எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவ மாணவிகளுக்கான கல்வி உதவி தொகையாக ரூபாய் 30,000/- வழங்கப்படுகிறது.
அரசு பள்ளியில் படிக்கும் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு மத்திய அரசின் உதவித் தொகை வழங்கப்படுகிறது. இதற்காக மாணவர்களுக்கு NMMS தேர்வு நடத்தப்படும்.
இதன் மூலம் தேர்ந்தெடுக்கப்படும் மாணவர்களுக்கு 9- ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வகுப்பு வரை மாதம் ரூபாய் 500 வீதம் ஆண்டு ஒன்றுக்கு உதவித் தொகையாக ரூ. 6,000 வழங்கப்படும். இதற்கான தேர்வு டிசம்பர் 1-ஆம் தேதி நடைபெறும்.
NMMS தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் தாங்கள் படிக்கும் பள்ளிகள் மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க முடியும். தலைமையாசிரியர்கள் தேவையான/விண்ணப்பங்களை செப்.17 முதல் செப்.30 வரை http://www.dge.tn.gov.in என்ற இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை மாணவர்கள் தாம் பயிலும் பள்ளியின் தலைமையாசிரியரிடம் தேர்வுக் கட்டணம் ரூ.50 உடன் அக்.1-ஆம் தேதிக்குள் ஒப்படைக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.