அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர்க்கை: மே 27 வரை விண்ணப்பிக்கலாம் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

بحث هذه المدونة الإلكترونية

الخميس، مايو 08، 2025

Comments:0

அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர்க்கை: மே 27 வரை விண்ணப்பிக்கலாம்

அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர்க்கை: மே 27 வரை விண்ணப்பிக்கலாம்

தமிழகத்தில் அரசு கலை, அறிவியல் கல்லூ ரிகளில் மாணவர் சேர்க்கைக்கு இணையவழியில் மே 27-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

தமிழகத்தில் 176 அரசு கலை, அறிவியல் கல்லூரிகள் செயல் பட்டு வருகின்றன. இந்தக்கல்லூ ரிகளில் 159 பாடப்பிரிவுகளில் 1,25,345 சேர்க்கை இடங்கள் உள் ளன. இந்த நிலையில், இந்தக் கல் லூரிகளில் நிகழாண்டு மாணவர் கள் விண்ணப்பம் செய்வதற்கான இணையதள பதிவை உயர்கல் வித் துறை அமைச்சர் கோவி.செ ழியன் புதன்கிழமை தொடங்கி வைத்தார்.

இதையடுத்து சேர்க்கை பெற விரும்பும் மாணவர்கள் https://www.tngasa.in ननं एक வரியில் மே 27 வரை விண்ணப் பிக்கலாம். அப்போது, விண் ணப்பக் கட்டணம், கல்லூரி மற் றும் பாடப்பிரிவு தேர்வு, அச்சி டும் விண்ணப்பம் ஆகியவற்றை இணையவழியிலேயே மேற் கொள்ள வேண்டும்.

மாணவர்கள் விண்ணப்பங் களை வீட்டில் இருந்தோ அல் லது அரசுக் கலை மற்றும் அறி ரியல் கல்லூரிகளில் அமைக்கப் பட்டுள்ள மாணவர் சேர்க்கை உதவி மையம் மூலமாகவோ விண்ணப்பிக்கலாம். பாடப் பிரிவுகள் மற்றும் கல் லூரிகளை விரும்பும் வரிசையில் பதிவு செய்ய வேண்டும். தரவ ரிசை பட்டியல் அந்தந்த கல்லூ ரிகளின் இணையதளங்களில் வெளியிடப்படும்.

பிளஸ் 2 வகுப்பில் பெற்ற தமிழ் மதிப்பெண்களின் அடிப் படையில் தமிழ் தரவரிசைப்பட்டியல் தயாரிக்கப்படும். இந் தப் பட்டியல் பி.ஏ. தமிழ் இலக் கியம், பி.லிட். படிப்புகளின் சேர்க்கைக்கு பயன்படுத்தப்ப டும். இதேபோன்று ஆங்கிலத் தில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் ஆங்கிலம் தரவ ரிசை பட்டியல் தயாரிக்கப்படும். இந்தப் பட்டியல் பி.ஏ. ஆங்கில இலக்கிய படிப்புகளின் சேர்க் கைக்கு பயன்படுத்தப்படும்.

பொது தரவரிசை... மீத முள்ள 4 பாடங்களின் அடிப் படையில் (400 மதிப்பெண்க ளில்) இது தயாரிக்கப்படும். இது, மற்ற அனைத்து அனைத்து பி.ஏ., பி.ஏ., பி.எஸ்சி., பி.எஸ் பி.காம்., பிபிஏ, பிசிஏ, பிஎஸ்ட பிள்யு உள்ளிட்ட படிப்புகளில்

சேர்க்கைக்கு பயன்படுத்தப்ப டும். விண்ணப்பதாரர்கள் தாங் கள் பதிவு செய்த பாடப்பிரிவுக ளின் விருப்ப வரிசையின் அடிப் படையில் தரவரிசைக்கு ஏற்ற வாறு ஒதுக்கீடு ஆணைகளை அந்தந்த கல்லூரிகள் வழங்கும். தங்களுக்கு வழங்கப்பட்ட ஒதுக் கீடு ஆணையின் அடிப்படையில் அந்தந்த கல்லூரிகளுக்கு சென்று சேர்க்கையை உறுதி செய்தல் வேண்டும். ஒவ்வொரு மாணவ ரும் தங்கள் விரும்பும் பாடப்பி ரிவு மற்றும் கல்லூரி வாரியாக எத்தனை பிரிவுகளைத் தேர்வு செய்யலாம் உள்ளிட்ட விவரங் கள் மேற்கண்ட இணையதளத் தில் வெளியிடப்பட்டது

பாலிடெக்னிக் கல்லூரிகளில் சேர்க்கை பெற...

தமிழகத்தில் 55 அரசு பாலிடெக்னிக் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் சேர்க்கை பெற https://www.tnpoly.in என்ற இணையதளத்தில் மே 23-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். நேரடி இரண்டாமாண்டு சேர்க்கை மற்றும் பகுதிநேரப் பட்டயப்ப டிப்புக்கு விண்ணப்பிக்கவும், சான்றிதழ்கள் பதிவேற்றம் செய்ய வும் இணையதளத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாணவர்கள், அந்தந்த மாவட்டங்களில் உள்ள சேவை மையங் கள் மூலம் விண்ணப்பிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. இந்த மையங்களின் பட்டியல் மேற்கண்ட இணையதளத்தில் வெளியி டப்பட்டுள்ளது.

நிகழ் கல்வியாண்டில் புதிய பாடப் பிரிவுகள் தொடங்கப்பட் டுள்ளதால், அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் 570 மாணவர்கள் கூடுதலாக சேர்க்கப்படுவர்.

புதிய பாடப் பிரிவுகள்... தமிழகத்தில் நிகழ் கல்வியாண்டில்

(2025-2026) மின்னணு உற்பத்தி தொழில்நுட்பவியல், சைபர் அமைப்பு மற்றும் தகவல் பாதுகாப்பு, உணவு தொழில்நுட்பம், புதுப்பிக்கத்தக்க ஆற்றல், தீ தொழில்நுட்பம் மற்றும் பாதுகாப்பு, பொதி கட்டுதல் தொழில்நுட்பம், காலணி தொழில்நுட்பம், தோல் மற்றும் அலங்கார தொழில்நுட்பம், நில எண்ணெய் வேதிப் பொறி யியல் ஆகிய புதிய பாடப்பிரிவுகள் தொடங்கப்பட்டுள்ளன.

அரசு கலைக் கல்லூரியில் சேர நாளை முதல் விண்ணப்பிக்கலாம்

தமிழகத்தில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர்வதற்கான விண்ணப்ப பதிவு நாளை முதல் தொடக்கம் அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் சேர்வதற்கும் நாளை முதல் விண்ணப்ப பதிவு செய்யலாம்

ليست هناك تعليقات:

إرسال تعليق

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

إجمالي مرات مشاهدة الصفحة