நவோதயா பள்ளிகளை தொடங்க மத்திய அரசுடன் ஆலோசியுங்கள்: தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

بحث هذه المدونة الإلكترونية

الاثنين، ديسمبر 15، 2025

Comments:0

நவோதயா பள்ளிகளை தொடங்க மத்திய அரசுடன் ஆலோசியுங்கள்: தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு



நவோதயா பள்ளிகளை தொடங்க மத்திய அரசுடன் ஆலோசியுங்கள்: தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு

தமிழகத்​தில் நவோதயா பள்​ளி​களை தொடங்க அனும​திக்​கு​மாறு சென்னை உயர் நீதி​மன்​றம் உத்தரவிட்டது. இதை எதிர்த்து தமிழக அரசின் சார்​பில் தாக்​கல் செய்த மேல்​முறை​யீடு மனுவை உச்ச நீதி​மன்ற நீதிப​தி​கள் பி.​வி. நாகரத்​னா, ஆர்.மகாதேவன் அடங்​கிய அமர்வு நேற்று விசா​ரித்​தது.

தமிழக அரசின் சார்​பில் மூத்த வழக்​கறிஞர் பி.வில்​சன் ஆஜராகி, ”ஜவஹர் நவோதயா பள்​ளி​களில் மும்​மொழிக் கொள்கை பின்பற்றபடு​கிறது. ஆனால் தமிழக அரசு இரு​மொழி கொள்கையை சட்​ட​மாக்​கி​யுள்​ளது” என வாதிட்டார்.



அப்​போது நீதிப​தி​கள், ”ஜவஹர் நவோதயா பள்​ளி​கள் விவகாரத்தை மொழிப் பிரச்​சனை​யாக மாற்​றக் கூடாது. நாம் கூட்டாட்சி அமைப்​பில் வாழ்​கிறோம். குடியரசின் ஒரு பகு​தி​யாக தமிழகம் உள்​ளது. ஓரடி முன்​னேறி​னால், மத்​திய அரசும் ஓரடி முன்​னால் வரும்.

ஜவஹர் நவோதயா பள்​ளி​களை திணிப்​பாக பார்க்​காமல், மாநில மாணவர்​களுக்​கான வாய்ப்​பாக பார்க்க வேண்​டும். மாநில அரசின் மொழிக் கொள்கை இது​தான் என்று மத்​திய அரசிடம் கூறுங்​கள், அது குறித்து ஆலோசனை நடத்துங்கள்” என்று உத்தரவிட்​டு வி​சா​ரணை​யை தள்​ளிவைத்​தனர்​.


நவோதயா பள்ளிகள் - உச்சநீதிமன்றம் உத்தரவு Navodaya schools - Supreme Court order

``என் மாநிலம் என்ற மனப்பான்மையை தவிர்த்து மத்திய அரசுடன் ஆக்கப்பூர்வமான ஆலோசனை நடத்த வேண்டும். இந்த விவகாரத்தை மொழி பிரச்சினையாக்க வேண்டாம். நிலங்களை கையகப்படுத்தி தமிழகத்தில் ஜவஹர் நவோதயா பள்ளிகளை உருவாக்க வேண்டும்''

தமிழ்நாடு அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

ليست هناك تعليقات:

إرسال تعليق

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

إجمالي مرات مشاهدة الصفحة