TN TET : டெட் தேர்வு தேர்ச்சி மதிப்பெண்களை 55% இலிருந்து 50% ஆக குறைக்க வேண்டும் : பள்ளிக்கல்வித்துறைக்கு கோரிக்கை - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

بحث هذه المدونة الإلكترونية

الخميس، نوفمبر 20، 2025

Comments:0

TN TET : டெட் தேர்வு தேர்ச்சி மதிப்பெண்களை 55% இலிருந்து 50% ஆக குறைக்க வேண்டும் : பள்ளிக்கல்வித்துறைக்கு கோரிக்கை



TN TET : டெட் தேர்வு தேர்ச்சி மதிப்பெண்களை 55% இலிருந்து 50% ஆக குறைக்க வேண்டும் : பள்ளிக்கல்வித்துறைக்கு கோரிக்கை

TNTET 2025 Exam Pass Mark | தாள்-1, தாள்-2 தேர்வுகளுக்கான தகுதி மதிப்பெண்களை 55% இலிருந்து 50% ஆக குறைக்க தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.

2025 ஆம் ஆண்டு நவம்பர் 15 மற்றும் 16 நடைபெற்ற டெட் தாள் 1 மற்றும் தாள் 2 தேர்வுகளுக்கான தகுதி குறைந்தபட்ச மதிப்பெண்களை 55 சதவீதத்திலிருந்து 50 சதவீதமாக மாற்றி தமிழக பள்ளிக்கல்வித்துறை அறிவிக்க வேண்டி தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.



ஆசிரியர்களுக்கான 'டெட்' தேர்வு காலை அறிவிப்பு; மதியம் வாபஸ் TET exam for teachers announced in the morning; withdrawn in the afternoon

ஆசிரியர் தேர்வு வாரியம், நேற்று காலை சிறப்பு 'டெட்' தேர்வு தேதியை அறிவித்த நிலையில், மதியம் அந்த அறிவிப்பை வாபஸ் பெற்றது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி களில், இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியராக பணியாற்ற, ஆசிரியர் தகுதித் தேர்வில், கட்டாயம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தேர்ச்சி பெறாதோர், இரண்டு ஆண்டு களில் தேர்ச்சி பெற வேண்டும் என, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. தமிழகத்தில், லட்சக்கணக்கான நபர்கள், தகுதி தேர்வில் தேர்ச்சி பெறாமல், ஆசிரியர் களாகப் பணியாற்றி வருகின்றனர்.

அவர்களுக்கு, வாய்ப்ப ளிக்கும் வகையில், 2026 ஜன வரி, ஜூலை, டிசம்பர் மாதங்களில், சிறப்பு 'டெட்' தேர்வு நடத்தப்படும் என, தமிழக அரசு அறிவித்தது.

நேற்று காலை, ஆசிரியர் தேர்வு வாரிய மான, டி.ஆர்.பி., தேர்வு குறித்த அறி விப்பை வெளியிட்டது. அதில், அடுத்த ஆண்டு ஜன., 24ம் தேதி, இடைநிலை ஆசிரியர்களுக்கான டெட் முதல் தாள், 25ம் தேதி, பட்டதாரி ஆசிரியர்களுக்கான டெட் இரண்டாம் தாள் தேர்வு நடக்கும். அடுத்த மாதம் 20ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என, தெரிவிக்கப்பட்டிருந்தது.

நேற்று மதியம், அந்த அறிவிப்பை, ஆசிரியர் தேர்வு வாரியம், தன் இணைய தளத்தில் இருந்து நீக்கியது.

இது குறித்து, ஆசிரியர் தேர்வு வாரிய அலுவலர்கள் கூறுகையில், 'அறிவிப்பில் சில தவறுகள் உள்ளன. அவை களையப்பட்டு, விரைவில் புதிய அறிவிப்பு வெளியிடப் படும் என்றனர்.

ليست هناك تعليقات:

إرسال تعليق

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

إجمالي مرات مشاهدة الصفحة