உலக வரலாற்றில் இன்று: அக்டோபர் 24 ( October 24 ) - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, October 24, 2018

உலக வரலாற்றில் இன்று: அக்டோபர் 24 ( October 24 )



அக்டோபர் 24 ( October 24 )
கிரிகோரியன் ஆண்டின் 297 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 298 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 68 நாட்கள் உள்ளன.
நிகழ்வுகள்
69 – வெசுப்பாசியானுக்கு விசுவாசமான படையினர்
உரோமைப் பேரரசர் விட்டேலியசின் படைகளைத் தோற்கடித்தனர்.
1260 – சார்ட்டேர்ஸ் கதீட்ரல்
பிரான்சின் ஒன்பதாம் லூயி மன்னனால் திறந்து வைக்கப்பட்டது. இது தற்போது
யுனெசுக்கோவினால் உலகப் பாரம்பரியக் களமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
1605 – முகலாயப் பேரரசர்
ஜகாங்கீரின் முடிசூட்டு விழா இடம்பெற்றது.
1648 – வெஸ்ட்ஃபாலியா அமைதி ஒப்பந்தம் முப்பதாண்டுப் போரை முடிவுக்குக் கொண்டு வந்தது.
1795 – போலந்து-லித்துவேனியா பொதுநலவாயம் கூட்டமைப்பு முற்றாகக் கலைக்கப்பட்டு
ஆஸ்திரியா , புருசியா, மற்றும்
உருசியா ஆகியன தமக்குள் பங்கிட்டுக் கொண்டன.

1801 – மருது பாண்டிய சகோதரர்களும் அவர்கள் குடும்பத்தைச் சேரந்த 500க்கும் மேற்பட்ட மன்னர் குடும்பத்தாரும்
வெள்ளையர்களால் தூக்கிலிடப்பட்டனர்.
1851 – யுரேனசு கோளைச் சுற்றும் உம்பிரியல், ஏரியல் ஆகிய நிலாக்களை வில்லியம் இலாசல் கண்டுபிடித்தார்.
1857 – உலகின் முதலாவது
காற்பந்தாட்ட அணி செபீல்டு
இங்கிலாந்தில் ஆரம்பிக்கப்பட்டது.
1861 – ஐக்கிய அமெரிக்காவில் கண்டங்களுக்கிடையேயான முதலாவது தந்தித் தொடர்பு ஏற்படுத்தப்பட்டது.
1871 – லாஸ் ஏஞ்சலஸ் நகரில் 20 வரையான சீனக் குடியேறிகள் சித்திரவதை செய்யப்பட்டுக் கொலை செய்யப்பட்டனர்.
1902 – குவாத்தமாலாவின் சாண்டா மரியா எரிமலை வெடிக்க ஆரம்பித்தது. இது 20-ஆம் நூற்றாண்டின் மூன்றாவது மிகப்பெரிய எரிமலை வெடிப்பு ஆகும்.
1911 – வட கரொலைனாவில் ரைட் சகோதரர்கள் தமது வானூர்தியில் வானில் 9 நிமிடங்கள் 45 செக்கன்கள் பறந்தார்கள்.
1912 – முதலாவது பால்கான் போர்: குமனோவா என்ற இடத்தில் இடம்பெற்ற உதுமானியப் பேரரசுக்கு எதிரான போரில்
செர்பியா வெற்றி பெற்றது.

1917 – முதலாம் உலகப் போர்: கப்பரெட்டோ சமரில் ஆத்திரியா-அங்கேரி, செருமனியப் படைகளிடம் இத்தாலி பெரும் தோல்வியடைந்தது.
1917 – போல்செவிக் செம்படையினர்
உருசியாவில் அரசக் கட்டடங்களைக் கைப்பற்ற ஆரம்பித்தனர். அக்டோபர் புரட்சியின் முதல் நிகழ்வுகள் இவையாகும்.
1929 – கறுப்பு வியாழன் :
நியூயார்க் பங்குச் சந்தையில்
பங்குகள் சரிவு.
1930 – பிரேசிலில் இடம்பெற்ற
இராணுவப் புரட்சியில் அரசுத்தலைவர் வாசிங்டன் லூயிசு பதவியில் இருந்து அகற்றப்பட்டார்.
1943 – நாடு கடந்த இந்திய அரசு முறைப்படி பிரித்தானியா மீதும் அமெரிக்கா மீதும் போரை அறிவித்தது.
1944 – இரண்டாம் உலகப் போர்:
முசாசி என்ற சப்பானியப் போர்க்கப்பலை அமெரிக்க விமானங்கள் தாக்கி மூழ்கடித்தன.
1945 – ஐக்கிய நாடுகள் அமைப்பு ஆரம்பிக்கப்பட்டது.
1946 – வி-2 இல. 13 என்ற
ஏவூர்தியில் பொருத்தப்பட்ட புகைப்படக் கருவி மூலம் முதன் முதலாக விண்ணில் இருந்து பூமியின் புகைப்படம் எடுக்கப்பட்டது.
1949 – ஐக்கிய நாடுகள் தலைமையகத்தின் அடிக்கல் நாட்டப்பட்டது.
1954 – டுவைட் டி. ஐசனாவர் தெற்கு வியட்நாமிற்கு ஐக்கிய அமெரிக்காவின் ஆதரவைத் தெரிவித்தார்.
1960 – சோவியத் ஒன்றியத்தின்
பைக்கனூர் விண்தளத்தில் ஆர்-16
ஏவுகணை வெடித்ததில் நூற்றுக்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர்.
1964 – வடக்கு றொடீசியா ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து விடுதலை பெற்று சாம்பியா என்னும் பெயரைப் பெற்றது.
1980 – போலந்து அரசு சொலிடாரிட்டி தொழிற்சங்கத்தை அங்கீகரித்தது.

1994 – கொழும்பில் தேர்தல் கூட்டத்தில் நடந்த குண்டு வெடிப்பில் ஐக்கிய தேசியக் கட்சியின் சனாதிபதி வேட்பாளர்
காமினி திசாநாயக்கா உட்பட 52 பேர் கொல்லப்பட்டனர்.
1998 – டீப் ஸ்பேஸ் 1 என்ற
வால்வெள்ளி / சிறுகோள் திட்டம் ஆரம்பமானது.
2003 – கான்கோர்டு விமானம் தனது கடைசி வணிக-நோக்குப் பயணத்தை மேற்கொண்டது.
2007 – சந்திரனின் சுற்றுப்பாதையில் நிலவைச் சுற்றிவரும் முதல் சீன ஆளற்ற விண்கலம் 'சாங்-ஒன்று' தென்மேற்கு சீனாவின் ஏவுதளத்திலிருந்து வெற்றிகரமாக ஏவப்பட்டது.
பிறப்புகள்
51 – டமிசன் , உரோமைப் பேரரசர் (இ.
96 )
1632 – ஆன்டன் வான் லீவன்ஹூக் , டச்சு உயிரியலாளர் (இ. 1723 )
1775 – பகதூர் சா சஃபார், இந்தியாவின் கடைசி முகலாயப் பேரரசர் (இ. 1862 )
1804 – வில்கெம் எடுவர்டு வெபர் , செருமானிய இயற்பியலாளர் (இ.
1891 )

1827 – ரிப்பன் பிரபு , பிரித்தானிய அரசியல்வாதி, இந்திய வைசிராய் (இ. 1909 )
1890 – சிசிர் குமார் மித்ரா , இந்திய இயற்பியலாளர் (இ. 1963 )
1914 – இலட்சுமி சாகல் , இந்திய விடுதலைப் போராட்ட செயற்பாட்டாளர், இந்தியத் தேசிய இராணுவப் போராளி (இ. 2012 )
1915 – பாப் கார்னே , அமெரிக்க எழுத்தாளர் (இ. 1998 )
1921 – ஆர். கே. லட்சுமண் , இந்திய ஓவியர் (இ. 2015 )
1921 – ஏ. கே. வேலன், தமிழக எழுத்தாளர்
1924 – சி. கதிரவேலுப்பிள்ளை, இலங்கைத் தமிழ் அரசியல்வாதி (இ.
1981 )
1932 – இசுடீபன் கோவே , அமெரிக்க எழுத்தாளர், கல்வியாளர் (இ. 2012 )
1940 – கி. கஸ்தூரிரங்கன் , இந்திய விண்வெளி அறிவியலாளர்
1954 – மால்கம் டேர்ன்புல் , ஆத்திரேலியாவின் 29வது பிரதமர்
1957 – இ. ஜெயராஜ் , இலங்கை கம்பன் கழக அமைப்பாளர்
1971 – மல்லிகா செராவத் , இந்திய நடிகை
1980 – லைலா , தென்னிந்தியத் திரைப்பட நடிகை
1983 – தீபச்செல்வன் , ஈழத்து எழுத்தாளர், ஊடகவியலாளர்
1992 – துளசி தருமலிங்கம் , இலங்கை-செருமனிய குத்துச்சண்டை வீரர்
இறப்புகள்

1601 – டைக்கோ பிராகி , டென்மார்க் வானியலாளர் (பி. 1546 )
1801 – மருது பாண்டியர் , இந்திய சுதந்திர போராட்ட வீரர்கள்
1869 – ஜோசப் ஜாக்சன் லிஸ்டர் , பிரித்தானிய இயற்பியலாளர் (பி.
1786 )
1870 – அந்தோனி மரிய கிளாரட் , எசுப்பானிய, கத்தோலிக்க மறைபோதகர் (பி. 1807 )
1953 – மு. கதிரேசச் செட்டியார் , தமிழகத் தமிழறிஞர் (பி. 1881 )
1956 – எச். என். ரிட்லி , பிரித்தானியத் தாவரவியலாளர், மலாயாவில் ரப்பர் மரங்களை அறிமுகப்படுத்தியவர் (பி. 1885 )
1981 – எடித் எட் , அமெரிக்க ஆடை வடிவமைப்பாளர் (பி. 1897 )
1991 – இசுமத் சுகதாய் , இந்திய எழுத்தாளர் (பி. 1915 )
1994 – காமினி திசாநாயக்கா , இலங்கை அரசியல்வாதி (பி. 1942 )
2005 – றோசா பாக்ஸ் , அமெரிக்க செயற்பாட்டாளர் (பி. 1913 )
2006 – தரம்பால், இந்திய காந்தியவாதி, வரலாற்று ஆய்வாளர் (பி. 1922 )
2011 – ஜோன் மெக்கார்த்தி , அமெரிக்கக் கணினி அறிவியலாளர், உணரறிவியலாளர் (பி. 1927 )

2013 – மன்னா தே, இந்தியப் பாடகர் (பி. 1919 )
2014 – தேனுகா , கலை, இலக்கிய விமரிசகர்
2014 – எஸ். எஸ். ராஜேந்திரன் , தமிழ்த் திரைப்பட நடிகர் (பி. 1928 )
சிறப்பு நாள்
உலக இளம்பிள்ளை வாத நாள்
விடுதலை நாள் ( சாம்பியா, ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து 1964)
ஐக்கிய நாடுகள் நாள்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 8807414648 இந்த எண்ணை இணைக்கவும்

Total Pageviews