*வாட்ஸ் அப்பில் நடக்கும் நுாதன மோசடி; உஷாராக இல்லாவிட்டால் ஆபத்து!*
*''வாட்ஸ் அப் பயனர்களை ஏமாற்றி பணம் சம்பாதிக்கும் மோசடி நுாதன முறையில் நடந்து வருகிறது. 'ஸ்டீகனோகிராபி' என்ற இந்த மோசடியில் தப்பிப்பது எப்படி என்பது குறித்து ஓர் சிறப்பு அலசல்.*
*கோடிக்கணக்கான பயனர்களை தன் வசம் ஆக்கி, சமூக வலைதளத்தில் வாட்ஸ் அப் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. அதுமட்டுமின்றி புது புது அப்டேட்களை செய்து கொண்டு வருகிறது. தற்போது மோசடி கும்பல் பணம் பறிப்பதற்கு வாட்ஸ் அப் பயனர்களை குறி வைத்து வருகின்றனர். அதில் ஒருவகை மோசடி என்பது தான் ஸ்டீகனோகிராபி (Steganography).*
*இந்த மோசடியில் இருந்து தப்பிப்பது எப்படி? இதனால் என்ன ஆபத்து? என்பது குறித்து ஓர் சிறப்பு அலசல்.*
*ஸ்டீகனோகிராபி வாட்ஸ் அப் மோசடி என்றால் என்ன?*
*ஸ்டீகனோகிராபி (Steganography) என்பது படம், வீடியோ அல்லது ஆடியோ கோப்பிற்குள் மறைக்கப்பட்ட தகவல்களை (malicious code, links, malware) மறைத்து அனுப்பும் முறை தான்.*
*வாட்ஸ் அப் 'ஹேக்கர்ஸ்' இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, படங்களை அனுப்பி பயனர்களின் தகவல்களை திருடுகின்றனர்.*
*என்ன ஆபத்து?*
*போனை தங்களது கட்டுப்பாட்டில் கொண்டு வர 'ஹேக்கர்ஸ்' முயற்சிக்கின்றனர். அதாவது ரிமோட் ஆக்சஸ் மூலம் போன் கட்டுப்பாட்டை தன்வசம் கொண்டு வருகின்றனர்.*
*Keylogger மூலம், பேங்க் தகவலை திருடுகின்றனர்.*
*முதலில் வாட்ஸ் கணக்கை ஹேக்கர்ஸ் முயற்சிக்கின்றனர். அதில் ஒன்று 'ரேன்சம்வேர்' தாக்குதல், தனிநபர் பைல்ஸ் லாக் செய்து பணம் பறிக்க முயற்சிகின்றனர்.*
*இந்த மோசடியில் இருந்து தப்பிப்பது எப்படி?*
*வாட்ஸ் அப்பில் ஆட்டோ டவுன்லோட் செய்வதை முடக்க வேண்டும். முதலில் Settings பட்டனை கிளிக் செய்து, Storage & Data கிளிக் செய்து, Media Auto-Download கிளிக் செய்து, None ஆப்சனை கிளக் செய்ய வேண்டும்.*
*தெரியாதவர்கள் படம் அனுப்பினால் கிளிக் செய்ய கூடாது. இதில் இருந்து தப்பிக்க Two-Step Verification ஆன் செய்யலாம். தெரியாமல் இது மாதிரி படங்களை ஓபன் செய்தால் என்ன செய்வது?*
*முதலில் இண்டர்நெட்டை துண்டிக்க வேண்டும். பின்னர் Airplane Mode ஆப்ஷனை ஆன் செய்ய வேண்டும். வாட்ஸ் அப்பில் அனைத்து இணைப்புகளையும் துண்டிக்க வேண்டும். ஆன்டிவைரஸ் ஸ்கேன் செய்ய வேண்டும். பேங்கிங் மற்றும் யு.பி.ஐ., பரிவர்த்தனைகளை கண்காணிக்க வேண்டும்.*
بحث هذه المدونة الإلكترونية
الأحد، يوليو 13، 2025
Comments:0
Home
WhatsApp
WhatsApp Messenger
WhatsApp new feature
WhatsApp New Update
WhatsApp QR
WhatsApp Tricks and Tips
WhatsAppல் நடக்கும் நுாதன மோசடி; உஷாராக இல்லாவிட்டால் ஆபத்து!
WhatsAppல் நடக்கும் நுாதன மோசடி; உஷாராக இல்லாவிட்டால் ஆபத்து!
Tags
# WhatsApp
# WhatsApp Messenger
# WhatsApp new feature
# WhatsApp New Update
# WhatsApp QR
# WhatsApp Tricks and Tips
WhatsApp Tricks and Tips
التسميات:
WhatsApp,
WhatsApp Messenger,
WhatsApp new feature,
WhatsApp New Update,
WhatsApp QR,
WhatsApp Tricks and Tips
الاشتراك في:
تعليقات الرسالة (Atom)
ليست هناك تعليقات:
إرسال تعليق
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.