு தோன்ற காரணம் என்ன ? - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, November 14, 2018

'அறிவியல் அறிவோம்' கனவு தோன்ற காரணம் என்ன ?

樂 கனவு தோன்ற காரணம் என்ன ? மனிதன் தன் வாழ்வின் மூன்றில் ஒரு பகுதி நேரத்தைத் தூக்கத்தில் கழிக்கிறான். ஆழ்மனதில் பதிந்த விஷயங்கள் நேரடியான நிகழ்வுகளாகக் கனவில் தோன்றாது. குறிப்பிட்ட சில குறியீடுகளுடன் இணைந்தே வரும். உதாரணமாக பாம்பு, பூக்கள் போன்றவை.
எதிர்காலத்தில் நடக்கப்போகும் விஷயங்கள் கனவுகளாக வருவதற்குப் பெயர், ‘ப்ரீகாக்னிட்டிவ் ட்ரீம்’ (Precognitive Dream). நிஜவாழ்வில் எதிர்பார்த்து நடக்காத விஷயங்கள், நிறைவேறாத ஆசைகள் வருத்தமான நிகழ்வுகள் நம் ஆழ்மனதில் பதிந்துவிடும். அவையே தூங்கும்போது கனவுகளாக வெளிப்படுகின்றன. இதுதவிர கனவுகள் வருவதற்கான பல காரணங்கள் இருக்கின்றன. ஒரு கனவின் கால அளவு 5 முதல் 20 நிமிடங்கள் வரை. ஒருநாள் இரவில் மூன்று முதல் ஆறு கனவுகள்வரை வரலாம். உறக்கத்தின்போது, கனவில் தோன்றும் நிகழ்வுகளும் நிஜத்தில் நடக்கும் நிகழ்வுகளும் ஒன்றிணைந்து வந்தால், அதற்கு, ‘சென்ஸரி இன்கார்ப்பரேஷன்’ (Sensory Incorporation) என்று பெயர்.
உதாரணமாக, நாம் தூங்கிக் கொண்டிருக்கும்போது கடிகார முள் அல்லது அலாரம் ஒலிக்கும் சத்தம் நம் காதுகளில் விழுந்தால் அது கனவில் கேட்பதுபோன்று இருக்கும். இதற்கு, ‘சவுண்ட் இன்கார்ப்பரேஷன்’ (Sound Incorporation) என்று பெயர். நிஜத்தில், சமைக்கும் உணவின் வாசம்கூடக் கனவில் வரும். அதற்கு ‘ஸ்மெல் இன்கார்ப்பரேஷன்’ (Smell Incorporation) என்று பெயர். தூங்கும்போது யாரோ நம்மை அழுத்துவதுபோல் இருந்தால் அது ‘இன்க்யூபஸ் ஹாலுசினேஷன்’ (Incubus Hallucination) எனப்படும் மாய உணர்வு.
கனவுகளில் பெரும்பாலும் பயம், கோபம், சோகம் மற்றும் எதிர்மறையான உணர்வுகள்தான் அதிகமாகத் தோன்றும். தூங்கி எழுந்த ஐந்து நிமிடத்துக்குள் தூக்கத்தில் கண்ட கனவின் 60 சதவிகித நிகழ்வுகள் மறந்துவிடும். நாம் கனவு காண்கிறோம் என்று தெரிந்தே காண்பது `லூசிட் ட்ரீமிங்’ (Lucid Dreaming). உலகின் மொத்த மக்கள்தொகையில் 50 சதவிகிதம் பேருக்காவது இந்த ‘லூசிட் ட்ரீமிங்’ வந்திருக்கும். ஒரே கனவு மீண்டும் மீண்டும் வந்தால் மனநல மருத்துவரைச் சந்தித்து ஏன் அவ்வாறு வருகிறது என்று தெரிந்துகொள்வது நல்லது.
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 8807414648 இந்த எண்ணை இணைக்கவும்

Total Pageviews