TNPSC - Departmental Exam May 2025 - Official Answer Key Published - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

بحث هذه المدونة الإلكترونية

الأربعاء، يونيو 25، 2025

Comments:0

TNPSC - Departmental Exam May 2025 - Official Answer Key Published

TNPSC - Departmental Exam May 2025 - Official Answer Key Published



செய்தி வெளியீட்டு எண் : 75/2025 நாள் : 23.06.2025

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய அறிவிக்கை எண் 06/2025 , நாள் 04.04.2025 - இன் படி அறிவிக்கப்பட்ட துறைத் தேர்வுகள் கடந்த 19.05,2025 முதல் 29.05.2025 வரை ( 24.05.2025 & 25.05.2025 நீங்கலாக ) கொள்குறிவகை , விரிந்துரைக்கும் வகை , கொள்குறிவகை மற்றும் விரிந்துரைக்கும் வகையிலான தேர்வு அமைப்பு முறையில் சென்னை , புதுடெல்லி உட்பட 39 மாவட்ட தேர்வு மையங்களில் நடைபெற்றன ,

இத்தேர்வின் கொள்குறி வகைத் தேர்வுகளின் உத்தேச விடைகள் ( Marked as tick ) குறிக்கப்பட்ட வினாத்தாள் மற்றும் விரிந்துரைக்கும் வகையிலான தேர்வுகளின் வினாத்தாள் ஆகியன தேர்வாணைய இணையதளத்தில் 23.06.2025 அன்று வெளியிடப்பட்டுள்ளன. துறைத் தேர்வெழுதிய விண்ணப்பதாரர்கள் அவரவர் எழுதிய கொள்குறி வகை தேர்வின் விடைகளை தேர்வாணைய இணையதளத்தில் சரிபார்த்துக் கொள்ளலாம்.

உத்தேச விடைகள் மீது மறுப்பு ஏதேனும் இருப்பின் தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்ட ஒரு வார கால அவகாசத்திற்குள் அதாவது 24.06.2025 முதல் 30.06.2025 அன்று மாலை 5.45 மணிவரை , விண்ணப்பதாரர்கள் அவர்தம் தேர்வு நுழைவு சீட்டு நகல் , பதிவு எண் . தேர்வின் பெயர் , தேர்வு குறியீட்டு எண் , வினா எண் அவ்வினாவின் உத்தேச விடை , அவ்வினாவிற்கு விண்ணப்பதாரர் கூறும் விடை போன்ற தகவல்களை தெளிவாக குறிப்பிட்டு tnpscqdd@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரி மூலமாக மட்டுமே விண்ணப்பதாரர் தங்களுடைய மனுக்களை அனுப்பலாம் . மின்னஞ்சல் முகவரியை தவிர்த்து கடிதம் வாயிலாக விண்ணப்பதாரர்கள் மறுப்பு தகவல்களை தேர்வாணையத்திற்கு தெரிவித்தால் அத்தகவல் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது / பரிசீலிக்கப்படமாட்டாது என இதன் மூலம் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது .

ليست هناك تعليقات:

إرسال تعليق

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

إجمالي مرات مشاهدة الصفحة