முந்தைய தேர்வுகளில் இருந்து அதிக வினாக்கள் ‘செட்’ தகுதித் தேர்வை மீண்டும் நடத்த வழக்கு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, June 12, 2018

Comments:0

முந்தைய தேர்வுகளில் இருந்து அதிக வினாக்கள் ‘செட்’ தகுதித் தேர்வை மீண்டும் நடத்த வழக்கு


முந்தைய தேர்வுகளில் கேட்கப்பட்ட வினாக்கள்
அதிகளவில் இருந்ததால், மாநில தகுதி தேர்வை (செட்) மீண்டும் நடத்த கோரிய வழக்கில் நோட்டீஸ் அனுப்ப ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது.

மதுரை, கோ.புதூரை சேர்ந்த மதுசூதனன், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு:உதவி பேராசிரியர் பணிடங்களுக்கான மாநில அளவிலான தகுதித்தேர்வை (செட்), கொடைக்கானல் அன்னை தெரசா பல்கலைக்கழகம் நடத்தியது. கடந்த மார்ச் 4ம் தேதி இந்த தேர்வு மாநிலம் முழுவதும் நடந்தது. தேர்வின் முதல் தாளில் முந்தைய தேர்வுகளில் கேட்கப்பட்ட 43 வினாக்கள் அப்படியே மீண்டும் கேட்கப்பட்டிருந்தன.

மொத்தமுள்ள 50 வினாக்களில் 43 வினாக்கள் மீண்டும் கேட்கப்பட்டதால், 86 மதிப்பெண்கள் அப்படியே கிடைக்கும் நிலை உருவாகியுள்ளது. ஒரே வினாக்கள் அடுத்தடுத்த தேர்வுகளிலும் கேட்கப்பட்டதால் தேர்வு எழுதியவர்கள் சுலபமாக தேர்வை எழுதியுள்ளனர்.

ஒவ்வொரு ஆண்டும் ஒரே வினாக்கள் இருந்தால் தகுதியற்ற பலர் தேர்ச்சி பெறும் நிலை உள்ளது. எனவே, இதுகுறித்து யூஜிசிக்கு நான் புகார் அளித்தேன். இதனிடையே அவசர, அவசரமாக தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன.

எனவே, நீதிமன்றம் தலையிட்டு தரமான வினாக்களைக் கொண்டு மீண்டும் புதிதாக மாநில தகுதி தேர்வு நடத்த உத்தரவிட வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனுவை நேற்று விசாரித்த நீதிபதிகள் சி.டி.செல்வம், ஏ.எம்.பஷீர் அகமது ஆகியோர், மனு குறித்து உயர்கல்வித்துறை முதன்மை செயலர், செட் - 2018க்கான கன்வீனர் (கொடைக்கானல் அன்ைன தெரசா பல்கலை. துணைவேந்தர்) ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு விசாரணையை அடுத்த வாரம் தள்ளி வைத்தனர்.

👍Join Our WhatsApp Group👇Click Here


No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews