அகவிலைப்படி உயர்வு - முதலமைச்சர் விஜய் அவர்களுக்குஆசிரியர் கூட்டணி சார்பில் நன்றி Dearness Allowance Hike — Gratitude to Chief Minister Vijay on behalf of the Teachers' Federation.
ஆசிரியர் அரசு அலுவலர்களுக்கு இரண்டு சதவீத அகவிலைப்படி உயர்வு வழங்கிய தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் அவர்களுக்கு தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் நன்றி
தொடக்கம்: 1046 பதிவு எண். 118/81
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி
மாநில அமைப்பு: ஜே.எஸ்.ஆர். மாளிகை 718. பெல்க சாலை, திருவல்லிக்கேணி, சென்னை 600 005,
TAMILNADU ELEMENTARY SCHOOL TEACHER'S FEDERATION
(Recognised by the Government of Tamil Nadu)
State Office: J.S.R. Maaligai, 78. Bells Road, Chennai-600 005
ரெ.ஈவேரா
பொதுச்செயலாளர் (பொ)
Gee 9443160093
ஆசிரியர் அரசு அலுவலர்களுக்கு இரண்டு சதவீத அகவிலைப்படி உயர்வு வழங்கிய தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் அவர்களுக்கு நன்றி
மத்திய அரசு அகவிலைப்படி உயர்வு வழங்குகின்ற போதெல்லாம் தமிழ்நாடு அரசும் அகவிலைப்படியை உயர்த்தி வழங்கி வந்துள்ளது. அந்த வகையில் மத்திய அரசு இரண்டு சதவீத அகவிலைப்படியை உயர்த்தி வழங்கி உள்ளது. அதன் அடிப்படையில் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் அவர்கள் ஆட்சிப் பொறுப்பேற்று ஒரு சில தினங்களிலேயே தமிழ்நாடு அரசு அலுவலர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் 58 சதவீதமாக இருந்த அகவிலைப்படியை இரண்டு சதவீதம் உயர்த்தி 60 சதவீதமாக வழங்குவதாக அறிவித்துள்ளார்.
அகவிலைப்படியை உயர்த்த வேண்டும் என்று கோரிக்கைகள் எழுவதற்கு முன்னரே பணிகளை தொடங்கி அகவிலைப்படி உயர்வை அறிவித்துள்ள தமிழ்நாடு அரசு முதலமைச்சர் விஜய் அவர்களுக்கும், தமிழ்நாடு அரசுக்கும், தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் சார்பில் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.
இதுபோல் ஆசிரியர்கள், அரசு அலுவலர்களின் மற்ற கோரிக்கைகளையும் விரைந்து நிறைவேற்றி தர வேண்டும் என்பதையும் இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறோம்.
தங்கள் உண்மையுள்ள
ரெ. ஈவேரா
பொதுச்செயலாளர்
This document is a formal letter from the Tamil Nadu Elementary School Teachers' Federation expressing gratitude.
It thanks the Tamil Nadu Chief Minister, identified here as Vijay, for increasing the Dearness Allowance (DA) by 2%.
The increase raises the total DA from 58% to 60% for government officials and teachers.
The Federation notes that this announcement was made shortly after the Chief Minister assumed office.
They also request that other pending demands from teachers and government employees be addressed promptly.
Friday, May 15, 2026
அகவிலைப்படி உயர்வு - முதலமைச்சர் விஜய் அவர்களுக்குஆசிரியர் கூட்டணி சார்பில் நன்றி
Teachers' Federation insists
Labels:
Chief Minister Vijay,
Dearness Allowance,
Notice of increase in dearness allowance,
Tamil Nadu Graduate Teachers' Federation,
Teachers' Federation insists
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.