SBI வங்கியில் 5,180 காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு. - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

بحث هذه المدونة الإلكترونية

الجمعة، أغسطس 22، 2025

Comments:0

SBI வங்கியில் 5,180 காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு.



SBI வங்கியில் 5,180 காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு.

பொதுத்துறை வங்கிகளில் முதன்மை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவில்(பாரத ஸ்டேட் வங்கி) நிரப்பப்பட உள்ள 5,180 ஜூனியர் அசோசியேட்ஸ் பணியிடங்களுக்கு (வாடிக்கையாளர் சேவை மற்றும் விற்பனை பிரிவு) தகுதியானவர்களிடமிருந்து வரும் 26 ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விளம்பர எண் : CRPD/CR/2025-26/06

பணி: Junior Associate (Customer Support & Sales)

காலியிடங்கள்: 5,180 (தமிழ்நாட்டிற்கு 380 இடங்கள்)

வயதுவரம்பு: 1.4.2025 தேதியின்படி 20 முதல் 28-க்குள் இருக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், மாற்றுத்திறனாளி பிரிவினருக்கு தலா 10 ஆண்டுகளும் வயதுவரம்பில் சலுகை வழங்கப்பபடும்.

சம்பளம்: மாதம் ரூ.24,050 - 64,480

தகுதி: ஏதாவதொரு துறையில் இளநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைனில் நடத்தப்படும் முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். முதல்நிலை ஆன்லைன் தேர்வு மூன்று பிரிவுகளாக நடைபெறும்.

முதல்நிலைத் தேர்விற்கான அழைப்புக் கடிதத்தை தேர்வு தொடங்கும் நாளுக்கு 7 நாள்களுக்கு முன் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். முதல்நிலைத் தேர்வில் தேர்ச்சி பெறுபவர்கள் மட்டும் முதன்மைத் தேர்வில் பங்குபெற முடியும். முதன்மைத் தேர்வுக்கான அழைப்புக் கடிதத்தை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

முதன்மைத் தேர்வுக்கு செல்பவர்கள் முதல்நிலைத் தேர்வு அழைப்புக் கடிதம் மற்றும் அடையாள அட்டை மற்றும் முதன்மைத் தேர்வு அழைப்புக் கடிதம் வைத்திருக்க வேண்டும். அழைப்புக் கடிதத்தில் தற்போதைய பாஸ்போர்ட் புகைப்படம் ஒட்டியிருக்க வேண்டும். . மேலும் 2 புகைப்படங்களை கூடுதலாக கைவசம் வைத்திருக்க வேண்டும்.

கேள்வித்தாள் தமிழ், ஆங்கிலம், ஹிந்தி மொழியில் அமைந்திருக்கும்.

தேர்வு மையம்: எழுத்துத்தேர்வு தமிழ்நாட்டில் சென்னை, கோவை, ஈரோடு, கரூர், கிருஷ்ணகிரி, மதுரை, நாகர்கோவில். ராமநாதபுரம், சேலம்,தஞ்சாவூர், திருச்சி. திருநெல்வேலி, வேலூர், விருதுநகர் ஆகிய நகரங்களில் இடங்களில் நடைபெறும்.

விண்ணப்பக் கட்டணம்: எஸ்சி, எஸ்சி, மாற்றுத்திறனாள், முன்னாள் ராணுவ பிரிவினர்களுக்கு கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ள. இதர அனைத்து பிரிவினரும் ரூ.750 செலுத்த வேண்டும். கட்டணத்தை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும். விண்ணப்பிக்கும் முறை: www.sbi.co.in என்ற இணையதள முகவரியில் கொடுக்கப்பட்டுள்ள லிங்க் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்கும் போது புகைப்படம், கையொப்பம், இடது கை பெருவிரல் ரேகை மற்றும் சான்றிதழ்களின் நகல்களை ஸ்கேன் செய்து பதிவேற்றம் செய்து கொள்ளவும். எதிர்கால பயன்பாட்டிற்காக ஆன்லைனில் விண்ணப்பித்தவுடன் அதனை பிரிண்ட் அவுட் எடுத்து கைவசம் வைத்துக் கொள்ளவும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 26.8.2025

மேலும் விபரங்கள் அறிய இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

ليست هناك تعليقات:

إرسال تعليق

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

إجمالي مرات مشاهدة الصفحة