SBI வங்கியில் 5,180 கிளர்க் பணியிடங்கள்: அருமையான வாய்ப்பு- உடனே விண்ணப்பிங்க - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

بحث هذه المدونة الإلكترونية

الأربعاء، أغسطس 13، 2025

Comments:0

SBI வங்கியில் 5,180 கிளர்க் பணியிடங்கள்: அருமையான வாய்ப்பு- உடனே விண்ணப்பிங்க

SBI வங்கியில் 5,180 கிளர்க் பணியிடங்கள்: அருமையான வாய்ப்பு- உடனே விண்ணப்பிங்க

எஸ்.பி.ஐ வங்கியில் தமிழகத்தில் மட்டும் 380 காலி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

நாட்டின் முன்னணி பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆப் எனப்படும் எஸ்.பி.ஐ வங்கியில் வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழகத்திலும் காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. விண்ணப்பிக்கும் மாநிலங்களின் உள்ளூர் மொழித்திறன் தெரிந்து இருப்பது அவசியம். எஸ்.பி.ஐ வெளியிட்டு ஆட்சேர்ப்பு அறிவிப்பு குறித்த விரிவான விவரங்கள் வருமாறு;

பணியிடங்கள் விவரம்: 5,180 கிளர்க் (ஜூனியர் அசோசியேட்ஸ் ) பணியிடங்கள். தமிழகத்தில் மட்டும் 380 பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. கல்வி தகுதி: அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையத்தில் இருந்து ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் பட்டம் பெற்றிருந்தால் போதும்.

வயது வரம்பு: 20 வயது முதல் 28 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். அதாவது, ஏப்ரல் 2, 1997 முதல் ஏப்ரல் 1, 2005 க்கு இடைப்பட்ட காலத்தில் பிறந்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

சம்பளம்: தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு சம்பளமாக ரூ. 24,050 - 64,480 வரை வழங்கப்படும்.

விண்ணப்ப கட்டணம்: ரூ.750 செலுத்த வேண்டும். எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கு கட்டணம் கிடையாது.

தேர்வு முறை: முதல்நிலை தேர்வு, மெயின் தேர்வு, உள்ளூர் மொழித்திறன் தேர்வு( 10,12 ஆம் வகுப்பில் உள்ளூர் மொழியை ஒரு பாடமாக எடுத்து படித்தவர்களுக்கு தேவையில்லை) ஆகியவை அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்க்ள்.


விண்ணப்பிக்க கடைசி நாள்: 26.08.2025

தேர்வு அறிவிப்பினை படிக்க: https://sbi.co.in/web/careers/current-openings

ليست هناك تعليقات:

إرسال تعليق

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

إجمالي مرات مشاهدة الصفحة