ஆசிரியர் பணித் தகுதிச் சிக்கல்: விரைவான தீர்வு தேவை
செப்டம்பர் 1, 2025ஆம் நாளன்று ஆசிரியர் தகுதித் தேர்வு (TET) தொடர்பான மேல்முறையீட்டு வழக்கில், உச்ச நீதிமன்றத்தின் இரண்டு நீதியரசர்கள் அமர்வு அளித்த தீர்ப்பு, அனைத்து மாநிலங்களிலும் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றிவரும் 20 லட்சத்துக்கும் அதிகமான ஆசிரியர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. ‘ஆசிரியர் தகுதித் தேர்வு தேர்ச்சி பெறாமல் பணியில் இருப்பதை அனுமதிக்க முடியாது; ஐந்து ஆண்டுகளுக்குக் குறைவான பணிக்காலம் உள்ளவர்கள் மட்டும் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாமல் பணியில் தொடரலாம்’ எனப் பல கட்டுப்பாடுகள் தீர்ப்பில் உள்ளன.
ஓர் ஆசிரியரின் பணிக்கால அளவை (length of service) ஆசிரியர் பணியைத் தொடர்வதற்கும் பதவிஉயர்வு பெறுவதற்கும் உரிய தகுதியாக ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் தீர்ப்பில் சொல்லப்பட்டுள்ளது. ஆசிரியர் பதவி உயர்வுகள் / சம்பள உயர்வுகள், பணிக்காலம் அல்லது பணி மூப்பு (seniority) அடிப்படைக்கு மாறாகப் பணி மதிப்பீட்டின் அடிப்படையில் மட்டுமே பின்பற்றப்படும் என்று தேசியக் கல்விக் கொள்கை 2020இல் கூறப்பட்டுள்ளதை இத்தீர்ப்பு வழிமொழிந்துள்ளது.
بحث هذه المدونة الإلكترونية
الجمعة، أكتوبر 10، 2025
الاشتراك في:
تعليقات الرسالة (Atom)

ليست هناك تعليقات:
إرسال تعليق
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.