அனைத்து போன்களிலும் Sanchar Saathi Install கட்டாயமா? மத்திய அமைச்சர் விளக்கம்
ஸ்மார்ட் போன்களில் சஞ்சார் செயலி கட்டாயம்.
அரசின் சஞ்சார் சாத்தி(Sanchar Saathi) செயலியை பயனர்கள் நீக்க, அழிக்க முடியாத வகையில் புதிய ஸ்மார்ட் போன்களில் நிறுவ வேண்டும் என தயாரிப்பு நிறுவனங்களுக்கு தொலைத்தொடர்பு அமைச்சகம் உத்தரவு.
இதற்காக 90 நாட்கள் அவகாசமும் வழங்கப்பட்டு உள்ளது.
ஏற்கெனவே விநியோகத்தில் உள்ள மொபைல்களுக்கு அப்டேட்டுகள் மூலமாக செயலியை நிறுவுவதை உறுதி செய்யவும் அறிவுறுத்தல் எனத் தகவல் Sanchar Saathi கட்டாயமா? மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா விளக்கம்
"சஞ்சார் சாதி செயலி வேண்டாம் என்றால், அதை நீக்கி கொள்ளலாம். போனில் வைத்திருப்பதா வேண்டாமா என பயனர்களே முடிவு செய்யலாம். மேலும் பயனர் அதை ஆக்டிவேட் செய்த பின்னரே செயல்படும். இந்த செயலியை அனைவருக்கும் அறிமுகப்படுத்துவது எங்கள் கடமை"
அனைத்து போன்களிலும் Pre-Install கட்டாயம் என்ற உத்தரவுக்கு பின் மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா விளக்கம்
சஞ்சார் சாத்தி APP-ன் முக்கிய அம்சங்கள்!
¶ காணாமல் போன அல்லது திருடப்பட்ட மொபைல்களை நாடு முழுவதும் IMEI அடிப்படையில் கண்டறிந்து, பிளாக் செய்யலாம்.
¶ தனிப்பட்ட 15 இலக்க IMEI எண்ணைப் பயன்படுத்தி போலீசுக்கு சாதனங்களை கண்டுபிடிக்க உதவுகிறது.
¶ கள்ள மொபைல்கள் சந்தையில் நுழைவதைத் தடுக்க உதவுகிறது.
¶ சந்தேகமான கால், SMS, WhatsApp மோசடிகளையும் புகார் அளிக்கும் வசதி உள்ளது.


ليست هناك تعليقات:
إرسال تعليق
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.