The Tamil text in the image announces a mandatory physical education order for students in classes 6 through Plus-2, issued by the school education department.
It highlights concerns that physical education periods have historically been replaced by other subjects, prompting this new directive.
The directive requires schools to conduct physical education classes, provide special sports training, and strictly utilize specialized physical education teachers for these periods.
6 முதல் பிளஸ்-2 வரையிலான மாணவ-மாணவிகளுக்கு உடற்கல்வி வகுப்புகள் கட்டாயம் - பள்ளிக்கல்வித்துறை உத்தரவு
சென்னை, ஜூன்.8-பள்ளிகளில் படிக்கும் மாணவ-மாணவிகளுக்கான உடற் கல்வி வகுப்புகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பது இல்லை என்றும், அதற்கான பாடவேளைகள் ஒதுக்கப்பட்டாலும், அதில் பிற பாட ஆசிரியர்கள் வகுப்புகள் எடுக்கப்படுகிறது என்றும் குற்றச்சாட்டு சமீப காலங்களாக இருந்து வருகிறது. இந்த நிலையில் புதிதாக பொறுப்பேற்றுள்ள அரசு, பள்ளிக் கல்வித்துறை வாயிலாக அனைத்து பள்ளிகளுக்கும் ஒரு உத்த ரவை பிறப்பித்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதுதொடர்பாக நடந்த ஒரு ஆலோசனை கூட்டத்துக்கு பிறகு இந்த உத்தரவு வந்திருக்கிறது. அதில், '6-ம் வகுப்பு முதல் பிளஸ்-2வரையிலான மாணவ-மாணவிகளுக்கு உடற்கல்விவகுப்புகள் கட்டாயம் நடத்தப்பட வேண்டும் என்றும், சிறப்பு விளையாட் டுகள் குறித்து பயிற்சிகளும் அளிக்கப்பட வேண்டும் என்றும், உடற்கல்வி ஆசிரியர்கள் அவர்களுக்கான பாட வேளைகளை கண்டிப்பாகபயன்படுத்தவேண்டும்,பிறபாடஆசிரியர்களுக்கு அந்த பாடவேளையை தாரை வார்க்கக்கூடாது என்றும்' தெரி விக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவு மாணவ-மாணவிகளுக்கும், உடற்கல்வி ஆசிரியர்களுக்கும் மகிழ்ச்சியான செய்தியாக வலம் வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.