Breaking

Saturday, June 13, 2026

பதவி உயர்வு அல்லது பணியிட மாறு தலைக் காரணம் காட்டி, ஓய்வுபெற்ற அரசு ஊழியர்களின் அடிப்படை ஓய்வூதியத் தொகையைக் குறைக்கக் கூடாது - சென்னை உயர்நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு

பதவி உயர்வு அல்லது பணியிட மாறு தலைக் காரணம் காட்டி, ஓய்வுபெற்ற அரசு ஊழியர்களின் அடிப்படை ஓய்வூதியத் தொகையைக் குறைக்கக் கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு வழங்கியுள்ளது. மேலும், பாதிக்கப்பட்ட முதியவரிடம் இருந்து பிடித்தம் செய்யப் பட்ட ரூ. 2,69,900 தொகையையும் 12 வாரங்க ளுக்குள் திரும்ப ஒப்படைக்க உத்தரவிட் டுள்ளது.

நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்த 83 வயது மூத்த குடிமகன் ஆர். கண்ணப்பனின் அடிப்படை ஓய்வூதியத்தை ரூ.10,650 லிருந்து ரூ.8,724 ஆகக் குறைத்து, கடந்த காலங்களில் கூடுதலாக வழங்கப்பட்டதாகக் கூறி ரூ. 2,69,900 தொகையையும் கருவூலக் கணக்குத்துறை அதிகாரிகள் தவறாகப் பிடித்தம் செய்தனர். இதனை எதிர்த்து கண்ணப்பன் தரப்பில் சென்னை உயர்நீதி மன்றத்தில் 2022–ல் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கில் கண்ணப்பன் தரப்பு | வழக்கறிஞர்கள் ஆர். ரெங்கராமானுஜம், | வி.எஸ். ஜெகதீசன், வி. பொன்னுதுரை மற்றும் ஜி. சுதாங்கன் ஆகியோர் மிகச் சிறந்த சட்டப் போராட்டத்தை முன்னெடுத் தனர். தமிழ்நாடு அரசுப்பணி விதிகளின்படி இந்த நியமனம் என்பது ‘பணியிட மாறுதல்’

மட்டுமே தவிர பதவி உயர்வு அல்ல என்றும், அரசின் அடிப்படை விதி 22(11) (i)-இன் படி ஓய்வூதியத்தைக் குறைக்க சட்டத்தில் இடமில்லை என்றும் மிக முக்கியமான சட்டப் யாக வாதாடினர்.

| பிரிவைச் சுட்டிக்காட்டி அவர்கள் திறமை இந்த அரிய வழக்கை மிகத் துல்லிய மான சட்ட விளக்கங்களோடு வாதாடி, 83 / வயது முதியவருக்கு முழுமையான |நீதியைப் பெற்றுத் தந்த வழக்கறிஞர்கள் குழுவின் அர்ப்பணிப்பும் சட்டப் புலமையும் போற்றுதலுக்குரியது. இவர்களின் அசாத் திய முயற்சியால், அதிகாரிகளின் உத்தரவு சட்டப்படி செல்லாது என்றும் கண்ணப்பன் தனது அசல் ஓய்வூதியத்தைப் பெற தகுதி | யுடையவர் என்றும் நீதியரசர் முகமது ஷஃபிக் தீர்ப்பளித்தார். வயோதிக காலத்தில் ஒரு மூத்த குடி மகனின் உரிமையை நிலைநாட்ட, சளைக்கா மல் போராடி வெற்றி தேடித்தந்த வழக்கறி ஞர்களின் இந்தச் சாதனை ஒட்டுமொத்த ஓய்வூதியதாரர்கள் மத்தியில் பெரும் பாராட் டைப் பெற்று வருகிறது. அரசின் தவறான உத்தரவுகளால் பாதிக்கப்படும் பல்லாயி ரக்கணக்கான ஓய்வூதியதாரர்களின் உரிமை யைப் பாதுகாக்கும் அரணாக இந்த தீர்ப்பும், வழக்கறிஞர்களின் வாதமும் அமைந்துள் ளன


This article discusses a ruling by the Chennai High Court regarding a pension reduction case for an 83-year-old retired government employee.

The court ordered the government to restore the original pension amount and repay the sum of ₹2,69,900 that was deducted within 12 weeks.

The ruling emphasized that a pension cannot be reduced based on a promotion or transfer, citing that doing so is not legally permissible according to the relevant government rules.

83 வயது முதியவரின் ஓய்வூதியக் குறைப்பு ரத்து: சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு!

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog