கலைத்திருவிழா பணிகளால் ஆசிரியர்களுக்கு பாட சுமை - சிறப்பு ஆசிரியர்களை நியமிக்க கோரிக்கை - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

بحث هذه المدونة الإلكترونية

الثلاثاء، أكتوبر 28، 2025

Comments:0

கலைத்திருவிழா பணிகளால் ஆசிரியர்களுக்கு பாட சுமை - சிறப்பு ஆசிரியர்களை நியமிக்க கோரிக்கை



கலைத்திருவிழா பணிகளால் பாட ஆசிரியர்களுக்கு சுமை சிறப்பு ஆசிரியர்களை நியமிக்க கோரிக்கை... Request to appoint special teachers due to burden on subject teachers due to festival work

கலைத்திருவிழா பணிகளால் பாட ஆசிரியர்களுக்கு சுமை சிறப்பு ஆசிரியர்களை நியமிக்க கோரிக்கை

அரசுப் பள்ளிகளில் ஒவி யம், இசை, தையல் உள் ளிட்ட சிறப்பு ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளதால், கலைத்திரு விழா போன்ற கல்வி சாரா போட்டிகளுக்கான பணிக ளையும், பாட ஆசிரியர் களே கவனிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

மாநிலம் முழுவதும் அரசுப் பள்ளிகளில் 49 ஒவிய ஆசிரியர் மற்றும் 48 இசை ஆசிரியர் பணியி டங்கள் காலியாக உள்ளன. பல பள்ளிகளில் தையல் போன்ற பல்வேறு சிறப்பு ஆசிரியர் பணியிடங்கள் உருவாக்கப்படவில்லை. கலைத்திருவிழா

இந்நிலையில், அரசுப் பள்ளி மாணவர்களின் தனித்திறமைகளை வளர்க் கும் நோக்கில், பள்ளி, வட்டாரம், மாவட்டம் மற்றும் மாநில அளவில் பேச்சு, கவிதை, கட்டுரை, ஓவியம், நடனம், நடிப்பு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில், 'கலைத்தி ருவிழா' போட்டிகளை அரசு நடத்தி வருகிறது. இதற்கான முழு பொறுப் பையும், தாங்களே சுமக்க வேண்டியுள்ளதாக ஆசிரி யர்கள் புலம்புகின்றனர்.

ஆசிரியர்கள் கூறியதா வது: கலைத்திருவிழா போன்ற போட்டிகளுக்கு வட்டாரம், மாவட்ட அளவில் நடுவராக தலை மையாசிரியர்கள் பங்கேற் கின்றனர். மாணவர்களை போட்டிகளில் பங்கேற்க அழைத்து செல்லவும், பயிற்சி வழங்கவும் நாங் கள் அறிவுறுத்தப்பட் டுள்ளோம்.

ஏற்கனவே ஆசிரி யர் பற்றாக்குறை நிலவி வரும் நிலையில், இத்த கைய கூடுதல் பணிகள் ஆசிரியர்களுக்கு மேலும் சுமையாக மாறியுள்ளன. நாங்கள் எப்போது பாடம் கற்பிப்பது?

கலைத்திருவிழா மட் டுமின்றி, பள்ளிகளில் செயல்படும் இதர மன்றப் பாட கவனம் போட்டிகளுக்கும் ஆசிரியர்களே செலுத்த வேண்டியுள்ளது. அனைத்து பள்ளிகளி லும், இதற்கென தேவை யான சிறப்பு ஆசிரியர் களை நியமிக்க வேண்டும். அவர்கள், மாணவர்களின் திறன்களை முழுமையாக மேம்படுத்துவார்கள்.

பாட ஆசிரியர்களும் தங்களது பாடம் சார்ந்த செயல்பாடுகளில் முழு கவனம் செலுத்தி, மாண வர்களின் கல்வித்தரத்தை உயர்த்த முடியும். இவ் வாறு, அவர்கள் கூறினர்.

ليست هناك تعليقات:

إرسال تعليق

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

إجمالي مرات مشاهدة الصفحة