உலக வரலாற்றில் இன்று: நவம்பர் 7 (November 7) - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, November 07, 2018

உலக வரலாற்றில் இன்று: நவம்பர் 7 (November 7)




நவம்பர் 7 (November 7) கிரிகோரியன் ஆண்டின் 311 ஆம் நாளாகும்.
நெட்டாண்டுகளில் 312 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 54 நாட்கள் உள்ளன.

நிகழ்வுகள்
335 – அலெக்சாந்திரியாவின்
அத்தனாசியார்
கான்ஸ்டண்டினோபில் நகருக்கு
தானியங்களை எடுத்துச் செல்வதற்குத் தடையாக இருந்தார் எனக் குற்றம் சாட்டப்பட்டு நாடு கடத்தப்பட்டார்.
1492 – உலகின் மிகப் பழமையான
விண்வீழ்கல் என்சீசைம் பிரான்சில்
கோதுமை வயல் ஒன்றில் வீழ்ந்தது.
1665 – உலகின் பழமையானதும் இப்போதும் வெளிவரும் த லண்டன் கசெட் முதலாவது இதழ் வெளியானது.
1775 – வட அமெரிக்காவில் பிரித்தானியப் படைகளில் இணைந்த அடிமைகள் அனைவருக்கும் அவர்களது உரிமையாளர்களிடம் இருந்து முழுமையான விடுதலை பெற்றுக் கொடுக்கும் உடன்பாட்டில் வர்ஜீனியா குடியேற்றத்தின் பிரித்தானிய ஆளுநர் ஜான் மறே கையெழுத்திட்டார்.

1893 – அமெரிக்காவில் கொலராடோ மாநிலத்தில் பெண்களுக்கு வாக்குரிமை வழங்கப்பட்டது.
1907 – மெக்சிக்கோவில் யேசுசு கார்சியா என்பவர் டைனமைட்டு நிரப்பப்பட்ட எரியும் தொடருந்தை ஆறு கிமீ தூரம் தனிமையான இடத்துக்கு செலுத்தி வெடிக்க வைத்து நக்கோசாரி டி கார்சியா கிராமம் எரியாமல் காப்பாற்றினார்.
1910 – உலகின் முதலாவது விமானத் தபால் பொதிச் சேவை
ரைட் சகோதரர்களால் ஒகையோவில் ஆரம்பிக்கப்பட்டது.
1913 – அமெரிக்காவின் வடமேற்குப் பகுதி, மற்றும் கனடாவில்
ஒண்டாரியோ பகுதிகளை பெரும்
புயல் தாக்கியது. 250 பேர் உயிரிழந்தனர், பெரும் சேதம் ஏற்பட்டது.
1916 – அமெரிக்காவில் பாஸ்டன் நகரில் தொடருந்து எச்சரிக்கைக் கதவுகளை உடைத்து கால்வாய் ஒன்றில் வீழ்ந்ததில் 46 பேர் உயிரிழந்தனர். [1]
1917 – அக்டோபர் புரட்சி :
விளாதிமிர் லெனின் தலைமையில் கம்யூனிசப் புரட்சியாளர்கள் உருசியாவின் இடைக்கால அரசாங்கத்தைக் கவிழ்த்தனர். (பழைய யூலியன் நாட்காட்டியில் இது அக்டோபர் 25 இல் இடம்பெற்றது).
போல்செவிக்குகள் குளிர்கால அரண்மனையைக் கைப்பற்றினர்.

