அரசு உதவி பெறும் பள்ளிகளின் ஆசிரியர்கள் சம்பளம் பெறுவதில் தாமதம் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

بحث هذه المدونة الإلكترونية

الأربعاء، نوفمبر 19، 2025

Comments:0

அரசு உதவி பெறும் பள்ளிகளின் ஆசிரியர்கள் சம்பளம் பெறுவதில் தாமதம்

அரசு உதவி பெறும் பள்ளிகளின் ஆசிரியர்கள் சம்பளம் பெறுவதில் தாமதம் Delay in receiving salaries of teachers of government-aided schools

தமிழக அரசின் அகவிலைப்படி உயர் வால் அரசு உதவிபெறும் பள்ளிகளின் ஆசிரியர்கள் சம்பளப் பட்டியலை கருவூல இணையதளத்தில் அனுப்ப முடியாததால் சம்பளம் பெறுவதில் தாமதம் ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது. தமிழக அரசு ஊழியர்களுக்கு 3 சதவீத அகவிலைப்படி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் அரசின் கருவூலத் துறையின் வலை தளம் மூலம் மாதந்தோறும் சம்பளப் பட்டியலை அந்த மாதத்தின் 15-ம் தேதிக்குப் பின்னர் வரும் சனிக் கிழமைக்குள் பதிவேற்றுவது வழக்கம். அதன்படி சம்பளப் பட்டியல் பதிவேற்றும் வலைதளத்தில் உள்நுழையும் வசதி இல்லாமல் உள்ளது. இதனால் அரசு உதவி பெறும் பள்ளிகளின் ஆசிரியர்கள் சம்பளப் பட்டியலை பதிவேற்ற முடியவில்லை.


மேலும் பழைய நடைமுறையில் சம்பளப் பட்டியல் தயாரித்து பள்ளிச் செயலர், வட்டாரக் கல்வி அலுவலர், மாவட்டக் கல்வி அலுவலர் மூலம் கோப்புகளை கருவூலத்துக்கு அனுப்பும் சூழல் உள்ளது. இதனால் வரும் மாதம் சம்பளம் பெறுவதில் காலதாமதம் ஏற்படும் சூழல் உள்ளது. இதனை போக்கி கருவூல வலைதளத்தில் பதிவேற்றும் வசதிசெய்ய ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ليست هناك تعليقات:

إرسال تعليق

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

إجمالي مرات مشاهدة الصفحة