கருணை அடிப்படை பணி நியமனம் மாநில அளவில் ஒரே பட்டியல்
அரசுப் பணிகளில் கருணை அடிப்படையி லான நியமன முறையில் மாநில அரசு முக்கிய மாற் றங்களை செய்துள்ளது. இனி துறை வாரியாக இல்லாமல், மாநில அள விலான ஒரே முன்னுரிமை பட்டியல் உருவாக்கப் பட்டு, அதன் அடிப்படை யில் அனைத்து துறைங் களிலும் நியமனங்கள் வழங்கப்படவுள்ளன.
இதுவரை, கருணை அடிப்படையிலான நியம னங்களுக்கு சம்பந்தப்பட்ட துறை தலைவர்கள் அல்லது மாவட்ட கலெக்டர்கள் விண்ணப்பங்களை பரிசீ லித்து வந்தனர்.
இனி, நிலு
வையில் உள்ள அனைத்து விண்ணப்பங்களும் மாநில அளவிலான ஒரே முன்னு ரிமை பட்டியலில் இணைக் கப்பட உள்ளன.
நிபந்தனை
ஒரு துறையில் அனும திக்கப்பட்ட மொத்த பணி யிடங்களில், அதிகபட்சம் 5 சதவீதம் வரை மட்டுமே கருணை அடிப்படையில் நிரப்ப முடியும் என்பதால், பணிக்கு விண்ணப்பிப்ப வரின் குடும்பம் வறுமை நிலையில் இருக்க வேண் டும்: குடும்பத்தில் வேறு எந்த உறுப்பினரும் அரசு அல்லது தனியார் நிறுவ னங்களில் நிரந்தரப்பணி யில் இருக்கக்கூடாது; ஒரு
குடும்பத்தில் ஒருவருக்கு மட்டுமே கருணை அடிப் படையில் பணி வழங்கப் படும் போன்ற நிபந்தனை கள் உள்ளன.
அதன்படி, அரசு ஊழி யர் இறந்த தேதி அல்லது மருத்துவ காரணங்களால் பதவி விலகிய தேதி முதல் ஆண்டுகளுக் 3 குள் ஏற்படும் காலியிடங் களுக்கு ஏற்ப நியமனங் கள் வழங்கப்படவுள்ளன. இந்த மாநில அளவிலான பட்டியலை பராமரிக்க பிரத்யேக இணையதளம் உருவாக்கப்படுகிறது. இணையதளம் பயன்பாட் டிற்கு வரும் வரை, ஆக. 4, 2025ம் தேதிக்கு முந்தைய விதிகளின்படி நியமனங்
கள் தொடரும் எனவும் பணியில் சேர்ந்த தேதியி லிருந்து ஓர் ஆண்டிற்குள், தகுதியின் அடிப்படையில் பணி வரன்முறை செய்யப் படும் எனவும் அறிவிக்கப் பட்டுள்ளது.
முன்னதாக, 3 மாதங்க ளுக்குள் துறைகளில் காலி யிடம் இல்லையென்றால், விண்ணப்பங்கள் மாவட்ட கலெக்டருக்கு அனுப்பப் பட்டு வந்தது. தற்போது அந்த நடைமுறை மாற் றப்பட்டு, மாநில அளவி லான பட்டியலின் மூலம் வெளிப்படைத்தன்மை உறுதி செய்ய இந்த மாற் றங்கள் கொண்டு வரப் பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
بحث هذه المدونة الإلكترونية
الاثنين، نوفمبر 24، 2025
Comments:0
கருணை அடிப்படை பணி நியமனம் - மாநில அளவில் ஒரே பட்டியல்
الاشتراك في:
تعليقات الرسالة (Atom)

ليست هناك تعليقات:
إرسال تعليق
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.