1917 – முதலாம் உலகப் போர் :
பிரித்தானியப் படையினர்
உதுமானியரிடம் இருந்து இருந்து
காசாப் பகுதியைக் கைப்பற்றினர்.
1918 – மேற்கு சமோவாவில் பரவிய
ஒரு வித நச்சு நோய் காரணமாக 7,542 பேர் (20% மக்கள் தொகை) ஆண்டு முடிவிற்குள் இறந்தனர்.
1919 – உருசியப் புரட்சியின் இரண்டாம் ஆண்டு நினைவு நாளன்று, 10,000 இற்கும் அதிகமான பொதுவுடைமைவாதிகள் அமெரிக்காவின் 23 நகரங்களில் கைது செய்யப்பட்டனர்.
1929 – நியூயார்க் நவீனக்கலை அருங்காட்சியகம் பொதுமக்களுக்காகத் திறக்கப்பட்டது.
1931 – மா சே துங் சீன சோவியத் குடியரசை அக்டோபர் புரட்சியின் நினைவு நாளில் அறிவித்தார்.
1940 – வாசிங்டனில் டகோமா குறும்பாலம் அமைக்கப்பட்டு நான்கு மாதங்களே ஆன நிலையில், கடும் புயலில் சிக்கி இடிந்து வீழ்ந்தது.
1941 – இரண்டாம் உலகப் போர் :
சோவியத் மருத்துவக் கப்பல்
ஆர்மீனியா நாட்சி ஜெர்மனியின் விமானக் குண்டுவீச்சில் சேதமடைந்து மூழ்கியது. 5,000 இற்கும் அதிகமானோர் உயிரிழந்தனர்.
1944 – சோவியத் உளவாளி ரிச்சார்டு சோர்கி சப்பானியரால் கைப்பற்றப்பட்டுத் தூக்கிலிடப்பட்டார்.
1944 – பிராங்க்ளின் ரூசவெல்ட் நான்காவது தடவையாக ஐக்கிய அமெரிக்காவின் அரசுத்தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
1956 – சூயெசு நெருக்கடி :
எகிப்தில் இருந்து உடனடியாக வெளியேறுமாறு ஐக்கிய இராச்சியம், பிரான்சு, இசுரேல் ஆகியவற்றை ஐக்கிய நாடுகள் பொதுச் சபை கேட்டது.

1956 – அங்கேரியப் புரட்சி, 1956:
சோவியத் -ஆதரவு யானொசு காதர் புடாபெஸ்ட் திரும்பி, அங்கேரியின் அடுத்த தலைவராகப் பொறுப்பேற்றுக் கொண்டார்.
1975 – வங்காளதேசத்தில் , அபூ தாகிர் தலைமையில் படையினர் பிரிகேடியர் காலிது மொசாரபைக் கொலை செய்து,
வீட்டுக் காவலில் வைக்கப்பட்டிருந்த இராணுவத் தலைவரும், பின்னாளைய
அரசுத்தலைவருமான சியாவுர் ரகுமானை விடுவித்தனர்.
1983 – அமெரிக்க மேலவைக் கட்டடத்தில் குண்டு வெடித்து, பெரும் சேதம் ஏற்பட்டது.
1987 – தூனிசியாவில் , அபீப் போர்கீபா தலைமையிலான அரசு கவிழ்க்கப்பட்டது.
1989 – கிழக்கு செருமனியில் இடம்பெற்ற அரசுக்கு எதிரான போராட்டங்களை அடுத்து பிரதமர் வில்லி ஸ்டோப் தலைமையிலான அரசு பதவி விலகியது.
1991 – மேஜிக் ஜான்சன் தாம் எச்.ஐ.வி. தீநுண்மத்தை பெற்றுள்ளதாக அறிவித்து என். பி. ஏ. -இல் இருந்து வெளியேறினார்.
1994 – அமெரிக்காவின் வட கரொலைனா பல்கலைக்கழகத்தின் மாணவர் வானொலி நிலையம் உலகின் முதலாவது இணைய வானொலி சேவையை ஒலிபரப்பியது.
2000 – இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் நிமலன் சௌந்தரநாயகம் இனந்தெரியாதோரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
2002 – அமெரிக்கப் பொருட்களின் விளம்பரங்களை அறிவிக்க ஈரான் தடை செய்தது.

2007 – பின்லாந்து பாடசாலை ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஒன்பது பேர் கொல்லப்பட்டனர்.
2012 – குவாத்தமாலாவில் பசிபிக் கரையில் இடம்பெற்ற
நிலநடுக்கத்தில் 52 பேர் உயிரிழந்தனர்.

பிறப்புகள்
1186 – ஒகோடி கான் , மங்கோலியப் பேரரசர் (இ. 1241 )
1728 – ஜேம்ஸ் குக் , ஆங்கிலேயக் கடற்படைத் தலைவர், நாடுகாண் பயணி (இ. 1779 )
1812 – வீர புரன் அப்பு, இலங்கை விடுதலைப் போராட்ட செயற்பாட்டாளர் (இ. 1848 )
1858 – பிபின் சந்திர பால் , இந்திய செயற்பாட்டாளர், கல்வியாளர் (இ.
1932 )
1867 – மேரி கியூரி, நோபல் பரிசு பெற்ற போலந்து இயற்பியலாளர், வேதியியலாளர் (இ. 1934 )
1879 – லியோன் திரொட்ஸ்கி ,
செஞ்சேனையைத் தோற்றுவித்த உருசியப் புரட்சியாளர் (இ. 1940 )
1888 – சி. வி. இராமன், நோபல் பரிசு பெற்ற இந்திய இயற்பியலாளர் (இ.
1970 )
1909 – என். ஜி. ரங்கா , ஆந்திர அரசியல்வாதி, இந்திய விடுதலைப் போராட்ட செயற்பாட்டாளர் (இ. 1995 )
1913 – சமர் முகர்ஜி , மேற்கு வங்க இடதுசாரி அரசியல்வாதி (இ. 2013)
1913 – அல்பேர்ட் காம்யு , நோபல் பரிசு பெற்ற பிரான்சிய எழுத்தாளர் (இ. 1960 )
1918 – பில்லி கிரஹாம், அமெரிக்க எழுத்தாளர்
1922 – அழ. வள்ளியப்பா , தமிழகக் கவிஞர், எழுத்தாளர் (இ. 1989 )
1929 – எரிக் காண்டல், நோபல் பரிசு பெற்ற ஆத்திரிய-அமெரிக்க மருத்துவர்
1938 – டொனால்டு பிளெமிங் , கனடிய வேதியியலாளர்
1939 – பார்பாரா இலிசுகோவ் , American அமெரிக்கக் கணினி அறிவியலாளர்
1941 – எர்னஸ்ட் முத்துசாமி,
குவாதலூப்பே -பிரான்சிய அரசியல்வாதி
1943 – மைக்கேல் ஸ்பென்ஸ், நோபல் பரிசு பெற்ற அமெரிக்கப் பொருளியலாளர்
1943 – சில்வியா கார்ட்ரைட் , நியூசிலாந்து அரசியல்வாதி

1954 – கமல்ஹாசன் , தமிழக நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர், அரசியல்வாதி
1959 – சிறிநிவாஸ் , இந்தியப் பாடகர்
1969 – நந்திதா தாஸ் , இந்தியத் திரைப்பட நடிகை, இயக்குநர்
1975 – வெங்கட் பிரபு, தமிழ்த் திரைப்பட நடிகர், இயக்குநர்
1980 – கார்த்திக் , தென்னிந்தியத் திரைப்படப் பின்னணிப் பாடகர்
1981 – அனுசுக்கா செட்டி , இந்திய நடிகை

இறப்புகள்
644 – உமறு இப்னு அல்-கத்தாப் , இசுலாமியக் கலீபா (பி. 590)
1627 – ஜஹாங்கீர் , முகலாயப் பேரரசர் (பி. 1569)

1836 – ஆ. குமாரசுவாமி, இலங்கைத் தமிழ் அரசியல்வாதி (பி. 1783 )
1862 – பகதூர் சா சஃபார் , முகலாயப் பேரரசர் (பி. 1775 )
1913 – ஆல்பிரடு அரசல் வாலேசு , பிரித்தானிய உயிரியலாளர் (பி.
1823 )
1947 – கோ. நடேசையர் , இந்திய-இலங்கை ஊடகவியலாளர், அரசியல்வாதி (பி. 1887 )
1951 – என். சி. வசந்தகோகிலம் , கருநாடக இசைப் பாடகி, நடிகை
1962 – எலினோர் ரூசுவெல்ட், அமெரிக்காவின் 39வது முதல் சீமாட்டி (பி. 1884 )
1978 – ஜீவராஜ் மேத்தா , குசராத்து மாநிலத்தின் 6வது முதலமைச்சர் (பி. 1887)
1981 – வில்லியம் ஜேம்ஸ் டியூரண்ட் , அமெரிக்க வரலாற்றாளர், மெய்யியலாளர் (பி. 1885 )
1993 – திருமுருக கிருபானந்த வாரியார் , இந்திய ஆன்மிக சொற்பொழிவாளர் (பி. 1906 ).
2000 – நிமலன் சௌந்தரநாயகம் , இலங்கை அரசியல்வாதி (பி. 1950 )
2000 – சி. சுப்பிரமணியம் , இந்திய அரசியல்வாதி (பி. 1910 )
2011 – ஜோ பிரேசியர், அமெரிக்கக் குத்துச்சண்டை வீரர் (பி. 1944)
2014 – தோர்ப்சான் சிக்கிலேண்டு , நார்வே வேதியியலாளர் (பி. 1923 )

சிறப்பு நாள்
அக்டோபர் புரட்சி நாள் (உருசியா (அதிகாரபூர்வமற்றது), பெலருஸ்,
கிர்கிசுத்தான் )

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 8807414648 இந்த எண்ணை இணைக்கவும்

Total Pageviews