SBI ATM CARD பயன்படுத்துபவரா நீங்கள்..? இன்று முதல் கவனமாக இருங்க..! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, October 31, 2018

SBI ATM CARD பயன்படுத்துபவரா நீங்கள்..? இன்று முதல் கவனமாக இருங்க..!

எஸ்பிஐ வங்கியின் மேஸ்ட்ரோ மற்றும் கிளாசிக் வகை டெபிட் கார்டுகளில் தினசரி பணம் எடுப்பதற்கான உச்சவரம்பு குறைக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவு இன்று முதல் (அக்டோபர் 31) அமலுக்கு வருகிறது.
எஸ்பிஐ வங்கி மாஸ்டர் டெபிட் கார்டு, மேஸ்ட்ரோ டெபிட் கார்டு, கிளாசி டெபிட் கார்டு என பலவகையான டெபிட் கார்டுகளை வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வருகிறது. வங்கிக் கணக்கில் பணம் இருக்கும்பட்சத்தில் டெபிட் கார்டுகளை பயன்படுத்தி ஏடிஎம் வழியாக நாம் பணத்தை எடுத்துக் கொள்ளலாம். மேலும் பணமில்லா பரிவர்த்தனைக்கும் டெபிட் கார்டுகளை பயன்படுத்திக் கொள்ளலாம்.
இதனிடையே எஸ்பிஐ வங்கியின் மேஸ்ட்ரோ மற்றும் கிளாசிக் வகை டெபிட் கார்டுகளில் தினசரி பணம் எடுப்பதற்கான உச்சவரம்பு குறைக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக எஸ்பிஐ வங்கி கடந்த மாதம் அறிவிப்பு வெளியிட்டது. அதன்படி மேஸ்ட்ரோ மற்றும் கிளாசிக் வகை டெபிட் கார்டுகளில் தினசரி பணம் எடுப்பதற்கான உச்சவரம்பு 40,000 ரூபாயிலிருந்து 20,000 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவு நாளை முதல் அதாவது அக்டோபர் 31-ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.
ஏடிஎம்களில் நடைபெறும் மோசடி பணபரிவர்த்தனையை தடுக்கும் பொருட்டும், டிஜிட்டல், பணமில்லா பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் பொருட்டும் எஸ்பிஐ வங்கி இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. டெபிட் கார்டுகள் வழியாக தினசரி அதிக பணம் எடுக்க வேண்டும் என நினைப்பவர்கள் எஸ்பிஐ வங்கியின் உயர்வரம்பு கொண்டு டெபிட் கார்டுகளுக்கு மாறவும் வாடிக்கையாளர்களை எஸ்பிஐ கேட்டுக்கொண்டுள்ளது. எஸ்பிஐ வங்கி மீது ஏற்கனவே வாடிக்கையாளர்கள் பல வகையான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். பெருநகரங்கள், நகரங்களில் எஸ்பிஐ கணக்கு வைத்திருப்பவர்கள் குறைந்தபட்ச இருப்புத் தொகையாக ரூபாய் 3000 வங்கிக் கணக்கில் வைத்திருக்க வேண்டும்.
இல்லையென்றால் அபராதம் விதிக்கப்படும். இதேபோன்று எஸ்பிஐ ஏடிம் கார்டை பயன்படுத்தி எஸ்பிஐ ஏடிம்களில் மாதத்திற்கு 5 முறை மட்டுமே பணம் எடுக்க முடியும். மீறி எடுக்கும்பட்சத்தில் அபராதம் விதிக்கப்படும். அதேசமயம் எஸ்பிஐ கார்டை மற்ற வங்கியின் ஏடிஎம்களில் பயன்படுத்தினால் மாதத்திற்கு மூன்று முறை மட்டுமே கட்டணம் இல்லாமல் பணம் எடுக்க முடியும். இதுபோன்ற கடுமையான அறிவிப்புகளால் எஸ்பிஐ மீது ஏற்கனவே வாடிக்கையாளர்கள் அதிருப்தியில் இருக்கும் நிலையில் எஸ்பிஐயின் புதிய அறிவிப்பு வாடிக்கையாளர்களை மேலும் அதிருப்தி அடைய வைத்துள்ளது.
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 8807414648 இந்த எண்ணை இணைக்கவும்

Total Pageviews