அரசு கல்வியியல் கல்லூரிகளில் எம்எட் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க ஆக.25 கடைசி
அரசு கல்வியியல் கல்லூரிகளில் எம்எட் மாணவர் சேர்க்கைக்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவு நேற்று தொடங்கியது. விண்ணப்பிக்க ஆகஸ்ட் 25-ம் தேதி கடைசி நாள் ஆகும்.
இது தொடர்பாக உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
அரசு கல்வியியல் கல்லூரிகளில் எம்எட் படிப்பில் நடப்பு கல்வியாண்டு (2025-26) மாணவர் சேர்க்கைக்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவு நேற்று (ஆக. 11) முதல் 20-ம் தேதி வரை நடைபெற உள்ளது. எம்எட் படிப்பில் சேர விரும்பும் மாணவ, மாணவிகள் www.tngasa.in என்ற இணைய தளத்தை பயன்படுத்தி ஆக. 20-ம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப்பட்ட பிறகு மாணவர்களின் தரவரிசைப் பட்டியல் ஆகஸ்ட் 25-ம் தேதி அன்று வெளியிடப்படும். இதைத் தொடர்ந்து, மாணவர் சேர்க்கை ஆகஸ்ட் 26 முதல் 29-ம் தேதி வரை நடைபெறும். முதலாமாண்டு வகுப்பு செப். 1-ம் தேதி தொடங்கும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
TNPSC - ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகளில் (நேர்முகத் தேர்வு பதவிகள்) அடங்கிய பதவிகளுக்கான உத்தேச விடைகள் வெளியீடு.
TNPSC - தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் 20.07.2025 முதல் 22.07.2025 வரை நடைபெற்ற ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகளில் (நேர்முகத் தேர்வு பதவிகள்) அடங்கிய பதவிகளுக்கான உத்தேச விடைகள் தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது தொடர்பான செய்தி வெளியீடு.
بحث هذه المدونة الإلكترونية
الأربعاء، أغسطس 13، 2025
الاشتراك في:
تعليقات الرسالة (Atom)

ليست هناك تعليقات:
إرسال تعليق
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.