ரெட் அலர்ட்' மழை அறிவிப்பு காரணமாக, தர்மபுரியில் இன்று (அக்.,6ல்) நடக்கவிருந்த பண்பாட்டு திறன் போட்டி, தேதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் சார்பில், 'கலா உத்சவ்' என்ற கலை விழா போட்டிகள், தமிழகத்தில் ஒருங்கிணைந்த பள்ளி கல்வித்திட்டம் மூலம் நடத்தப்பட்டு வருகிறது.
அதன்படி, தர்மபுரி மாவட்டத்தில் கலை, பண்பாட்டு திறன்களை மேம்படுத்த, ஒன்பது முதல், பிளஸ் 2 படிக்கும் மாணவ, மாணவியருக்கு இசை, நடனம், நாடகம், ஓவியம், பெயின்டிங் போன்ற போட்டிகள், பள்ளி அளவில் கடந்த வாரம் நடத்தப்பட்டது. இதையடுத்து, மாவட்ட போட்டிகள், தர்மபுரி அவ்வையார் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் இன்று (அக்., 6ல்), நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. இந்நிலையில், 'ரெட் அலர்ட்' மழை அறிவிப்பை தொடர்ந்து, தேதி குறிப்பிடப்படாமல் போட்டிகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக, மாவட்ட பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது