SIR - Election Commission orders investigation into deaths of polling station officials - ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்கள் மரணம் விசாரணை நடத்த தேர்தல் கமிஷன் உத்தரவு
-நமது சிறப்பு நிருபர் -
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியில் ஈடுபட்ட 16 ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்கள் உயிரிழந்த நிலையில், காரணத்தை கண்டறியுமாறு மாநில தலைமை தேர்தல் கமிஷனர்களுக்கு, தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது.
தமிழகம், கேரளா, மேற்குவங்கம், குஜராத், உத்தர பிரதேசம் உள்ளிட்ட 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிர தேசங்களில், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி நடந்து வருகிறது. வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியை ஆளுங்கட்சிக்கு சாதகமாக தேர்தல் கமிஷன் நடத்தி வருவதாக, எதிர்க்கட்சிகள் ஏற்க னவே குற்றஞ்சாட்டி வருகின்றன.
இந்தச் சூழலில், இப்பணியில் ஈடு பட்டிருந்தவர்களில் 16 ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்கள் உயிரிழந்துள்ள னர். அவர்களில் சிலர், பணிச்சுமை காரணமாக திடீரென தற்கொலை செய்து, தங்களது உயிரை மாய்த் துக் கொண்டதாகக் கூறப்படுகிறது. இதை, எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றன.
அரசியல் ரீதியிலான நெருக்கடிகள் அதிகரித்த நிலையில், ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்கள் மரணம் தொடர் பான விவகாரத்தை விசாரிக்குமாறு, அந்தந்த மாநில தலைமை தேர்தல் அதிகாரிகளுக்கு, தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ்குமார் உத்தர விட்டுள்ளார்.

ليست هناك تعليقات:
إرسال تعليق
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.