CSIR NET தேர்வு முடிவுகள் வெளியீடு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, February 03, 2026

Comments:0

CSIR NET தேர்வு முடிவுகள் வெளியீடு

தேசிய தேர்வு முகமை (NTA), டிசம்பர் 2025-க்கான CSIR NET தேர்வு முடிவுகளை 2026, ஜனவரி 30 அன்று வெளியிட்டுள்ளது. மொத்தம் 1,54,080 விண்ணப்பதாரர்கள் பங்கேற்ற இந்தத் தேர்வின் முடிவுகளை தற்போது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் சரிபார்க்கலாம்.

உங்கள் தேர்வு முடிவுகளைச் சரிபார்க்கும் வழிமுறைகள்:

அதிகாரப்பூர்வ இணையதளம்: CSIR NET NTA அல்லது NTA Results ஆகிய தளங்களுக்குச் செல்லவும்.

உள்நுழைவு விவரங்கள்: "Scores for Joint CSIR UGC-NET Dec 2025" என்ற இணைப்பைத் தேர்ந்தெடுத்து, உங்கள் விண்ணப்ப எண் (Application Number) மற்றும் பிறந்த தேதியை (Date of Birth) பதிவிடவும்.

மதிப்பெண் அட்டை: விவரங்களைச் சமர்ப்பித்தவுடன் உங்கள் மதிப்பெண் அட்டை (Scorecard) திரையில் தோன்றும். அதை எதிர்காலத் தேவைக்காகப் பதிவிறக்கம் செய்துகொள்ளவும்.

முக்கியத் தகவல்கள்:

பொது மற்றும் OBC பிரிவினருக்கான குறைந்தபட்ச தகுதி மதிப்பெண் 33% ஆகவும், SC/ST/PwD பிரிவினருக்கு 25% ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தேர்ச்சி பெற்றவர்களுக்கான இறுதித் தகுதிப் பட்டியல் (Merit List) மற்றும் கட்-ஆஃப் மதிப்பெண்கள் விரைவில் இணையதளத்தில் வெளியாகும்.


சிஎஸ்ஐஆர் நெட் தேர்வு முடிவுகள் வெளியீடு

இந்தியாவில் பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரிகளில் உதவி பேராசிரியராக பணிபுரியவும், இளநிலை ஆராய்ச்சி படிப்புக்கான மத்திய அரசின் உதவித் தொகை பெறவும், நெட் தேர்வில் தேர்ச்சி பெறவேண்டும்.

இந்த தேர்வு தேசிய தேர்வுகள் முகமை (என்டிஏ) சார்பில், ஆண்டுக்கு இருமுறை கணினிவழியில் நடத்தப்பட்டு வருகிறது. இதில், சிஎஸ்ஐஆர் நெட் தேர்வு, 5 அறிவியல் பாடப் பிரிவுகளுக்கு மட்டும் பிரத்யேகமாக நடத்தப்படும்.

அதன்படி, 2025-ம் ஆண்டுக்கான சிஎஸ்ஐஆர் நெட் தேர்வு நாடு முழுவதும் 220 நகரங்களில் கடந்த டிச.18-ல் நடத்தப்பட்டது. இந்த தேர்வெழுத 2,12,552 பட்டதாரிகள் விண்ணப்பித்தனர். அதில், 1,54,080 பேர் தேர்வில் பங்கேற்றனர்.

இந்நிலையில், சிஎஸ்ஐஆர் நெட் தேர்வு முடிவுகளை என்டிஏ தற்போது வெளியிட்டுள்ளது. அதன் விவரங்களை தேர்வர்கள் csirnet.nta.ac.in/ என்ற இணையதளத்தில் அறியலாம்.

மேலும், பட்டதாரிகள் மதிப்பெண் சான்றிதழையும் மேற்கண்ட தளத்திலேயே பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம். இதில் ஏதேனும் சிரமங்கள் இருப்பின் 011-40759000/ 69227700 என்ற தொலைபேசி மூலமாக அல்லது csirnet@nta.ac.in எனும் மின்னஞ்சல் முகவரி வாயிலாக தொடர்புக் கொண்டு உரிய விளக்கம் பெறலாம்.

இதுகுறித்த கூடுதல் விவரங்களை /nta.ac.in/ என்ற வலைத்தளத்தில் அறியலாம் என்று, என்டிஏ வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews