உலக வரலாற்றில் இன்று: அக்டோபர் 18 ( October 18 ) - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, October 18, 2018

உலக வரலாற்றில் இன்று: அக்டோபர் 18 ( October 18 )




அக்டோபர் 18 ( October 18 )
கிரிகோரியன் ஆண்டின் 291 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 292 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 74 நாட்கள் உள்ளன.
நிகழ்வுகள்
320 – கிரேக்க மெய்யியலாளர் பாப்பசு வலய மறைப்பு ஒன்றை அவதானித்தார்.
1009 – எருசலேமின்
திருக்கல்லறைத் தேவாலயம் என்ற கிறித்தவத் தேவாலயம் கலீபா அல்-அக்கீம் அல்லா என்பவரால் முற்றாக அழிக்கப்பட்டது.
1081 – டிராச்சியம் நகரில் இடம்பெற்ற போரில் நோர்மானியர்
பைசாந்தியரைத் தோற்கடித்தனர்.
1356 – சுவிட்சர்லாந்தில் இடம்பெற்ற
நிலநடுக்கத்தில் பேசெல் நகரம் முற்றாக அழிந்தது.
1648 – அமெரிக்காவின் முதலாவது தொழிற்சங்கத்தை
பாஸ்டன் செம்மார்கள் ஆரம்பித்தனர்.
1748 – ஆசுத்திரிய வாரிசுரிமைப் போர் முடிவுக்கு வந்தது.
1860 – இரண்டாம் அபினிப் போர் முடிவுக்கு வந்த்து.
1867 – உருசியப் பேரரசிடம் இருந்து

அலாஸ்கா மாநிலத்தை ஐக்கிய அமெரிக்கா 7.2 மில்லியன்
அமெரிக்க டாலர் விலை கொடுத்து வாங்கியது. இந்நாள்
அலாஸ்கா நாள் எனக் கொண்டாடப்படுகிறது.
1898 – ஐக்கிய அமெரிக்கா
புவெர்ட்டோ ரிக்கோவை எசுப்பானியாவிடம் இருந்து கைப்பற்றியது.
1912 – முதலாம் பால்கான் போர்:
செர்பிய மன்னர் முதலாம் பீட்டர் தனது நாடு போரில் இறங்குகிறது என செர்பிய மக்களுக்கு அறிவித்தார்.
1921 – சோவியத் ஒன்றியத்தில்
கிரிமிய தன்னாட்சி சோவியத் சோசலிசக் குடியரசு அமைக்கப்பட்டது.
1922 – பிபிசி வானொலி ஆரம்பிக்கப்பட்டது.
1929 – கனடாவில் பெண்களும்
மனிதர்கள் என சட்டபூர்வமாக எழுதப்பட்டது.
1944 – சோவியத் ஒன்றியம்
செக்கோசிலோவாக்கியாவை முற்றுகையிட்டு நாட்சி ஜெர்மனியிடம் இருந்து கைப்பற்றியது.
1945 – வெனிசுவேலாவில் இடம்பெற்ற இராணுவப் புரட்சியை அடுத்து அதன் அரசுத்தலைவர் இசாயசு மெதினா அங்கரீட்டா பதவியிழந்தார்.
1954 – அமெரிக்காவின் டெக்சாசு இன்ஸ்ட்ருமெண்ட்சு நிறுவனம் முதலாவது டிரான்சிஸ்டர் வானொலியை அறிமுகப்படுத்தியது.
1967 – சோவியத் விண்கலம்

வெனேரா 4 வெள்ளிக் கோளை அடைந்தது. வேறொரு கோளின் வளிமண்டலத்தை அளந்த முதலாவது விண்கலம் இதுவாகும்.
1991 – அசர்பைஜான் சோவியத் ஒன்றியத்திடம் இருந்து விடுதலையை அறிவித்து விலகியது.
1991 – நாகப்பட்டினம் மாவட்டம் அமைக்கப்பட்டது.
2006 – ஈழப்போர் : காலி கடற்படைத்தளத்தில் கடற்புலிகள் நடத்திய தாக்குதலில் பல கடற்படைக் கலங்கள் அழிக்கப்பட்டன.
2007 – கராச்சியில் முன்னாள்
பாக்கித்தான் பிரதமர் பெனசீர் பூட்டோ மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 139 பேர் கொல்லப்பட்டனர், 450 இற்கும் அதிகமானோர் காயமடைந்தனர். பூட்டோ காயமெதுவுமின்றி தப்பினார்.
பிறப்புகள்
1130 – சூ சி , சீன மெய்யியலாளர் (இ.
1200 )
1859 – என்றி பெர்குசன் ,
இலக்கியத்திற்கான நோபல் பரிசு பெற்ற பிரான்சிய மெய்யியலாளர் (இ. 1941 )
1882 – பல்லடம் சஞ்சீவ ராவ் , தமிழக புல்லாங்குழல் கலைஞர் (இ. 1962)
1910 – வி. நவரத்தினம் , இலங்கை அரசியல்வாதி (இ. 2006 )

1925 – நா. த. திவாரி, இந்திய அரசியல்வாதி
1950 – ஓம் பூரி , இந்திய நடிகர் (இ.
2017 )
1952 – ரோய் டயஸ் , இலங்கைத் துடுப்பாளர்
1956 – மார்ட்டினா நவரத்திலோவா , செக்-அமெரிக்க டென்னிசு வீராங்கனை
1960 – ஜான் குளோட் வான் டாம் , பெல்சிய நடிகர்
1965 – சாகிர் நாயக் , இந்திய இசுலாமிய மதகுரு
1973 – ஜேம்ஸ் ஃபோலி , அமெரிக்க ஊடகவியலாளர் (இ. 2014 )
1974 – அமீஷ் திரிபாதி , இந்திய நூலாசிரியர்
1978 – ஜோதிகா , தென்னிந்தியத் திரைப்பட நடிகை
1978 – செந்தில் குமார் , தமிழகத் திரைப்பட, தொலைக்காட்சி நடிகர், ஊடகவியலாளர்
1984 – பிரீடா பின்டோ , இந்திய நடிகை
1987 – சாக் எப்ரான், அமெரிக்க நடிகர்
இறப்புகள்
1417 – பன்னிரண்டாம் கிரகோரி (திருத்தந்தை) (பி. 1326 )
1775 – சிலுவையின் புனித பவுல், இத்தாலிய கிறித்தவ புனிதர், திருப்பாடுகள் சபை நிறுவனர் (பி. 1694 )

1871 – சார்ல்ஸ் பாபேஜ் , ஆங்கிலேயக் கணிதவியலாளர், பொறியியலாளர் (பி. 1791 )
1931 – தொமஸ் அல்வா எடிசன் ,
கிராமபோனைக் கண்டுபிடித்த
அமெரிக்கர் (பி. 1847 )
1934 – சான்டியாகோ ரமோன் கசல்,
நோபல் பரிசு பெற்ற எசுப்பானிய மருத்துவர் (பி. 1852 )
1966 – எலிசபெத் ஆர்டன், கனடிய-அமெரிக்க தொழிலதிபர் (பி. 1878 )
1985 – கே. ஆர். ராம்சிங், தென்னிந்தியத் திரைப்பட நடிகர் (பி. 1915 )
2004 – வீரப்பன் , சந்தனக் கடத்தல்காரர், (பி. 1952 )
2015 – தமிழினி, விடுதலைப் புலிகளின் மகளிர் அமைப்பின் அரசியல் பிரிவுத் தலைவி (பி.
1972 )
சிறப்பு நாள்
அலாஸ்கா நாள் ( அலாஸ்கா , அமெரிக்கா)
விடுதலை நாள் ( அசர்பைஜான் , சோவியத் ஒன்றியத்திடம் இருந்து, 1991)


👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 8807414648 இந்த எண்ணை இணைக்கவும்

Total Pageviews