ஆசிரியர் பதவி உயர்வுக்கு தகுதித்தேர்வு கட்டாயம் - கர்நாடகா பள்ளிக்கல்வித்துறை அதிரடி முடிவு Eligibility test mandatory for teacher promotion - Karnataka School Education Department takes drastic decision
கர்நாடகாவில் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களின் பதவி உயர்வுக்கு, தகுதி தேர்வு கட்டாயம் என மாநில பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்துள்ளது. தகுதி தேர்வு எழுதுவதற்கு, ஆசிரியர்கள் குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் பணியாற்றியிருக்க வேண்டும். பி.எட்., பட்டம் பெற்றவராக இருக்க வேண்டும். இந்த விதிகள் அரசு மேல்நிலைப் பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு மட்டுமே பொருந்தும். தகுதி தேர்வு 100 மதிப்பெண்களுக்கு பாடவாரியாக நடத்தப்படும் என்ற வழிகாட்டு நெறிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், மாநில துவக்கக் கல்வித் துறை அமைச்சர் மது பங்காரப்பா நேற்று கூறுகையில், ''மாநிலத்தில் அரசு பள்ளிகளில் உடற்கல்வி ஆசிரியர்கள் பற்றாக்குறை உள்ளது. உடற்கல்வி ஆசிரியர்கள் உட்பட மற்ற ஆசிரியர்களும் விரைவில் பணியமர்த்தப்படுவர்,'' என்றார்.

ليست هناك تعليقات:
إرسال تعليق
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.