Breaking

Tuesday, March 24, 2026

சென்னையில் பள்ளிக் குழந்தைகள் ஜப்பானிய மொழி கற்க வாய்ப்பு



சென்னையில் பள்ளிக் குழந்தைகள் ஜப்பானிய மொழி கற்க வாய்ப்பு Opportunity for School Children in Chennai to Learn Japanese

கோடை விடுமுறையில் பள்ளிக் குழந்தைகளுக்கு ஜப்​பானிய மொழி பயிற்சி அளிக்​க இந்​தி​ய - ஜப்​பான் தொழில் வர்த்தக சபை சிறப்பு ஏற்பாடு செய்துள்ளது.

இது தொடர்​பாக, அதன் பொதுச்​செய​லா​ளர் சுகுணா ராமமூர்த்தி வெளியிட்டுள்ள செய்​திக் குறிப்​பு: இந்​தி​ய - ஜப்​பான் தொழில் வர்த்தக சபை​யின் மொழிப் பள்ளி, பள்ளி குழந்தைகளுக்கான ஜப்பான் மொழி பயிற்சியைத் தொடங்க உள்ளது. மொத்தம் 40 மணி நேரம் கொண்ட இந்த பயிற்சியில் 8 முதல் 17 வயது வரையுள்ள குழந்தைகள் சேரலாம்.

இந்த பயிற்சியானது, ஜப்பானிய மொழி பேச்சுப் பயிற்சி, ஜப்பானிய குழந்தைகளிடமிருந்து பாடங்களை அறிந்து கொள்வது, ஜப்பானிய மொழி எழுதுவது, பாடல்கள் படிப்பது, ஓரிகாமி, ஜப்பானிய விளையாட்டுகள் போன்றவை இடம்பெறும்.இதற்கான நேரடி வகுப்புகள் சென்னை - தேனாம்பேட்டை கே.பி.தாசன் சாலையில் அமைந்துள்ள இந்திய - ஜப்பான் தொழில் வர்த்தக சபை வளாகத்தில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் காலை 9 மணி முதல் காலை 11 மணி வரை நடைபெறும். வகுப்புகள் ஏப்ரல் மாதம் தொடங்குகின்றன. பயிற்சியின் நிறைவில் அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்படும்


இணையவழி பயிற்சி திட்டம்:

மேலும், இணைவழியில் ஜப்பானிய மொழி வகுப்பு ஒவ்​வொரு வாரமும் ஞாயிற்​றுக்​கிழமை மட்​டும் நடத்தப்பட உள்ளது. இப்பயிற்​சியில் சேரு​வோருக்கு ஜப்​பானிய மொழி மட்​டுமின்றி ஜப்​பானிய கலை, கலாச்​சா​ரம், வணிக நடைமுறை​கள் ஆகிய​வையும் கற்​றுத் தரப்​படும்.

இந்த வகுப்பு ஏப்ரல் மாதம் தொடங்​கு​கிறது. இப்​ப​யிற்​சி​யானது, டிசம்பர் மாதம் ஜப்​பான் ஃபவுண்​டேஷன் சார்​பில் நடத்​தப்பட உள்ள ‘ஜெஎல்​பிடி என்-5 லெவல்’ தேர்​வுக்கு தயார்​படுத்​தும் வகை​யில் அமைந்​திருக்​கும். இந்த இணையவழி பயிற்சி வகுப்​பில் சேர விரும்பும் மாணவர்​கள் 98842-00505, 73055-99874 ஆகிய எண்​களில் தொடர்பு கொள்​ளலாம்.

மேலும், www.ijcci.com என்ற இணை​யதளத்​திலும் விவரங்​களை அறியலாம் என்று அதில் கூறப்பட்டுள்ளது

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog