‘நான் முதல்வன்’ திட்டத்தை குறைகூறி வெளியான ஆடியோ - தலைமை ஆசிரியர் பணியிட மாற்றம்
நான் முதல்வன் திட்டத்தை குறை கூறியதுடன் பட்டியலின மக்களை அவமரியாதை செய்யும் வகையில் பேசிய நிம்மியம்பட்டு அரசு பள்ளி தலைமை ஆசிரியை கிருஷ்ணகிரி மாவட்டத்துக்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த நிம்மியம்பட்டு பகுதியில் அரசு மேல்நிலை பள்ளி இயங்கி வருகிறது. இதன் தலைமை ஆசிரியையாக பணிபுரிந்து வருபவர் அமுதா. இவர், அதே பள்ளியில் பணிபுரியும் சக ஆசிரியை ஒருவரிடம் பேசிய ஆடியோ சமீபத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த ஆடியோவில், ‘கல்லூரி கனவு திட்டம், அந்த திட்டம், இந்த திட்டம் என கூறி கோடை விடுமுறையிலும் இந்த அரசின் கீழ் செயல்படும் கல்வி துறை அதிகாரிகள் உயிரை எடுக்கின்றனர். அரசின் திட்டங்களையும், அரசு பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு எனக் கூறிக் கொண்டு பட்டியலின சமூகத்தைச் சேர்ந்தவர்கள் வந்து கேள்வி கேட்பது அருவெறுப்பாக உள்ளது’ என கூறியுள்ளார்.
மேலாண்மை குழு தேவையா? - ‘அரசு பள்ளிகளில் பள்ளி மேலாண்மை குழு தேவையா?’ என்ற கேள்வியுடன் அரசின் திட்டங்களையும் செயல்பாடுகளையும் தலைமை ஆசிரியை குறைகூறி பேசிய ஆடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து, பள்ளி தலைமை ஆசிரியை அமுதாவை கிருஷ்ணகிரி மாவட்டம் சிங்காரப்பேட்டை அரசு பள்ளிக்கு பணியிட மாறுதல் செய்து கல்வித் துறை அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

ليست هناك تعليقات:
إرسال تعليق
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.