தமிழகத்தில் அரசு, தனியார் மருத்துவக் கல்லூரிகளில் மருத்துவம் சார்ந்த பட்டப் படிப்புகளான பி.எஸ்சி நர்சிங், பி.பார்ம், பிபீடி, பிஏஎஸ்எல்பி (செவித்திறன், பேச்சு மற்றும் மொழி நோய் குறியியல்) உள்ளிட்ட 17 மருத்துவம் சார்ந்த பட்டப் படிப்புகள் உள்ளன. இந்த பட்டப்படிப்புகளுக்கு 2018-19-ம் கல்விt ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப விநியோகம் தமிழகம் முழுவதும் உள்ள 22 அரசு மருத்துவக் கல்லூரிகளில் கடந்த மாதம் 10-ம் தேதி தொடங்கி 19-ம் தேதி வரை நடைபெற்றது.
தரவரிசைப் பட்டியல்
பூர்த்தி செய்யப்பட்ட விண் ணப்பங்களைச் சமர்ப்பிக்க செப்.20-ம் தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்டிருந்தது. மாணவ, மாணவிகள் பூர்த்தி செய்யப் பட்ட விண்ணப்பங்களைச் சமர்ப் பித்தனர். விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப்பட்ட பின்னர், தகுதியான 14,520 பேருக்கான தரவரிசைப் பட்டியல் கடந்த மாதம் 27-ம் தேதி வெளியிடப்பட்டது.
இந்நிலையில் மருத்து வம் சார்ந்த பட்டப் படிப்பு களுக்கான கலந்தாய்வு தொடர்பாகt மருத்துவக் கல்வி இயக்குநரகம் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில், “மருத்துவம் சார்ந்த பட்டப் படிப்புகளுக்கான கலந்தாய்வு சென்னை அண்ணாசாலையில் உள்ள அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் வரும் 4-ம் தேதி தொடங்கி 16-ம் தேதி வரை (ஞாயிற்றுக்கிழமை தவிர) நடைபெற உள்ளது.
4-ம் தேதி காலை 9 மணி முதல் பகல் 2 மணி வரை மாற்றுத்திறனாளி பிரிவு, முன்னாள் ராணுவ வீரர்கள் வாரிசு பிரிவுக்கான கலந்தாய்வு நடைபெறும். பகல் 2 மணிக்கு மேல் பொதுப் பிரிவுக்கான கலந்தாய்வு தொடங்குகிறது.
ஒவ்வொரு நாளும் சுமார் 1,350 மாணவ, மாணவிகள் கலந்தாய்வுக்கு அழைக்கப்பட உள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
بحث هذه المدونة الإلكترونية
الثلاثاء، أكتوبر 02، 2018
Home
Counselling
MBBS
பி.எஸ்சி நர்சிங், பி.பார்ம் உள்ளிட்ட 17 மருத்துவம் சார்ந்த பட்டப்படிப்புக்கு 4-ம் தேதி கலந்தாய்வு தொடக்கம்
