TRB - சிறப்பாசிரியர் இறுதி தேர்வுப் பட்டியலில் தமிழ்வழி ஒதுக்கீட்டில் குளறுபடி! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, October 22, 2018

TRB - சிறப்பாசிரியர் இறுதி தேர்வுப் பட்டியலில் தமிழ்வழி ஒதுக்கீட்டில் குளறுபடி!

சிறப்பாசிரியர் தேர்வுப் பட்டியலில் ஓவியம், தையல் பாடப்பிரிவில் தமிழ்வழி ஒதுக்கீட்டில் அதிக மதிப்பெண் பெற்ற 300-க்கும் மேற்பட்ட தேர்வர்கள் ஹையர் கிரேடு தேர்வை தமிழ்வழியில் படித்ததற்கு சான்றிதழ் சமர்ப்பிக் கவில்லை என்று கூறி, ஆசிரியர் தேர்வு வாரியத்தால் தகுதிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இதனால், குறைந்த மதிப்பெண் பெற்ற பலர் தேர்வுப் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.
பட்டியலில் குளறுபடி அரசு பள்ளிகளில் காலியாக வுள்ள 1,325 சிறப்பாசிரியர் (தையல், ஓவியம், உடற்கல்வி, இசை) பணியிடங்களை நிரப்ப ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்தஆண்டு செப்டம்பர் 23-ம் தேதி எழுத்துத்தேர்வை நடத்தியது. எழுத்துத்தேர்வுக்கு 95 மதிப்பெண்ணும், வேலைவாய்ப்பு அலுவலக பதிவுமூப்புக்கு (சீனியாரிட்டி) 5 மதிப்பெண்ணும் நிர்ணயிக்கப்பட்டிருந்தன. எழுத்துத்தேர் வைத் தொடர்ந்து சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்பட்டு, கடந்த12-ம் தேதி இறுதி தேர்வுப் பட்டியல் வெளியிடப்பட்டது.அதில், ஓவியம், தையல் சிறப்பாசிரியர் தேர்வுப் பட்டியலில் தமிழ்வழி ஒதுக்கீட்டில் எழுத்துத் தேர்வு மற்றும் பதிவுமூப்பு சேர்த்து அதிக மதிப்பெண் பெற்றிருந்த பலரின் பெயர் விடுபட்டு,அதற்குப் பதில் அவர்களைக் காட்டிலும் குறைவான மதிப்பெண்பெற்றவர்களின் பெயர் இடம் பெற்றிருந்தது.ஓவிய ஆசிரியர் பதவிக்கு எஸ்எஸ்எல்சி முடித்து ஓவிய பாடத்தில் டிடிசி எனப்படும் தொழில் ஆசிரியர் சான்றிதழ் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அல்லது நுண்கலை பட்டதாரி யாக (பிஎப்ஏ) இருக்க வேண்டும். அதேபோல், தையல் ஆசிரியர் பதவிக்கு எஸ்எஸ்எல்சி தேர்ச்சியும் தையல் பாடத்தில் டிடிசிதேர்ச்சியும் அடிப்படை கல்வித் தகுதிகள் ஆகும்.
ஓவியம் வரைய தமிழ்வழி சான்று? இந்த நிலையில், அதிக மதிப்பெண் பெற்றும் தேர்வு பட்டியலில் பொதுப்பிரிவிலோ அல்லது தமிழ்வழி ஒதுக்கீட்டிலோ இடம்பெறாமல் பாதிக்கப்பட்ட தையல், ஓவியம் சிறப்பாசிரியர் தேர்வர்கள் சுமார் 300 பேர் கடந்த திங்கள்கிழமை ஆசிரியர் தேர்வு வாரியத்தில் விளக்கம் கேட்டனர்.தமிழ்வழி ஒதுக்கீட்டில் தங்க ளைக் காட்டிலும் குறைவான மதிப்பெண் பெற்றிருப்பர்கள் இடம்பெற்றிருப்பது குறித்து காரணம் கேட்டனர். அதற்குப் பதில் அளித்த ஆசிரியர் தேர்வுவாரிய அதிகாரிகள், ‘‘அடிப்படை கல்வித்தகுதி மற்றும் டிடிசி தகுதியை தமிழ்வழியில் படித்ததற்கு சான்றிதழ் வைத்திருக் கிறீர்கள். ஆனால், டிடிசிக்கு முந்தைய தேர்வான ஹையர் கிரேடு (ஓவியம் அல்லது தையல்) தேர்வுக்கு அதுபோன்று தமிழ்வழி சான்று வைக்காததால் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளீர்கள்” என்று பதில் அளித்தனர்.
ஹையர் கிரேடு தேர்வை நடத்தும் அரசு தேர்வுத்துறை தமிழ்வழியில் படித்ததற்கு சான்றிதழ் வழங்குவது கிடையாது என்று அவர்கள் விளக்கிக் கூறியதை ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரி கள் ஏற்கவில்லை. தேர்வர்களிட மிருந்து கோரிக்கைமனுக்களை மட்டும் பெற்றுக்கொண்டனர்.இதற்கிடையே, தமிழ்வழிச் சான்று பிரச்சினை தொடர்பாக சர்ச்சை எழுந்ததால், அரசு தேர் வுத் துறையானது, தொழில்நுட் பத் தேர்வுகளுக்கு தமிழ்வழியில் சான்றிதழ் வழங்குவதில்லைஎன்று ஆசிரியர் தேர்வு வாரியத் துக்கு கடந்த செவ்வாய்க்கிழமை தகவல் அனுப்பியது.
அதிக மதிப்பெண் தொழில்நுட்பத்தேர்வை நடத் திய அரசு தேர்வுத்துறையே தமிழ்வழியில் சான்றிதழ் வழங்க இயலாது என்று பலமுறை விளக்கம் அளித்துவிட்டதால், அதிகமதிப்பெண் பெற்றும் தேர்வுப் பட்டி யலில் இடம்பெறாத தையல், ஓவியம் சிறப்பாசிரியர் தேர்வர் கள் செய்வதறியாமல் திகைத்து நிற்கின்றனர். ஓவியம், தையல் ஹையர் கிரேடு தேர்வுக்கு தமிழ்வழியில் சான்றிதழ் வழங்கப்படாததால் எஸ்எஸ்எல்சி, டிடிசி கல்வித்தகுதி களுக்கானதமிழ்வழி சான்றிதழ்கள் அடிப்படையில் திருத்தப்பட்டபுதிய தேர்வுப் பட்டியல் வெளியிடப் பட வேண்டும் என்று பாதிக்கப்பட்ட தேர்வர்கள் கோரிக்கை விடுத்தனர். தமிழ்வழி சான்றிதழ் சர்ச்சையால் பாதிக்கப்பட்ட தேர் வர்கள் தற்போது நீதிமன்றத்தை நாட வேண்டிய சூழல் ஏற்பட் டுள்ளது.
தேர்வு வாரியம் விளக்கம் இந்தப் பிரச்சினை குறித்து ஆசிரியர் தேர்வுவாரியத்தின் உறுப்பினரும், சிறப்பாசிரியர் தேர்வுப் பட்டியல் தயாரிப்பு பொறுப்பு அலுவலருமான தங்க மாரியிடம் கேட்டபோது, “ஹையர் கிரேடு தேர்வுக்கு தமிழ்வழியில் சான்றிதழ் தர இயலாது என்று அத்தேர்வை நடத்திய அரசு தேர்வுத்துறை கூறியிருக்கலாம். ஆனால், தேர்வர்கள் தாங்கள் படித்த தனியார் பயிற்சி மையத் திலிருந்து தமிழ்வழியில் படித்ததற்கு சான்றிதழ் பெற்று சமர்ப் பித்திருக்கலாமே. அதுபோன்று பல தேர்வர்கள் தமிழ்வழி சான்றிதழ் கொடுத்திருக்கிறார்கள்” என்றார்.
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 8807414648 இந்த எண்ணை இணைக்கவும்

Total Pageviews